புதன், 25 ஜூலை, 2018

தனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம்சென்னை, ஜூலை 25  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்புகளை அங்கீ கரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளை தொலைதூரக் கல்வி வழியாகவோ அல்லது தனியாகவோ எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தகுதியான படிப்புதான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ராஜி உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில பாடத் திட்டத்தின் படி 10 அல்லது பிளஸ் 2 தேர்வுகளை எங்களில் சிலர் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளோம். ஒரு சிலர் 10-ஆம் வகுப்பை முடித்த பிறகு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் உள்ள என்அய்ஓஎஸ்’ எனும் தேசிய திறந்தவெளி பள்ளியில் 2 ஆண்டு படிப்பை முடித்துள்ளோம். பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக் கழகம் மூலமாக 3 ஆண்டு சட்டப்படிப் பையும் படித்து முடித்துள்ளோம்.

நாங்கள் 10 அல்லது பிளஸ் 2 தேர்வை தனியாக எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால், எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மறுக்கிறது. எனவே, எங்களை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதே போன்று 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக் கழகங்கள் வழியாகப் பெற்றிருக்க வேண் டும். அந்த படிப்புகளை அவர்கள் தொலை தூரக்கல்வி வழியாகவோ அல்லது தனியாக எழுதியோ தேர்ச்சி பெற்றிருந் தாலும் அவை வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யத் தகுதியான படிப்புதான்.

10, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை உரிய வழிகளில் இல்லாமல் திறந்தவெளி பல் கலைக்கழகங்கள் மூலமாகவோ நேரடி யாகவோ படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாகப் பதிவு செய்ய முடியாது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தனியாகத் தேர்வு எழுதி தற்போது சட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ள, மனுதாரர்களான இந்த மாணவர்களை வழக்குரைஞர்களாக 3 மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு, 25.7.18

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆக்கிரமிப்புக் கோவில்களை அகற்றுக!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜூலை 23 ஆக்கிரமிப்புகள் கோவில்களாகஇருந்தாலும்அகற்றப் பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னைமாநகராட்சியில் சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழகஅரசு2வாரத்தில்தகுந்தநட வடிக்கைஎடுக்கவேண்டும்என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னைநுங்கம்பாக்கத்தில்மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக் கிரமித்து, ஆலய வழிபாடு நடத்தப் படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு கடந்த 17.7.2018 அன்று  விசாரணைக்கு வந்தது.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகே யன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் ஆஜராகி, விதிமீறல் கட்டடங்களை இடிக்க எடுக் கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

விதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை. எனவே, இதுவரை அமல்படுத்தப்பட்ட, அமல் படுத்தப்படாத உத்தரவுகள் எத்தனை என்று 2 அதிகாரிகளும் அடுத்த விசார ணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கான சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து மாநகராட்சிஆணையர்அறிக்கைதாக் கல் செய்துள்ளார். அதைப் பரிசீலித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 1998ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை, சென்னையின் விரி வாக்கத்துக்கு ஏற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்படவில்லை. அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னையில் அதற்கேற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை.ஒவ்வொருஅடுக்குமாடிகுடி யிருப்பிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட் டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சிஎம்டிஏ, கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல் கட்டடங்களை ஆரம்பத்திலேயே தடுக்க ஏன் தனியாக சிறப்பு படைகளை உருவாக்கக்கூடாது? இதுதொடர்பாக 2 அதிகாரிகளும் பதில் அளிக்கவேண்டும்.

விதிமீறல் கட்டடங்களுக்கு எவ்வாறு மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி தெரிவிக்கவேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைக்கு எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.

கோவில்களை அகற்றுக!


வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நுங்கம்பாக்கத் தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு இடையூறாக வழிபாடு நடத்துவதை ஏற்க முடியாது. அந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறையினரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3 ஆ-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

- விடுதலை நாளேடு, 23.7.18

திங்கள், 23 ஜூலை, 2018

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அசாம் மாநில சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கவுகாத்தி, ஜூலை 17 வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் பேய், பிசாசு, பில்லி, சூனியத்தில் மக்களுக்கு உள்ள மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. சூனியம் வைத்து பலர் கொல்லப்படு வதாகவும், சூனியம் வைத்து கொன் றதாக சில மந்திரவாதிகளை உள்ளூர் மக்கள் அடித்தும், எரித்துக் கொல்வதும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வந் தது.

