வியாழன், 29 அக்டோபர், 2015

சர்க்கரை நோய் காரணமாக வேலை வழங்க மறுக்கக் கூடாது


தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.28_  சர்க்கரை நோயை காரணம் காட்டி, வேலை வழங்க மறுத்த, தெற்கு ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை வேலை வழங்க பரிசீலிக்கும்படியும், ரயில் வே நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது.பு துக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்தவர், பாக்கிய ராஜ்; இவரது தந்தை, மணி என்பவர், ரயில்வேயில் பணியாற்றி வந்தார்; 2010 ஜனவரியில் இறந்தார். கருணை வேலை கேட்டு, பாக்கியராஜ் விண் ணப்பித்தார்.
'சர்க்கரை நோய் இருப்பதால், வேலைக்கு தகுதியில்லை' என, காரணம் கூறப் பட்டது.மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், பாக்கியராஜ், வழக்கு தொடுத்தார். கருணை வேலை வழங்க பரி சீலிக்கும்படி, தெற்கு ரயில் வேக்கு, தீர்ப்பாயம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தெற்கு ரயில்வே சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிகுமார், சொக்கலிங்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், 'சர்க்கரை நோய் காரணமாக, வேலை வழங்க மறுக்க கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு வழங்கும் படி, பாக்கியராஜ் கேட்டு வருகிறார். அதற்கு, 'சர்க் கரை நோய்' என, ஒரே காரணத்தை கூறி, நிரா கரித்து வருகின்றனர். சர்க்கரை நோய் உள்ளது என்பதற்காக, வேலை வழங்குவதை மறுக்கக் கூடாது. வேலை கேட்ட மனுதாரரை, அலைக் கழித்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்த ரவை, சரியான முறையில், ரயில்வே அதிகாரிகள் பரிசீ லிக்கவில்லை. அதனால், சட்ட ரீதியான தீர்வு காண, தீர்ப்பாயம், நீதிமன்றத்தை அணுகும்படி, தேவையில் லாமல் பாக்கியராஜ் தள்ளப்பட்டுள்ளார். எனவே, ரயில்வேயின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. 15 நாட்களுக்குள், பாக்கியராஜ்க்கு தகுந்த பணி வழங்க, ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து, நவ., 16இல் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது
-விடுதலை,28.10.15

சனி, 17 அக்டோபர், 2015

முதல் மனைவிக்கு மட்டுமே முழு உரிமை குடும்ப ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, மே 7- குடும்ப ஓய்வூதியம் பெற முதல் மனைவிக்கே முழு உரிமை உள்ளது என்று கூறி 3 ஆவது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வானிலை ஆராய்ச்சி மய்யத்தில் தொழில் முறை உதவியாளராக பணியாற்றிவர் எம். ஹேமாத்திரி. இவருக்கு திருமணமாகி நதாகுமாரி என்ற மனைவியும், 2 மகன் கள், ஒரு மகளும் உள்ளனர். இதற்கி டையில் மேலும் 2 பெண்களை ஹேமாத்திரி திருமணம் செய்துள் ளார்.
1992 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஹேமாத்திரி, 1996 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து, அவரது மூன்றாவது மனைவி எம். சூரியகுமாரி, குடும்ப ஓய்வூதியத்தில் 50 சதவீதம் தனக்கு வழங்கவேண்டும் என்று சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சூரிய குமாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மா ராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆராய்ச்சி மய் யத்தில் 1956 ஆம் ஆண்டு ஹேமாத்திரி பணியில் சேர்ந்தார். அவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு, குடும்ப ஓய்வூ தியம் படிவத்தில் மனைவி என்று நதாகுமாரி பெயரைத்தான் குறிப்பிட் டுள்ளார். சூரியகுமாரி பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
எனவே முழு குடும்ப ஓய்வூதியத் தையும் நதாகுமாரிக்கு வழங்கப்படு கிறது. மேலும், ஹேமாத்திரி தன் மீது ஒழுங்கு நடவடிக்கை அரசு எடுத்து விடக்கூடாது என்பதற்காக சூரிய குமாரியை 3 ஆவது திருமணம் செய் துள்ளதை ரகசியமாக வைத்துள்ளார். எனவே சூரியகுமாரிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று வாதம் செய்தார்.
இந்து திருமணம் சட்டத்தின்படி, இரண்டாவது திருமணம் செல்லாது என்பது எங்களது கருத்தாகும். மேலும் இந்து வாரிசு சட்டத்தின்படி, எம்.ஹேமாத்திரியின் முதல் மனைவி நாதகுமாரியும், அவரது பிள்ளை களும்தான், அனைத்து உரிமைகளை யும் கொண்ட முதல் வாரிசுகள் ஆவார்கள். எனவே மனுதாரர் சூரிய குமாரி, ஹேமாத்திரியின் மனைவியாக ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்
.விடுதலை,7.5.13