செவ்வாய், 7 நவம்பர், 2023

ஜாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலாச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது (பதவி உயர்வு வழக்கு ஆணை)



  

உயர் நீதிமன்றம் உத்தரவு

29

மதுரை, நவ. 4- நெல்லை யைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாட்டில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற் றேன். என்னுடன் தேர் வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பின ராக இருப்பதால் எனக் குப் பணி நியமன ஆணை வழங்க மறுத்துவிட்டனர். பணி நியமனம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டது. அதன்பிறகும் பணி வழங்காததால் மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கிலும் எனக் குப் பணி வழங்க உத்தர விட்டதால் 2013இல் மணிமுத்தாறு பட்டாலி யன் காவலராக நியமிக் கப்பட்டேன். 

பின்னர் எனக்கு 2007-2008 ஆண்டில் தேர்வானவர்களுடன் சேர்த்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு கோரி மனு அளித்தேன். என் கோரிக்கையை நிராகரித்து கமாண்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி மூப்பு, பதவி உயர்வு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண் டும்" என்று கூறப்பட்டி ருந்தது.

இம்மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசா ரித்தார். அரசு வழக்குரை ஞர் வாதிடுகையில், "பணி மூப்பு என்பது நிரந்தர பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு தான் வழங் கப்படும். முன்தேதியிட்டு பணி மூப்பு கோர முடியாது" என்றார். 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் அதிகாரி கள் சிறுபான்மையினரை சமூக விரோதிகளாக சித் தரித்து அவர்களின் உரி மைகள் மற்றும் வளர்ச் சியை தடுக்கும் உள்நோக் கத்துடன் செயல்படுவ தாக மனுதாரர் வழக்கு ரைஞர் கூறியதை புறக் கணிக்க முடியாது. மனு தாரரை போன்றவர்க ளின் வேதனையை போக் குவது நீதிமன்றத்தின் கடமை. மனிதர்களாக பிறக்கும் யாவருக்கும் தான் எந்த வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர் மானிக்கும் உரிமை உண்டு. பெற்றோர்கள், பிறக்கும் இடம், இனம், நிறம், மொழி, ஜாதியை தேர்வு செய்து பிறக்க முடியாது. 

இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு களை வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் அனைவருக்கும் சமூகத் திற்காக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். ஜாதி, இனம், நிறம், பிறக்கும் இடம், கலாச்சார அடையாளங்கள் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. நாட்டின் நல னுக்கு எதிரானவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்ப வர்கள் என மோசமான நடத்தை கொண்டவர் களை மட்டுமே தடுக்க வேண்டும். அப்படி எந்த தடையும் இல்லாத நிலை யில் ஒருவருக்கு பணி மற்றும் பதவி உயர்வு வழங்குவதை தடுக்கக் கூடாது. 

பொறுப்பான குடி மகன்களாக இருப்பவர்க ளுக்கு தடை விதிக்காமல், தேசப்பணியில் தங்களின் பங்களிப்பை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்த 21ஆவது நூற்றாண்டில் அனைவரின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். குறிப்பாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். இல்லாவிட் டால் மனுதாரர்களை போன்றவர்கள் பாதிக்கப் படுவர்.

மனுதாரர் 5 ஆண்டு தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அதி காரிகள் தான் காரணம். எனவே, மனுதாரருக்கு 2007-2008 ஆண்டிலி ருந்து பணி மூப்பு வழங்க மறுத்து பிறப்பித்த உத்த ரவு ரத்து செய்யப்படுகி றது. 

மனுதாரருக்கு 2007--2008 ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுடன் பணிமூப்பு வழங்க வேண்டும். பணி மூப்பை 4 வாரத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள் ளது.

புதன், 25 அக்டோபர், 2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  

இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த வழக்கை இன்று   (22.8.2023) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்  என்றும்,  ஆகமங்களைப் பயின்ற யார் வேண்டுமா னாலும்  அர்ச்சகர் ஆகலாம்  என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

 

 4

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில், இந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ரவிந்த் குமார் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலான சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வை குறுகியது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம் உட்பொதிக்கப்பட்ட பிரிவு 7A-, சுயமரியாதைத் திருமண முறையை அடிப்படையாகக் கொண் டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப் பின்பற்றாமல் அல்லது ஒரு மதத் தலைவரால் நிச்சயிக்கப்படாமல், தங்கள் நண்பர் கள் அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து, திருமணம் செய்து கொள்ளலாம். இது அய்ம்ப தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த நடைமுறைக்கு எதிராக அமைந்தது.

