சனி, 13 பிப்ரவரி, 2016

திருமணமான பெண்களும் வாரிசு வேலை கோரலாம்!


பிலாஸ்பூர், டிச.7 அரசு துறையில், வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும், கருணை அடிப்படை வேலையை, திருமணமான பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரில், நீர்வளத் துறையில் பணியாற்றிய, ஜெய்தேவ் பிரதான் என்பவர், 2011இல் மரணம் அடைந் தார். இதையடுத்து, அவர் மகள், சரோஜினி பாய், 'அரசு துறையில் பணியாற்றி, இறந்தோரின் வாரிசுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப் படும் வேலையை எனக்கு வழங்க வேண்டும்' என, நீர்வளத் துறைக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், 'வாரிசு என்றாலும், திருமணமான பெண்களுக்கு, வேலை வழங்க சட்டத்தில் இடமில்லை' என, தெரிவித்து, அவரின் கோரிக்கையை சத்தீஸ்கர் அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, சரோஜினி பாய், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி, சஞ்சய் கே.அகர்வால் முன்,   விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின், வாரிசுக்கு கருணை அடிப்படை பணி கொள் கையே தவறு என்று கூறிய நீதிபதி, 45 நாட்களுக்குள், சரோஜினிக்கு, வேலை வழங்க உத்தரவிட்டார்.
தீர்ப்பின் விவரம்:சத்தீஸ்கர் அரசின், கருணை அடிப்படையிலான, வாரி சுக்கு வேலை கொள்கை பாரபட்சமாக உள்ளது. திருமணமான பெண்ணுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுக்கும் அரசின் கொள்கை, பிற்போக்குத் தனமானது. இது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை வழங்க வகை செய்யும், அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத் திற்கே முரணானது. ஆகவே, சத் தீஸ்கர் அரசு, உடனடியாக, அரசு பணிக்கான வாரிசு கொள்கையை திருத்த வேண்டும். அந்தப் பெண் ணுக்கு வேலை வழங்க வேண்டும்.

-விடுதலை,7.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக