இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மார்ச், 2023

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தவறாம்!

 


 

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 விழுக்காடு இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம்: 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப் படையிலேயே பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரச மைப்பு சட்டமும் வழிவகை செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணி யாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 விழுக்காடு இடங்களை பெண் களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்கார வேலன், நளினி சிதம்பரம், வழக்குரைஞர் தாட்சாயினி ரெட்டி:

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 விழுக்காடும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 விழுக்காடு ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட் டில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 விழுக்காடுத்தி லேயே, பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனி யாக வழங்க முடியாது. வேலைவாய்ப் பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண் களுக்கு மெரிட் அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப் படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்ட விரோதம் என்பதால், 30 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதி பதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது கெட்ட வாய்ப்பானது தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறை களில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 விழுக்காடுபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 விழுக்காட்டுக்குள்தான் பெண் களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும் பவில்லை. 

இனிமேல்,இடஒதுக்கீடு தொடர் பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு களை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

வெள்ளி, 20 மே, 2022

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றம் அனுமதி

 

புதுடில்லி,மார்ச்17- சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அர சுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக் கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர் களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தர விட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்ன தாக வழக்கு விசாரணையின்போது, ’தமிழ்நாடு அரசின் அரசாணை புதி தல்ல. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பது தனி இடஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கை தான்  (different mode of admission).

இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமை. மேலும், இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாகும். எனவே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்’ என தமிழ்நாடு அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும், ’இது ஜாதிவாரியான ஒதுக்கீடு இல்லை. மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. இது அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியா னதே என தெரிவித்துள்ளது என’ வாதிடப்பட்டது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ’சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 2017-இல் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே அந்த நிலையே தொடர வேண்டும். இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என எதிரப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இடஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்தி பார்ப்பது என்றும், இவ் வாறு உள்ஒதுக்கீடு செய்ய முடியாத எனவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவ படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது; எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பான இடைக்கால தீர்ப்பை வழங்க வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ’தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்’ என அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழ் நாடு அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷா லிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத் தவும் அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அதேநேரம் மருத்துவ மேற்படிப் புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங் குவதை எதிர்த்த பிரதான வழக்கை, விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.