"வழக்குரைஞர்கள் செய்துவைக்கும் திரு மணங்கள் செல்லாது; என்றும் சுயமரியாதைத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்) இரகசி யமாக நடத்தப்பட முடியாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யும் கடந்த 2023 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 2023 ஏப்ரலில் திருப்பூரில், வழக்குரைஞர்கள் முன்னிலையில் தனது தோழியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் பெற் றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு ரைஞர்கள் முன், அவர்களின் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது" என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், "மனுதாரருக்கு சுயமரியாதை திரு மணம் நடந்ததாக சான்றளித்த வழக்குரைஞர்க ளிடம் பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்; "இது போன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான் றிதழ் வழங்கியிருந்தால் அவர்களுக்கும் நோட் டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, இளவரசன் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து திங்களன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7கி-இன் (தமிழ்நாட்டில் பொருந்தும்) படி, சுயமரி யாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கிலும் (2001) "7 ஷிசிசி 487' மூலம் பிரிவு 7கி' உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, இதன் அடிப்படை யிலான சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவையில்லை, என்று முக்கியமான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "ஒவ்வொரு திருமணத்திற்கும் பொது நிச்சய தார்த்தம் அல்லது பொது அறிவிப்பு தேவை என்ற சென்னை உயர் நீதிமன்றம் பார்வை, அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாக வும்; திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், குடும்ப எதிர்ப்பு அல்லது தங்களின் பாதுகாப்பு குறித்த பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பொது அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்; அதையும் மீறி, இது போன்ற சந்தர்ப்பங்களில், பொது அறிவிப்பைச் செயல் படுத்துவது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

வயது வந்த இருவர்- சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்கு குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. அதனை நீதிமன்றங்கள் பார்க்காமல் விடுவது, அரசியல மைப்பின் 21-ஆவது பிரிவு வழங்கும்-வாழ்க் கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வழக்குரைஞர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தின் அதி காரிகளாக, ஆலோசகராக, வழக்குரைஞராகச் செயல்படும்போது, திருமணங்களை முன்வந்து நடத்திவைக்கக் கூடாது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், உறவினர்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் திருமணங்களில் பங்கு வகிக்க உரிமை உண்டு" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்'' -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!

பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!

1

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகப்படுத்தினார் -  இடையில் கூடத் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது; காரணம், பெரியார் ஒரு விஞ்ஞானம் - அதுவே இறுதியில் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங் களுக்குப் பொது அறிவிப்புத் தேவையில்லை.''

‘‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர் களின் அலுவலகத்தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது  (சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு). தற்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்'' என்று மிக அருமையான, முற் போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய வாழ்க்கை இணையேற்பு விழா - எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ள லாம். ஆண் - பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, நட்பாளர்களாக வாழ்விணையர்கள், ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான் அமைதிப் புரட்சி பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்த சுயமரியாதைத் திருமண முறை.

இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் (உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்) தந்தை பெரியாரே சாட்சியம் கூறிய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை - பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். (தெய்வானை ஆச்சி க்ஷிs சிதம்பரம் வழக்கு).

அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கானத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்களாகத் தொடர்ந்து நடந்தே வந்தன!

1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு 

சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா

1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமை யிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7Aஎன்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது!

அதன்பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அத்திருத்தம் செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்; அதனையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றே அருமையான தீர்ப்பினை வழங்கினர்!

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது - சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு - வெளிச்சம்!

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தலாம் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

2

திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலை யில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன் னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்'' என்ற மிக முற் போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அர சமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.

‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்'' என்று இந்த நீதிபதிகள் பழைமையின் - சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர்!

பெரியார் அன்று சொன்னார் - 

உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது!

இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், அவருக்கே உரிய பாணியில், ‘‘வயது வந்த ஒரு ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி முடிவு செய்யும்போது, அதில் மூன்றாவது நபர் குறுக்கிடுவது அதிகப்பிரசங்கித்தனம் - ஆணவம் கலந்த அகம்பாவ எஜமானத்தனம்'' என்று கூறி, சுயமரியாதைச் சூடு போட்டார்!

இன்று உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக இதனைக் கூறும் அளவுக்கு பெரியார் கொள்கை வெற்றி பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறது!

‘‘எனது கொள்கை ஒருபோதும் தோல்வி அடையாது; வேண்டுமானால், வெற்றிகள் காலதாமதம் ஆகலாம்'' என்றார் தந்தை பெரியார்.

அது எவ்வளவு சரியான முன்னோட்ட முத்தான பிரகடனம் பார்த்தீர்களா? அதுபோலவே,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - நிறைவேற்றம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை 55 ஆண்டுகளான நிலையில், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இரண்டு தீர்ப்புகள் - கடந்த வாரத்தில் தொடர்ந்து, ‘‘ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லாது'', ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் - தகுதியுடன் நியமனம் செய்யப்படுவது தொடருவதற்கு எத்தடையும் இல்லை'' என்று கூறி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களது ‘திராவிட மாடல்' ஆட்சியில், அரை நூற்றாண்டாக சட்டப் போராட்டத்திலிருந்த ஜாதி - தீண்டாமை ஒழிப் புக்கான இந்த  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமன வெற்றி!

பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம் - 

அதுவே இறுதியில் வெல்லும்!

தந்தை பெரியாரின் வெற்றி!

திராவிட இயக்கத்தின் வெற்றி!

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின்

முழு வெற்றியாக இப்போது ஜொலிக்கிறதே!

‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

பேரெதிர்ப்பால் பெருங்கொள்கை (திராவிடம்) தோற்பதுண்டோ?'

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - புரிகிறதா?

இதனை ஊர் அறிகிறது!

உலகம் அறிந்து மகிழ்கிறது, வரவேற்கிறது!

எனவேதான், சனாதனம் அலறுகிறது;

ஆரியம் பதறுகிறது!

பெரியார் - திராவிடர் கொள்கை என்றும் வெல்லும்!

காரணம், இது ஒரு ‘‘விஞ்ஞானம் - மெய்ஞானம்!''

உண்மை அறிவு - அனுபவம் கலந்த வெற்றி!

அறிவியல் - உண்மை அறிவும் சொத்து!

புரிந்துகொள்வீர்! பகிர்ந்து கொள்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

குறைந்த அளவு ஓய்ஊதியம் அமல்!

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு குறைந்த அளவு ஓய்ஊதியம் அமல்!
-விடுதலை நாளேடு, 30.9.14

சனி, 2 செப்டம்பர், 2023

தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூபாய் 2000 அபராதம்


9

சென்னை, செப். 2
- வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழில் பெயர்ப் பலகை வைக்காத தற்காக 50 ரூபாய் அபராதமாக வசூலிக் கப்படு கிறது என்றும் அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், அபரா தத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகையை மாற்றாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தர விட்டனர்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங் கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

வன்முறையை தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 22 திருவிழாவை நடத்துவதில் யார் பெரிய ஆள்? என்று வன்முறைக்  களமாக கோவில்கள் பயன்படுத்தப்படுவதால், வன்முறையைத் தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு என்ற 92 வயது முதியவர், தன் மகன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சீர்காழி நகரில் உள்ள ருத்ரா மகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி உற்சவத் திருவிழா 23.7.2023 முதல்  1.8.2023 வரை நடைபெற உள்ளது.

 இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் விதமாக காவல்துறை பாதுகாப்பு கேட்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதியே மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்க வில்லை. எனவே, பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஏ.தாமோதரன், "இந்த கோவிலில் திருவிழா நடத்துவ தில் 2 குழுக்களுக்கு இடையே பிரச்சினை உள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் சமாதான கூட்டம் நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை" என்றார்.

