திங்கள், 30 அக்டோபர், 2017

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் பார்வையில்...




சமீப காலங்களில் பரஸ்பர புரித லின் பேரில் ஒருவருக்கு ஒருவர் விட் டுக் கொடுத்து வாழ வேண்டிய கண வன் மனைவி, விவாகரத்து என்ற மாயச் சூழலில் சிக்கி சிதைந்து விடு கின்றனர்.

இந்து திருமணச் சட்டப்பிரிவு 13 விவாகரத்து பெறுவதற்கென்று பல் வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையின் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். உதாரணத்திற்கு ராஜா - மீனா (கற் பனை பெயர்கள்) திருமணமான ஆரம் பத்தில் இருந்தே எலியும் பூனையுமாக வாழ்ந்து வருகின்றனர். ராஜா தன் மனைவியை கடுமையான முறையில் கொடுமைப்படுத்துகின்றார். மீனா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திடும் அள விற்கு மனதளவில் கொடுமைப்படுத் துகிறார். நன்றாக கவனியுங்கள். அவன் செய்யும் கொடுமைகள் எல்லாம் மீனாவை மனதளவில்தான் தாக்கு கின்றன. சரியான உணவுகூட தன் மனைவிக்கு கொடுப்பதில்லை. ஆனால் அவன் வெளி உலகத்தில் ஏழைக ளுக்கு உதவிடும் ஒரு சமூக சிந்தனை உள்ளவனாக ஒரு பசுத்தோல் போர்த் திய புலியாக விளங்குகின்றான். அவ னைச் சார்ந்த நண்பர்களோ, உறவினர் களோ ராஜா தன் மனைவியை கொடு மைப்படுத்துகிறான் என்பதை நிச்சயமாக நம்பிட மாட்டார்கள். இந்த நிலையில் மீனா தன் கணவனுக்கு எதிராக விவா கரத்து வழக்கு தொடர்கிறார்.

நீதிமன்றத்தில் அதற்குரிய காரணங் களை கணவன் செய்யும் குற்றங்களை நிரூபித்திட வேண்டும் அல்லவா? பல் வேறு விசாரணைகளுக்கு பிறகு மீனாவால் தன் கணவனுக்கு எதிரான குற்றச்சாட்டு களை நிரூபிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்து திருமணச்சட்டம் பிரிவு 13 விதிகளின்படி விவாகரத்து மனு நிராகரிக் கப்பட்டால் மீனா தன் கணவனுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். சட்டத்தின் பார்வையில் அந்த தீர்ப்பு நியாயமானதே. ஆனால் நடைமுறையில் மறுபடியும் மீனா சரியாக உணவுகூட அளித்திடாத அந்த இரக்கமற்ற மனித மிருகத்துடன் வாழ்ந்திட முடியுமா. இந்த பிரச்சினைக் குத்தான் உச்சநீதிமன்றம் RAJIV.R. HIRENATH VS. UMA (2000) 10 SCC 303 என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப் பளித்துள்ளது. அதாவது இந்து திருமணச் சட்டம் 13 பிரிவின்படி விவாகரத்து கிடைக்கபெறாத கணவன் - மனைவி - இந்து திருமணச் சட்டம் 13தீ பிரிவின்படி பரஸ்பரசம் மதத்தின் பேரில் விவாகரத் துக்கு மனுச் செய்து விவாகரத்து பெற்றி டலாம். இதனால் நடைமுறைச் சிக்கல் கள் குழப்பங்கள் இல்லாத வகையில் இருவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என உச் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

- தகவல்: ‘லாயர்ஸ் லைன்’
-விடுதலை ஞாயிறு மலர், 28.10.17

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வழக்குரைஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்


சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.20 வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது வழக்குத் தொடர்ந்த அந்த பெண், ‘வழக்குரைஞர் அலுவலகத்தில் தனது விருப்பப்படி தான் அந்த நபருடன் திருமணம் நடந்தது’ என முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார்.

இதனால் அப்பெண் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அப்பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் இந்து பாரம்பரியத்தின் அடிப்படையில் 2 நபர்களின் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு சிலராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. 

அந்த வேறு சிலரில் வழக்குரைஞர்களும் அடக்கம். அப்படியிருக்கும்போது வழக்குரைஞர் அலுவலகத்தில் வழக்குரைஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் செல்லாது என மனுதாரர் கோர முடியாது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் வழக்குரைஞர் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்கள் முன்னிலையில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது.

அதனடிப்படையில் பின்னர் அந்த திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருமணம் நடந்ததாக வழக்குரைஞர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு கொடுத்த கடிதமும் சட்டப்படி செல்லும்’’ என உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு,20.10.17