ஞாயிறு, 20 நவம்பர், 2016

சிறாரை கைது செய்யும்போது செய்ய வேண்டியவை என்ன?


1,500 காவல் நிலையங்களில் விளம்பர பலகை வைக்க உத்தரவு

டி. செல்வகுமார்
சிறார்களை கைது செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 1500 காவல் நிலையங்களில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறார் நீதி சட்டப்படி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண் டனை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், டெல்லி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர் நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப் பட்டது. இவ் வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட தற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி யது. சிறார் நீதி சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கும், பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத் திருத் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து ஜனவரி 15ஆ-ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து இளம் சிறார்கள் கைது செய்யப்படும்போது அவர் களை காவல்துறையினர் எப்படி நடத்த வேண்டும்? எப்படி நடத்தக் கூடாது? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து காவல் நிலை யங்களிலும் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.
இதை யடுத்து 6 வகையான வண்ண போஸ் டர்களை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தயாரித் துள்ளது.
இளம் சிறார்களை கைது செய் யும்போது, அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது, விலங்கிடவோ, சங்கிலியால் பிணைக்கவோ கூடாது. காவல் நிலைய அறை அல்லது சிறையில் வைக்கக் கூடாது. கைது செய்த பிறகு அரு கில் உள்ள குழந்தை நல அதிகாரியிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை மேற்கெள்ள நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தகவலை சிறாரின் பெற்றோருக்கு தெரி வித்தல் வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற் றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறியதாவது:
நாங்கள் தயாரித்துள்ள போஸ் டர்கள் 1500 காவல் நிலையங்களிலும், 32 மாவட்ட காவல்
கண்காணிப் பாளர் அலுவலகங்களிலும், 30 மாற்று தீர்வுமுறை மய்யங் களிலும், 32 சட்ட உதவி மய்யங்களிலும், 426 குற்ற வியல் நீதிமன்றங்களிலும் விரைவில் வைக்கப்பட வுள்ளன. காவல் நிலையங் களில் மட்டும் விளம்பரப் பலகையாக வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. நீதிமன் றங்களில் போஸ்டராக ஒட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,19.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக