வியாழன், 29 ஜூன், 2017

சட்டம் - முக்கிய குறிப்புகள்...

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

-முகநூல்

புதன், 7 ஜூன், 2017

ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் வாரிசுரிமை இருக்கிறதா?சொத்துக்களைப் பிரிக்கும்போதும் பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். பல்வேறு காலகட்டங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) உருவாக்கப்பட்டு ஆண்களுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டு பெண்ணுக்கு சொத்துக்களில் உரிய வகையில் பங்கு கிடைக்காத நிலையே இருந்தது. இறுதியாக ஒரு சரித்திரப் புரட்சியாக 50 வருடங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005இல் புதிய திருத்தங்களுடன் அமலுக்கு வந்தது.

விவசாய நிலங்கள்.

இந்துக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்கள்.

பெற்றோர்கள் வாழும் வீடு

விதவைகளுக்கான உரிமைகள்.

ஆகியவைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதை புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.

திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் (2005) எந்த வகையில் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது. அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்களிலும் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பது ஒரு அற்புதமான சட்டத்திருத்தம். முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 4(2) விதியை ரத்து செய்து புதிய வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கு முழு உரிமையை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சட்டவிதிகள் அமைந்து இருந்தன. அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கு விவசாய நிலத்தில் பங்கு கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம் உருவானது. கேரளாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின்படி கணவன், மனைவிகளை கொடுமைப்படுத்துவது 48 சதவீதமாக இருந்தது 18 சதவிகிதம் குறைந்துள்ளது.

விவசாய நிலங்கள் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் என பல பாகங்களாகப் பிரித்தால் அது விவசாயத் தொழிலைப் பாதிக்கும். கூட்டுறவுப் பண்ணை என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என ஒரு சிலர் இந்தச் சட்டத்தைக் குறை கூறுகின்றனர். இது தவறான வாதம். ஆண் வாரிசுகளுக்கு, விவசாய நிலங்களைப் பிரிக்கும்பொழுதுகூடத்தான் நிலங்களின் அளவு குறைத்திட வாய்ப்புண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்துகளில் பெண்களுக்குரிய உரிமை

கூட்டுக் குடும்பச் சொத்தில் ஒரு குடும்பத் தலைவரின் மகன்களுக்கு முழு உரிமை இருந்து வந்தது. பெண்களுக்கும் அதிலும் திருமணமான பெண்களுக்கும் குடும்பச் சொத்தில்பங்கு உண்டு என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நிச்சயமாக நல்லதொரு தன்னம்பிக்கையை பெண்களுக்கு கொடுத்திடும். அதாவது முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மகனுக்கு நேரடியாக வாரிசுரிமையில் ஒரு பங்கு கிடைத்து வந்தது. ஆனால், பெண்களுக்கும் தற்போது வாரிசு உரிமை கிடைக்கிறது.

இது நிச்சயம் அவளுக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை அளித்திடும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு குடும்பச் சொத்தை சம பங்காக ஆணுக்கு இணையாக பெண் வாரிசுக்கும் கொடுத்திட வேண்டும் என்பது சரியான சட்ட விதியாகும். நிச்சயம் கள்ளிப் பால் கொடுத்து பெண் சிசுவைக் கொல்லும் செயலும் அரிதாகிவிடும். ஆக ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டிலும் சொத்தில் பங்கு உண்டு. கணவன் வகையில் வரும் சொத்துக்கும் உரிமை உண்டு.

குடும்பச் சொத்தான பரம்பரை வீட்டில் பெண்ணுக்குரிய பங்கு

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 23இல் குறிப்பிட்ட சட்ட விதிகளை ரத்து செய்து குடும்பத்தின் சொத்தான ஒரு பொது வீட்டில் ஆண்மகனைப் போலப் பெண் மகளுக்கும் முழு உரிமை உண்டு என திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் வழி வகுத்துள்ளது. திருமணம் ஆகாமல் இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும் சம்பந்தப்பட்ட வீட்டில் பெண்கள் வாழ்ந்திட முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் உரிமை உண்டு.

ஒரு சிலர் இதனால் இறந்துவிட்ட குடும்பத் தலைவரின் விதவை மனைவி, அவளின் தாயாருக்கு வீட்டில் உள்ள சொத்தின் பல மடங்கு குறைந்துவிடும் என வாதாடுகின்றனர். ஆனால், இந்தப் புதிய விதியின்படி ஒரு வீட்டில் பிறந்து, வளர்ந்து ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தன் சகோதரர் அனுமதித்தால்தான் அந்த வீட்டிற்கு வந்து வாழ வேண்டிய தர்மசங்கடம் இப்போது இல்லை. உரிமையுடன் தன் பிறந்த வீட்டிற்கு இந்த சட்டத்தினால் வந்து வாழ முடியும் அல்லவா?

பெண்ணுக்கு வாரிசுரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது திடீரென்று அமல்படுத்தப்படவில்லை. நெடுங்கால போராட்டத்திற்குப் பின் முதலில் 2004ஆம் ஆண்டு சட்டக் கமிஷன் 174ஆவது பரிந்துரைகள், ராஜ்ய சபையில் சமர்ப்பிக்கப்-பட்டு நீண்ட விவாதங்களும், கூச்சல்களும், ஒத்திவைப்புகளும் நடந்தும் ஒரு முடிவு பிறக்கவில்லை. மக்கள் இயக்கங்கள் பலவித-மாகப் போராடியது. பல்வேறு மாதர் சங்கங்கள், மனித உரிமைக் கழகம், மாண்புமிகு முன்னாள் நீதியரசர்கள், நாட்டின் பல்வேறு சிறந்த வழக்குரைஞர்கள் ஆகியோர்களின் தொடர் போராட்டத்தால் ஒரு வழியாக 2005 இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

 -உண்மை,1-15.17