திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வயதுச் சான்றுக்கு பள்ளிச் சான்றிதல் போதுமானது! -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உரிமையியல் முறையீடு எண்: 2016ன் 1676
வயதுச் சான்றிதழ் உயர்நிலைப் பள்ளியுடையது அல்ல. ஆனால், மேல்நிலைப் பள்ளியுடையது என்ற காரணம் காட்டி இரண்டாம் பிரதிவாதி அமைப்பு நிராகரித்தது நியாயமானதா என்பதுதான்.
3. மனுதாரர் சமர்ப்பித்த சான்றளிக்கப்பட்ட நகலான சிறீஷாந்தி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஷிரட்ஷாபுர், ஹிங்கோலி கொடுத்த பள்ளி விலகல் சான்றிதழ் மேல்நிலைப் பள்ளியுடையது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்தச் சான்றிதழ் பள்ளிக்கூட முதல்வர் கொடுத்தார். மனுதாரர் அதனுடைய சான்றளிக்கப்பட்ட நகலை முன்வைத்தார்.
4. உயர்நீதிமன்றத்தின் திருப்தியளிக்காத தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
“அமைப்பு அணுகியமுறை நுணுக்கமானது என்றபோதிலும், அமைப்புக்கு தேவைப்பட்ட விதத்திலும் விளம்பரத்தில் கொடுக்கப்-பட்டுள்ள விதத்திலும் மனுதாரர் வயது அத்தாட்சி சமர்ப்பித்திருக்கலாம். விளம்-பரத்தின் நிபந்தனைகளில் சேர்க்கவோ/திருத்தவோ அல்லது மாற்றவோ அமைப்பை அறிவுறுத்துவது உசிதம் அல்ல.
5. தகுதி நிபந்தனை ஷரத்து 2(C)ன் படியான தேவையை மனுதாரர் முன்பே குறிப்பிட்டபடி அனுசரிக்கவில்லை என்ற காரணத்தால் மனு நிராகரிக்கப்படுகிறது. ஷரத்து 2(C) இவ்வாறு கூறுகிறது:
“(c) வயது விண்ணப்ப தேதியன்று (பூர்த்தியான வருடங்கள்) 21 வருடங்களுக்குக் குறையக் கூடாது. பிறந்த தேதி குறிப்பிடப்-பட்டுள்ள மெட்ரிகுலேஷன், அல்லது உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ், அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது PAN கார்டு, அல்லது பாஸ்போர்ட், அல்லது வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.’’
6. அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் வாதிடுகையில் சான்றளிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் தேவை என்று கூறினார். அவர்கள் முன்பு சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அவர்கள் முன்பு இணைக்கப்-பட்டதால் அமைப்பு விண்ணப்பத்தை நிராகரித்ததன் மூலம் நியாயமாக நடந்து கொண்டது. மேலும் சமர்ப்பிக்கையில் தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்யாத அப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அறிந்து கொண்டு அமைப்பு அப்படிப்பட்ட விண்ணப்-பங்களை நிராகரித்தது. மனுதாரர் அதே பிரச்சினையை எழுப்பியுள்ளாரா என்பது தெளிவாக இல்லை.
7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனையிலிருந்து வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் போதுமானது. இருந்தபோதிலும், தகுதி நிபந்தனையின் தேவையை உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழின் நகல் பூர்த்தி செய்கிறது என்றால் உயர்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழுக்கும் மேல்நிலைப்பள்ளியின் விலகல் சான்றிதழுக்கும் என்ன வித்தியாசம். அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் வாரியம் கொடுக்கிறது. ஆனால், மேல்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழ் பள்ளிக்கூடம் கொடுக்கிறது. பள்ளி விலகல் சான்றிதழ் என்றாலே பள்ளியை விட்டு மாணவர் போவதால் பள்ளி கொடுக்கிறது. மனுதாரர் அமைப்பின் முன்பு ‘பள்ளி விலகல் சான்றிதழ்’ தாக்கல் செய்தது இணைப்பு றி1இல் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தேவை வயதின் ஆதாரமாகும். தகுதி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்களை வயது ஆதாரத்திற்காக ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போது வயது ஆதாரத்திற்கு உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் நகலை ஏற்றுக் கொள்ளும்பொழுது சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழின் நகல் வயது ஆதாரத்திற்காக ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது இது ஒரு பொது அறிவு ஆகும். உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறு. நாங்கள் தெளிவுபடுத்தியது நிபந்தனையைத் திருத்தாது.
8. பிரதிவாதி எண் 4குக்காக ஆஜராகும் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் திரு.ஷி.வி.ஜாதவ் அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் முன்வைத்த வாதங்களை ஆதரித்து மேலும் கூறுகையில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு நிலுவையில் இருக்கும்பொழுது, 4ஆம் பிரதிவாதிக்கு சில்லறைக்கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அது இங்கு குறிப்பிடப்-பட்டுள்ள மனுதாரர் பங்கேற்க அனுமதிக்கப்-பட்ட பின்னர் அமைப்பு நடத்தும் தேர்வின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும்.
9. அதன்படி, நாங்கள் இந்த முறையீட்டை அனுமதிக்கிறோம். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம். இரண்டாம் பிரதிவாதி அமைப்பை மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடுகிறோம். அமைப்பால் தகுதி பெற்றவர்களுடன் இங்கு மனுதாரராக உள்ளவரையும் அதில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிடுகிறோம். இன்று முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாக தேவைப்படி நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
-உண்மை,16-30.6.16

சொத்துக்கள் வாங்க சட்டபடியான வழிமுறைகள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தமக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நிலம் வாங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நிலத்தைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அது தமிழ்நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது பற்றிய விவரங்கள் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நிலத்தை வாங்கும்போது ஆவணங்களை சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படையான விஷயமான புல எண் (ஷிuக்ஷீஸ்மீஹ் ழிஷீ) என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
புல எண் (Survey No)
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும், வட்டங்கள் பல உள்வட்டங்களாகவும், உள் வட்டங்கள் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எண் இடப்பட்டுள்ளது. அதற்கு புல எண் (Surve No) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் பதிவுத்துறை, வருவாய்த்துறை என இரண்டு துறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பதிவுத்துறை
ஒரு சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது கிரயப் பத்திரத்தை (Sale Dead) சார்பதிவாளர் (Sub-registrar Office) அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும்.
வருவாய்த்துறை
வருவாய்த்துறையில் நிலத்திற்கான அனைத்து விவரங்களும், அரசுப் பதிவேட்டில் பதியப் பட்டிருக்கும். அவை முறையே 1. பட்டா (Patta), 2. சிட்டா (Chitta), 3. அடங்கல் (Adangal), 4. ‘அ’ பதிவேடு ('A' Register), 5. நிலத்திற்கான வரைபடம் FMP ஆகும்.
பட்டா (Patta):
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா. பட்டாவை வைத்துத்தான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பது உறுதி செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண், உரிமையாளரின் பெயர், புல எண்ணும் மற்றும் உட்பிரிவும், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை _ போன்றவை பட்டாவில் அடங்கியிருக்கும்.
சிட்டா
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட அந்த கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு சிட்டா ஆகும். இதில் சொத்தின் உரிமையாளர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வைக் கட்டிய விவரங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
அடங்கல்
கிராமத்தில் இருக்கின்ற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது. பட்டா எண், நிலத்தின் பயன்பாடு போன்ற விவரங்கள் இருக்கும்.
‘அ’ பதிவேடு
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், ரயத்துவாரி(ர), சர்க்கார்(ச), அல்லது இனாம்(இ), நன்செய்(ந), புன்செய்(பு), மானவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு, புறம்போக்கு, பட்டா எண், மற்றும் பதிவு பெற்ற உரிமையாளரின் பெயர், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை போன்ற விவரங்கள் ‘அ’ பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும்.
நிலத்திற்கான வரைபடம்
நிலத்திற்கான வரைபடம், நிலம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
கிரையப் பத்திரம்
சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது அந்தக் கிரையப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கிரையப் பத்திரத்தில் முக்கியமான பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
எவ்வளவு அளவு
எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது.
சொத்து விவரம்
போன்றவை சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது. பட்டா எண், அது எந்த கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இதில் இருக்கும். நிலம் வீட்டுமனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பற்றிய விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும். கிரையப்பத்திர முதல் தாளின் பின்பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
பதிவு எண் மற்றும் வருடம்
சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
புகைப்படங்களில் சார்பதிவாளரின் கையொப்பம்
பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தின் விவரம்
இரண்டு சாட்சியங்களின் கையொப்பம் மற்றும் முகவரி
மொத்தம் எத்தனைப் பக்கங்கள்,
மொத்தம் எத்தனை தாள்கள்
தமிழ்நாடு அரசின் முத்திரை போன்றவை
1.7.2006ஆம் ஆண்டுதான் கிரையப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும்முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும், சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்-பட்டிருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படம் இருக்காது. 18.05.2009 முதல் இந்த முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்கு பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
(தொடரும்)
-உண்மை,16.-30.5.16
இது தவிர, ஒவ்வொரு தாளின் இரு பக்கமும், இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனைப் பக்கங்கள் கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும்போது அதன் முன்பக்கம் மட்டும்தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1லிருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும். அதனால் தாள்களின் எண்ணிக்கையும், பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக்கொண்டு இலக்கம் கொடுப்பார்கள். அதனால், மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால், பக்கங்கள் மட்டுமே 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை

நாம் வாங்கும் இடம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும்.

நாம் பத்திரம் பதிவு செய்யும்போது அதற்கு முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத் தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு  மீதித் தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் டிமான்ட் டிராப்டாக செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் அயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்திவிடலாம். அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். வங்கி வரைவோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்-பட்டிருக்கும்.

மேலும், பதிவுக் கட்டணமாக மற்றும் கனினி கட்டணம் ரூ.100ம் பதிவு செய்யப்படும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூ.1000 வரையில் பணமாகவும் அதற்கு மேல் வங்கி வரைவோலை-யாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளாடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

பின்னர், சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரிபார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் இருவர் கையொப்பமிடுவர். தற்போது இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில், வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் அனைவரையும் கணினியின் உதவியுடன் நேரடியாக புகைப்படமெடுத்து அவற்றுடன் கைரேகை பதிவினையும் நேரடியாக பதிவு  செய்வதுடன், அலுவலக கோப்பிலும் ரேகை பதிவு செய்யப்பட்டு பின்னர் முறையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது மிகவும் பாதுகாப்பானது மற்றும் வரவேற்கத்தக்கது.

பிறகு, பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இடவேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாள்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின்போது வழிகாட்டு மதிப்பிற்கு (Guide line value) 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பு (Guide line value) அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு நிலுவை ஆவணம் (Pending Document) என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (Collector Office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து வழிகாட்டு மதிப்பு (Guide Line Value) சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

வழிகாட்டு மதிப்பு (Guide Line Value) சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide Line Value விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த ஆவணம் (Document) நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

நிலம் வாங்குவதற்கு முன் நாம் நேரடியாக தரகரிடம் சென்று பத்திரங்களைப் பதிவு செய்யாமல், ஒரு வழக்குரைஞரை அணுகி, ஆவணங்களை சரிபார்த்து வாங்கினால், பிற்காலத்தில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் நாமும், நமது வாரிசுகளும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். ஸீ
-உண்மை,1.-16.6.16