நீதிபதி உத்தரவு

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:- இதுபோன்ற வழக்குகளை தினமும் இந்த நீதிமன்றம் விசாரிக்கிறது. கோவில் விழாவை யார் நடத்துவது? என்று ஒவ்வொரு கோவிலிலும் இரு குழுக்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இறைவனை வழிபடத்தான் கோவில் உள்ளது. ஆனால், கோவில் திருவிழாக்கள் என்பது யார் ஏரியாவில் பெரிய ஆள்? என்பதை நிரூபிக்கும் வன்முறைக் களமாக உள்ளன. இதுபோன்ற கோவில் திருவிழா வில் பக்தி என்பதற்கு இடமே இல்லை. கோவில் என்பது இதுபோல வன் முறைக் களமாக இருந்தால், கோவில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது. இதுபோன்ற வன் முறையைத் தவிர்க்க கோவில்களையே மூடிவிடலாம். இதுபோன்ற வழக்குகளை இந்த நீதிமன்றம் தினமும் விசாரிப்பதே வேதனையாக உள்ளது. பக்தியே இல்லாத இதுபோன்ற கோவில் திருவிழா பிரச்சினையை தீர்ப்பதற்கு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வீண்தான். அவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கின்றனர். காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு இதைவிட முக்கியமான பணிகள் பல உள்ளன. எனவே, இதுபோன்ற கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்க தேவை இல்லை. கோவில் திருவிழாவை, அகங்காரத்தை முன்னிறுத்தாமல், அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பை அந்தக் குழுக்களுக்கே விட்டு விடுகிறேன். ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச் சினை ஏற்பட்டால், அதற்கு காரணமான நபர்கள் மீது சம்பந்தப்பட்ட காவலர்கள் சட்டப்படி நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். கோவில் திருவிழாவையும் மேற்கொண்டு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி விடவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

 இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


சனி, 5 ஆகஸ்ட், 2023

பாராட்டத்தக்க தீர்ப்பு கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழையக் கூடாதா?


- உயர்நீதிமன்றம் சரியான கேள்வி

சென்னை, ஆக 5  கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக் குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட் டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெண், தங்கமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,"ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்த கோயிலில் ஆடி திருவிழா வரும் 9 மற்றும் 10ஆ-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் நான் கணவரை இழந்தவள் என்பதால் என்னை கோயிலுக்குள் வரக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இத னால் நான் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.எனவே, எனக்கும் என்னுடைய மகனுக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று (4.8.2023) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இது தவறானது. மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது நியாயமற்றது. எனவே அவரை கோயில் திரு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

திங்கள், 26 ஜூன், 2023

உயிரற்ற உடலோடு உடலுறவு கொள்வது பரிகாரமாம் - கடுமையான தண்டனைக்கு சட்டமியற்ற உயர்நீதிமன்றம் அறிவுரை - பாணன்




18
எரியும் சிதையிலிருந்து சிறுமி பிணத்தை இழுத்துப்போட்டு பாலியல் வன்கொடுமை

நெக்ரோபிலியா

ரங்கராஜு வாஜபேயி ஸ்s கருநாடகா மாநிலம் வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், “நெக்ரோஃபிலியா” என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான ஈர்ப்பு என்று குறிப்பிட்டது. 

இந்தியாவில் நெக்ரோபிலியா 

ஒரு குற்றமா?

இன்றுவரை, அய்.பி.சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றங்களின் கீழ் “நெக்ரோபிலியா” ஒரு குறிப்பிட்ட குற்றமாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நீதிமன்றம் 297 இன் கீழ் சட்டம் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டது. மனித சடலத்திற்கு அவமதிப்பு என்ற 297ஆவது பிரிவில் சட்டம் கொண்டு வரலாம் எனக் கூறியது இந்தியாவில் பிணங்களோடு உடலுறவு கொள்வது சடங்காகவும் பரிகாரமாகவும் கருத்தப்படுகிறது. சாஸ்திரங்களிலும் உள்ளதாக சாமியார்கள் கூறுவார்கள்

17

இடுகாட்டில் இறந்த பெண்ணின் உடலோடு இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை

இறந்துபோன வயதுக்கு வராத சிறுமிகளின் உடலை சிதையிலிருந்து இழுத்துப் போட்டு பாலியல் ரீதியில் அந்த உடலோடு தொடர்பு கொள்ளும் கொடூரம் ஒன்றும் உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் நடக்கிறது. 

2015ஆம் ஆண்டு குடும்பத்தகராற்றில் தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலோடு சில சாமியார்களும் அவர்களோடு வந்தவர்களும் பாலியல் உறவு கொண்ட செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதே காசியாபாத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் இதை மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்கள் இவ்வாறு செய்தனர் என்று செய்திவந்தது. 

அரியானா மாநிலத்தில் சில நபர்கள் இறந்த வயதுக்கு வராத சிறுமியின் உடலை எரியும் சிதையிலிருந்து இழுத்து வெளியே போட்டு பாலியல் ரீதியான உறவு கொண்டனர் என்ற செய்தி 02.05.2023 அன்று வெளிவந்தது. ஊர்மக்கள் அவ்வாறு செய்த 5 பேரைப்பிடித்து காவல்துறையிடம் கொடுத்தனர். 

ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று பார்த்தால்... 

திருமணமாகாத, குழந்தைப்பேறு இல்லாத, மற்றும் அதிக நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக இருக்க சாஸ்திரங்களில் இறந்துபோன கர்ப்பிணிப்பெண், வயதுக்கு வராத சிறுமி, திருமணமாகாத பெண் போன்றோர்கள் இறந்த பிறகு அவர்களின் உடலோடு உறவு கொண்டால் திருமணம் நடக்கும், குழந்தை பேறு உண்டாகும், நீண்ட நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக வாழலாம் என்று சாமியார்கள் கூறுவதை வைத்து சுடுகாடுகளில் சாமியார்களோடு பெரும் செல்வந்தர்கள் சுற்றித்திரிவார்கள். அவர்களுக்கு இவ்வாறு இறந்துபோன பெண்களின் விவரம் கிடைத்தால், அந்த இடத்திற்குச் சென்று இடுகாட்டை பராமரிக்கும் நபர்களுக்கு பெரும் தொகை கொடுத்து இவ்வாறு செய்வது அடிக்கடி நடக்கும் ஒரு கொடூரம்.. அவ்வப்போது இது செய்தியாக வெளிவருகிறது. 

16

 காசியாபாத்தில் கல்லறையில் இருந்த கர்ப்பவதி உடலோடு பாலியல் வல்லுறவு

தமிழ்நாட்டில் கூட சமீபத்தில் ஒரு அகோரி சாமியார் பிணத்தின் மீது அமர்ந்து பூஜைகள் செய்தார் என்ற செய்தி வெளியானது. இவ்வாறு நடக்கும் நிகழ்வு தமிழ்நாட்டிலும் அடிக்கடி செய்தியாக வருகிறது. மக்கள் கூட்டம் இருக்கும்போதே பிணத்தின் மீதமர்ந்து பூஜை செய்பவர்கள் தனிமையில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது பெரும் கேள்வியாகும்.

நெக்ரோபிலியாவை 

தடை செய்த நாடுகள்?

நெக்ரோபிலியாவைத் தண்டிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விதியும் இந்தியாவில் இல்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சட்டம், 2003, பிரிவு 70 இன் கீழ் நெக்ரோபிலியா, குற்றம் என சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இது தவிர, கனடா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவும் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலியாவைத் தடை செய்கின்றன.

கருநாடக நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது என்ன?

அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் விதிகளை திருத்தியமைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரம் புதிய விதியை இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. அதில் நெக்ரோபிலியா குற்றத்திற்கு அபராதத்துடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கலாம் என பரிந்துரைத்தது.

கருநாடக உயர் நீதிமன்றத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

மே 30 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது. இந்திய தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை பெறாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியது.

மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது, அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் திருத்தம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியது. மேலும் இது ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கான நேரம் என்றும் கூறியது.

கருநாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு என்ன?

ஜூன் 25, 2015 அன்று, 21 வயதான பெண் தனது கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜு அந்த பெண்ணைப் பிடித்து இழுந்து வாயை மூடி, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது அய்பிசி பிரிவு 302 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிறகு அவர் அந்த பெண்ணை “பாலியல் வன்கொடுமை” செய்தார்.

காவல்துறையினர் ரங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அய்பிசி பிரிவு 302 மற்றும் 376 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாட்சியங்களை ஆராய்ந்த செஷன்ஸ் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை கொலை செய்து பின்னர் அப்பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்தார் என்பது சந்கேத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆனதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங் காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜு கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

அய்பிசியின் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. உயிரற்ற உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.

“குற்றம் சாட்டப்பட்டவர் உயிரற்ற உடலில் உடலுறவு கொண்டார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், இது பிரிவுகள் 375 (பாலியல் வன் கொடுமை) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் குற்றமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவா கிறது. இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப் படாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் தண்டனைக் குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், “இறந்த உடலில் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா தவிர வேறில்லை” என்று தெளிவுபடுத்தியது.

திங்கள், 29 மே, 2023

தனிநபர்களும் சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க முடியும் உச்சநீதிமன்றம் கருத்து

  

புதுடில்லி,மே12- தனிநபர்கூட குழந் தையை தத்தெடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என தன்பாலின திரு மணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரும் மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல் வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக் கள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மனுக்கள் மீது 9ஆவது நாளாக   10.5.2023 அன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷ் வர்யா பாட்டி வாதிடும் போது, “ஆண்-பெண் (வெவ் வேறு பாலின) தம் பதிக்கு இயற்கையாக பிறந்த குழந்தைகள் நலனை பாது காக்கும் வகையில் நமது சட்டங்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன.

இது வெவ்வேறு பாலின தம் பதியையும் தன்பாலின தம்பதி யையும் சமமாக கருத முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. குழந்தை களின் நலனே முதன்மை யானது என நமது சட்டத்தின் பல்வேறு நிலைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந் தையை தத்தெடுப்பது ஒருவரின் அடிப் படை உரிமை அல்ல என பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது" என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறும்போது, “தனி நபர்கூட குழந்தையை தத்தெ டுக்க நமது சட்டம் அனுமதி அளிக் கிறது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன்பாலின ஈர்ப்பா ளராக இருந்தால் கூட குழந்தையை தத்தெடுக்கலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கூட குழந்தையை தத்தெ டுக்க லாம். குழந்தை பெற தகுதி உள்ளவர்கள் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய மல்ல" என்றார்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கடவுளும் ஆக்கிரமிப்புக் குற்றவாளியே! உயர்நீதிமன்றத்தின் வளையாத – வரவேற்கத்தக்க தீர்ப்பு!

 

தலையங்கம் : கடவுளும் ஆக்கிரமிப்புக் குற்றவாளியே!

ஏப்ரல் 1-15,2022

உயர்நீதிமன்றத்தின் வளையாத – வரவேற்கத்தக்க தீர்ப்பு!

‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது.

சாலையை ஆக்கிரமித்து கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள் இடத்துக்குச் செல்லும் பாதை தடுக்கப்படுவதாகவும், நாமக்கல் முன்சிஃப் நீதிமன் றத்தில், பாப்பாயி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பாப்பாயிக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவில் நிருவாக அதிகாரி மேல் முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் பிறப்பித்த உத்தரவு:

கோவில் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை, நாமக்கல் நகராட்சி அதிகாரி ஆதரித்துள்ளார். கடவுளுக்குப் பயப்படுவது என்பதை, இந்த வழக்கைக் கையாண்ட அதிகாரி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

பொதுச் சாலையை, நெடுஞ்சாலையைப் பயன்படுத்த, பொது மக்களுக்கு உரிமை உள்ளது. சாலையின் அருகில் உள்ள சொத்தின் உரிமையாளருக்கும், அந்தச் சாலையை அணுக உரிமை உள்ளது.

எனவே, பொதுச்சாலையை யார் ஆக்கிரமித்தாலும், அது கோவில் என்றாலும்கூட, அந்த சட்ட விரோதச் செயலைத் தடுக்க வேண்டும்.

சாலையில் கட்டுமானம் எழுப்பி, அந்தச் சாலையை பொது மக்கள் பயன்படுத்துவதைத் தடுத்தால், உடனடியாக அதை அகற்றவேண்டும்.

கோவில் பெயரில் அல்லது ஒரு சிலையை வைத்து, பொது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்பது, தனிப்பட்ட சிலரின் மனப்பான்மையாக உள்ளது. யார், எந்தப் பெயரில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்பதை, நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை.

கடவுளே,பொது இடத்தை ஆக்கிரமிப்புச் செய்தாலும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றங்கள் உத்தரவிடும்.

ஏனென்றால், பொதுநலன், சட்ட விதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, கோவில் கட்டி, நீதிமன்றங் களை ஏமாற்ற முடியாது.

நமக்குப் போதிய எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளன; பொது இடத்தை ஆக்கிரமித்து, புதிதாகக் கோவில்கள் கட்டும்படி, எந்தக் கடவுளும் கூறவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவு இருந்தும், கோவில் தரப்பில் கட்டுமானம் தொடரப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பார்க்கும்போது, சாலையை அணுக முடியாத வகையில் தடுக்கப்பட்டது தெரிகிறது. கோவிலின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. நாமக்கல் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இரண்டு மாதங்களில் கட்டுமானம் முழு வதையும் அகற்றவேண்டும். தவறினால், நகராட்சி அகற்றவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

இப்படி ஓர் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களை _ அவரது துணிவும், தெளிவுமிக்க இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்காக பலதரப்பினரும் __ பாதிக்கப்பட்டோர் தவிர _ பாராட்டியே தீருவர்; தீரவேண்டும்.

அரசமைப்புச் சட்டமும், அதனையொட்டி உள்ள நடைமுறைப்படுத்தப்படும் சட்ட நியதிகளும் இன்னார், இனியர் என்ற விருப்பு வெறுப்புக்கு இடமின்றி செயலாக்கப்பட வேண்டும்.

மாண்பமை நீதிபதிகள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, விருப்பு, வெறுப்பு, அச்சம், சலுகை என்ற எந்தக் கண்ணோட்டத்திற்கும் இடம்தராமல் எமது கடமையை ஆற்றுவோம் என்று எடுக்கும் உறுதி மொழிக்கேற்ப இத்தீர்ப்பு உண்மையாய் அமைந்துள்ளது என்பதால், இது ஓர் எடுத்துக்காட்டான தீர்ப்பு ஆகும்!

கடவுளைக் காட்டி நாட்டில் எத்தனையோ சமூகக் கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டுள்ளன.

திராவிடர் கழகமும், ‘விடுதலை’ நாளேடும் கடுமையாகக் கண்டித்தது!

தியாகராயர் நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் பேருந்து நிலையம் அருகில் இரவோடு இரவாக ஒரு பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்து நட்டு வைத்துவிட்டு, அது திடீரென்று பூமியைப் பிளந்து, தானே அங்கே வந்தது என்று கூறி, பூஜை, புனஸ்காரம், உண்டியல் வசூல், பாமர பக்தர்கள் திரண்ட நிலை, எல்லாம் சில நாள்களில் வந்து, ஒரு பிள்ளையார் கோவிலே பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துக் கட்டு மளவுக்குத் திட்டமிட்டு, தனி நபர் வணிக நிலையம்போல ஆகி, பக்தர்கள் படையெடுப்பு நாளும் பெருகியது!

திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும், ‘விடுதலை’ நாளேடும் கடுமையாகக் கண்டித்தது.

இந்த லட்சணத்தில் இந்தப் பிள்ளையார் சிலைபற்றி, காஞ்சி சங்கராச்சாரியார் _ மறைந்த சந்திரசேகரேந்திர சரசுவதி _ ‘அது சுயம்பு; தானே கிளம்பும்’ என்று ஒரு வியாக்யானமும் சொன்னார்.

தந்தை பெரியார் அங்கே சென்று கூட்டம் போட அறிவித்தார்.

நட்டு வைத்த பிள்ளையார் என்ற  குட்டு வெளிப்பட்டது!

