சனி, 15 ஆகஸ்ட், 2015

ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்


வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்
சென்னை, ஆக.9 சென்னை 13-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நியமித் துல்லா என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ஹரிகரராஜன் என்பவர் தன் வீட்டில் வாடகைக்கு இருப்பதா கவும், கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் முதல் 2008-ஆம் ஆண்டு ஜனவரி வரை வேண்டுமென்றே வாடகை கட்டணத்தை தராமல் இருந்து வருகிறார். எனவே, ஹரிகரராஜனை என் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தர விடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு, ஹரிகரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறுவது தவறு என்றும், வீட்டு வாடகை பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பியதை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.சசிகுமார் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
மனுதாரர் வீட்டில் எதிர்மனுதாரர் ஹரிகர ராஜன் வாடகைக்கு இருந்து வருகிறார். இதற் காக மாதம் ரூ.2,500 வாடகை கட்டணமும், 10 மாத வாடகைக் கட்டணமான ரூ.25 ஆயிரத்தை முன் தொகையாகவும் வீட்டின் உரிமையாளருக்கு, அவர் கொடுத்து வந்துள்ளார். தற்போது, 11 மாத வாடகை தரவில்லை என்று வீட்டின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால், 9 மாத வாடகை கொடுத்துள்ள தற்கான ஆதாரங்களை ஹரிகரராஜன் தாக்கல் செய்துள்ளார். 2 மாதம் வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்ப தால், வீட்டின் உரிமையா ளருக்கு அவர் 2 மாத வாடகை கொடுக்க வேண்டும்.
அதே நேரம், 1996-ஆம் ஆண்டு கே.நரசிம்மராவ் - டி.எஸ்.நசிமூதீன் அகமது ஆகியோரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வீட்டை வாடகைக்கு கொடுக்கும் உரிமை யாளர்கள், வாடகைதாரர் களிடம் இருந்து ஒரு மாத வாடகை கட்டணத்தைத் தான் முன்பணமாக பெற வேண்டும். ஒருவேளை அதிக தொகை வசூலித்து இருந்தால், அந்த கூடுதல் தொகையை திருப்பிக் கொடுக்கவேண்டும். அல்லது வாடகை கட்டணத்தில் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மனு தாரர் நியமியத்துல்லா, ரூ.25 ஆயிரம், அதாவது 10 மாத வாடகைத் தொகையை முன்பணமாக வாங்கி யுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரூ.2,500-அய் முன்பணமாக வைத்துக் கொண்டாலும், மனுதார ரிடம் கூடுதலாக ரூ.22,500 உள்ளது. அதில், 2 மாத வாடகை கட்டணத்தை, (ரூ.5 ஆயிரத்தை) கழித் தாலும் ரூ.17,500 வீட்டின் உரிமையாளரிடம் உள்ளது. எனவே, வீட்டின் உரிமை யாளரிடம் இவ்வளவு பெரிய  தொகை இருக்கும் போது, ஹரிகரராஜன் வேண்டுமென்றே வாடகை தொகையை கொடுக்காமல் உள்ளார் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அவரை வீட்டை விட்டு வெளி யேற்றக்கோரி தாக்கல் செய் யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
விடுதலை,9.8.15