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

அறிந்துகொள்ள வேண்டிய அறிவுசார் சொத்து உரிமைகள்

ஒருவர் சமூகத்தில் அந்தஸ்து உடையவரா என்பதை அவருடைய சொத்துக்கள் மட்டுமே நிர்ணயம் செய்வது இல்லை. அதுபோல சொத்துக்கள் என்று சொல்லும்போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மட்டுமே அல்லாது கண்களுக்கு புலப்படாத அறிவுசார் சொத்துக்களும் மதிப்பிடப்படுகின்றன. ஒருவர் அறிவாளியாக இருந்து, தன் சுய அறிவால் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் அதுவே அவருடைய பிரதான சொத்தாகிவிடுகிறது. அதற்காக எல்லோரும் அய்ன்ஸ்டியன், டார்வின் மற்றும் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சிறு சிறு மாற்றங்கள்கூட அறிவுசார் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படுகின்றன. அறிவு சார் சொத்துக்களை அதன் உரிமையாளர் தன்னுடைய வணிகம் மற்றும் வியாபாரத்திலும் முதலீடு செய்ய முடியும். அதனால் பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலைமை அடைய உதவும்.
அறிவுசார் சொத்து உரிமைகளை அவற்றின் தன்மைகளை வைத்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. வணிக முத்திரைகள் _Trade marks
ஒரு வாணிகத் தொழில் நிறுவனம் தனது செய்பொருள்கள் மீது பொறிப்பதும், வேறு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாததுமான ஒரு தனிவகை அடையாளம்.
2. பதிப்புரிமை _ Copyright
ஒரு புத்தகம், பாடல், கணினி நிரல் போன்றவற்றின் மூலப்படிவத்தை அச்சிடுதல், நகலாக்கம், நிகழ் கலையாக்கம் முதலியவற்றைச் செய்வதற்கு ஒருவருக்குள்ள சட்டப்படியான தனி உரிமை.
3. காப்புரிமை _patent
ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பைத் தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ தனி உரிமை.
4. வடிவமைப்பு உரிமை _ design
ஒன்று எப்படி செய்யப்பட வேண்டும். எப்படிச் செயல்படும் என்பதைக் காட்டும் வரைபடம் உருவாக்கும் திறன் மற்றும் முறைமை.
5. புவியியல் அறிகுறிகள் _ Geographical Indication
6. தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் _ Protection of plant varieties farmers right
7. குறைக்கடத்தி ஒருங்கிணைந்த சுற்றுக்கள் பக்க வடிவமைப்பு உரிமைகள் _ Semiconductor integrated circuits layout design
நோக்கம் scop: அறிவுசார் சொத்து உரிமைகள் உலக அளவில் பெரும் மாற்றத்தையும், முக்கியத்துவத்தையும் அடைந்து வருகின்றன. நவீனமயமான தற்கால சூழ்நிலையில் அறிவுசார் சொத்துக்களின் மதிப்பு கூடிக்கொண்டே வருவதால் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிவிட்டது. அறிவுசார் சொத்து உரிமை என்பது மனிதனின் அறிவு, விஞ்ஞானம் மற்றும் திறமைக்கான அங்கீகாரம் ஆகும். நம்முடைய படைப்புக்களே நம்முடைய அறிவை வெளிப்படுத்துகின்றன. அறிவுசார் சொத்துக்களை நாம் பதிவு (Register) செய்வதன் மூலம் அதனை பயன்படுத்து-வதற்கான முழு மற்றும் முதன்மை உரிமையை பெறுகின்றோம். நம்முடைய படைப்புகளை பதிவு செய்வது நம்மை பிறரிலிருந்து வித்தியாசப்படுத்தி அதற்கு உண்டான அதிகாரத்தையும் கொடுக்கிறது.
வணிக முத்திரைகள் (Trade mark-
Tm Brand Name (நிறுவன அடையாளம்), Code - (குறியீடு), Logo - (சின்னம்) போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொருள் Meaning
வணிக முத்திரை என்பது எல்லோராலும் ஙிக்ஷீணீஸீபீ ழிணீனீமீ என்று பிரபலமாக அறியப்படும். ஒருவர் தன்னுடைய பொருள் மட்டும் சேவையை இதன் மூலம் பதிவு செய்து ஏகபோகமாக உபயோகிக்கும் உரிமையை அடைய முடியும்.
உதாரணமாக, Reliance, tata motors, Saravana store, Nilgries,Aircel, Airtel,Sony,Samsung போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய Brand name அய் பதிவு செய்து பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
Trade mark Register செய்வதற்கான நோக்கம் என்னவென்றால், தனித்துவமான பெயரை பெறுவதற்காகவும் அதே போன்ற ஒரு brand name அய் பயன்படுத்தி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் போட்டி நிறுவனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் ஆகும்.Trade mark என்பது தயாரிப்பு. தயாரிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் என இரு வகைகளில் பதியப்படுகிறது.
Trade mark act 1999-இதைப் பற்றிய விவரங்கள் மற்றும் பின்பற்றவேண்டிய நடைமுறைப் படுத்தப்பட்டு Public search என்ற முறையில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட TM பதியப்-பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏதும் வராமல் தடுக்க இது உதவுகிறது. அதற்கான வடிவங்களில் ஆவணங்களை மற்றும் கட்டணம் சேர்த்து Register-ல் சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பித்ததிலிருந்து TM/SM என்ற குறியீட்டினை பயன்படுத்தலாம். பதிவு செய்து சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் ஸி என்பதை உபயோகிக்கலாம். TM Journal வெளியிடப்படுகிறது. மற்ற சொத்துக்களை போலவே அறிவுசார் சொத்துக்களையும் பரிமாற்றம் மற்-றும் பரிவர்த்தனை செய்ய முடியும்.
நீண்ட காலத்திற்கு புதுப்பித்தல்:
சான்றிதழ் 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
தீர்மானம்:
ஜிவி தனித்துவமுடையதாகவும், பிறருடன் ஒப்பிட்டால் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பது அவசியம்.
-உண்மை,16-30.4.16