நல்வாய்ப்பாக அப்போது முதலமைச்சராகக் கலைஞர் அவர்கள் இருந்தார்; உடனே அதுபற்றி காவல் துறை விசாரணையை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் முடுக்கிவிட்டார்; அந்த உண்டியலை இந்து அறநிலையத் துறையுடன் இணைத்து வருவாய் தனியார் கொள்ளையாவதைத் தடுத்தார். தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அப்புறப்படுத்தினார்; காரணம், செல்வராஜ் என்ற தலைமைக் காவலர் ஒருவர் 88 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து இரவோடு இரவாக நட்ட தகவல் கிடைத்துவிட்டது! (அப்போதைய ‘குமுதம்’ வார ஏட்டிலும் இச்செய்தி வெளிவந்துள்ளது).

இப்படி பலவிடங்களில் தனியார் ஆக்கிரமித்து, அதில் பாதுகாப்பிற்காக ஒரு கோவிலைக் கட்டி, மற்ற பகுதிகளை ஆக்கிரமிப்புகளுக்குப் பாதுகாப்பாக ஆக்குவது வழமை!

நியாயங்கள் காயங்கள் ஆகாமல்  தடுக்கப்பட  முடியும்!

இதுபற்றி மிகத் தெளிவாகக் கூறி, பொது வெளியை _ சாலைகளை தனியார் ஆக்ரமித்து, அனுபவிக்க _ பக்திப் போர்வை _ கடவுளைக் கருவியாக்கி, அப்பாவி மக்களைச் சுரண்டி, அறியாமை இருளில் தள்ளி, பக்தி வேஷ பகல் கொள்ளை முதலீடாக ஆக்காமல் தடுத்த முற்போக்கான துணிவுமிக்க தீர்ப்பு தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், ‘கடவுளே நேரில் வந்தாலும், அவர் சட்டப்படி குற்றவாளி _ ஆக்கிரமிப்பாளர் என்றுதான் சட்டம் தயங்காமல் கூறும்’ என்று எழுதியுள்ளது, அவரது அறிவு நாணயத்தையும், துணிவையும், சட்டத்தை ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நடத்தும் பாங்கினையும் உலகிற்குப் பறைசாற்றுவதால், இத்தகைய நீதிபதிகளின் எண்ணிக்கை பெருகினால்தான், நியாயங்கள் காயங்கள் ஆகாமல் தடுக்கப்பட முடியும்.

தமிழ்நாட்டில் 77,450 கோவில்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம் 14.9.2010 அன்று தீர்ப்பு வழங்கியது.

சம்பந்தப்பட்ட மாநில அரசின் தலைமைச் செயலாளர் நேரில் வந்து உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று ஆணையிட்டு 12 ஆண்டுகள் ஆன பிறகும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்கள் அகற்றப்படாதது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

– கி.வீரமணி,

ஆசிரியர்

புதன், 22 மார்ச், 2023

தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு

 

 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,டிச.16-  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏமாநில இயக்குநர் ஆர்.சுதன்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2017 மகப்பேறு நலச்சட்ட திருத்தத்தின் அடிப் படையில் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்காக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகளின் பிரசவத்துக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்அதில்பிரசவ தேதிக்கு முன் 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்கருச்சிதைவு ஏற்பட்டால் 6 வாரங்கள் வரை விடுப்பு அளிக்கலாம்எதிர்பாரா சேவை அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க குறைந்தபட்சம் ஓராண்டு கால பணிக்காலத்தை (விடுமுறை நாட்கள் உட்படமுடித்திருக்க வேண்டும்பெண் ஊழியர்சட்டப்பூர்வமாக 3 மாதத்துக்குள்ளான குழந்தையை தத்தெடுப்பதாக இருந்தால்அந்தக் குழந்தை தத்து கொடுக்கப்படும் நாளில் இருந்து 12 வாரம் மகப்பேறு விடுப்பு பெற தகுதியுடையவர் ஆவார்ஒருவேளை வீட்டில் இருந்து பணிபுரியக் கூடிய பெண்ஊழியராக இருந்தால் முதலில் அவருக்கு உரிய மகப்பேறு விடுப்புவழங்கிவிட்டுவிடுமுறைக்காலம் முடிந்ததும் அவரை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தலாம்மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.