202 வழக்குகள்


இதன் விளைவாக கடந்த 2001--2017- ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 114 பெண்களும், 79 ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம் பவங்கள் தொடர்பாக 202 வழக்குகளை அம்மாநில காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பேய், பிசாசு, பில்லி, சூனியம் தொடர்பாக  மந்திரவாதிகளின் செயல்களுக்கும், இது சம்பந்தமான கொலைகளுக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா 13.-8-.2015 அன்று அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இணைய தளத்தில்...


இந்த மசோதா ஆளுநர்மூலம் குடி யரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த 13.-6-.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலை வர் மாளிகையின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 17.7.18

வெள்ளி, 20 ஜூலை, 2018

தாழ்த்தப்பட்டவர் என்பதால் பூசை செய்ய தடை கூடாது பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்குக! உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்புடெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் உத்தர காண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறும்போது  உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கோவில்கள் மற்றும் ‘‘புனிதத்'' தலங்களில், தாழ்த்தப்பட்ட வகுப் பினர்களுக்காக, உயர்வகுப்பு பூசாரிகள், பூஜைகள், சடங்குகள் செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு வகுப்பினரும் எந்த தடையும் இன்றி, உத்தரகாண்ட்டில் இருக்கும் கோவில்களுக்குச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், பயிற்சி பெற்ற எந்த ஒரு நபரும் ஒரு கோவிலின் அர்ச்சகராக, பூசாரியாக செயல்படுவதற்கு அவருடைய வகுப்பு ஒரு தடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள் -- உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் லோக் பல் சிங்.

பார்ப்பனர்கள்

எதிர்ப்பு

ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர் விற்காக புரட்சிகர சிந்தனையை விதைத்த சந்யாசியான ரவிதாஸ் என்பவரின் கோவில் அரித்துவாரில் உள்ள பிரபல சிவன் கோவிலுக்கு அருகே உள்ளது. ரவிதாசை வழிபட வரும் உயர்ஜாதியல்லாதவர்கள் சிவன் கோவிலின் படிகளில் ஏறித்தான் ரவிதாஸ் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சிவன்கோவில் பார்ப்பனர்களும், சில உயர் ஜாதியினரும் நீண்ட ஆண்டுகளாகவேஎதிர்ப்பு தெரிவித்துவந்தனர். படிகளை சேதப்படுத்து வதும், ரவிதாஸ் கோவிலின் கதவுகளை சேதப்படுத்தி அதை திறக்காத வண்ணம் செய்துவந்தனர். இந்த விவகாரம் நீதிமன் றத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று ரவிதாஸ் கோவிலுக்குச் செல் லும் படிகட்டுகளை அகற்றிவிட்டு, புதிய பாதை சிவன்கோவிலுக்கு மட்டும் செல்லுமாறு அமைத்தனர். இதனால் ரவி தாஸ் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. இதனை அடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேரில் சென்று பார்வையிட்ட நீதிமன்றம்

நீதிமன்றம் இந்த வழக்கை விசா ரணை செய்தது. மேலும், நேரில் சென்று மாற்றப்பட்ட படிகட்டுகளைப் பார்வை யிட்டது. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாதை மாற்றப்பட்டது மட்டுமின்றி ரவிதாஸ் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கங்கைக்குச் சென்று வழிபடும் பாதையும் தடுக்கப்பட்டிருந்தது. உத்தரகாண்டில் புதி தாக அமைந்த பாஜக அரசு கங்கையில் குளித்துவிட்டு ராமதாஸ் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்க முனைந்து இந்த பாதகச் செயலைச் செய்திருந்தது.

அரசமைப்புச் சட்டம்

17 இன்படி குற்றமே!

இதை நேரில் கண்ட நீதிமன்ற பிரதி நிதிகள் நீதிபதிகள் முன்பு சான்றுகளுடன் எடுத்துரைத்தனர். மேலும் இது அரசமைப்புச் சட்டம் பிரிவு 17அய் கடுமையாக மீறும் செயலாகும்.

கோவிலுக்கு பெரும்பான்மையான மக்கள் வரும்போது குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தடுப்பது நீதியாகாது. அரசமைப்புச் சட்டம் 17- இன்படி கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் அனைவருக்கும் பொதுவானது.

இது குறித்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ‘‘கங்கையில் பெரிய அளவில் பல மதத்தினர், வகுப்பினர் குளிக்கின்றனர். அதேபோல் அனைத்துக் கோவிலிலும் அனைவரும் வந்துவழிபடுகின்றனர். இதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் கோவிலின் பாதை யைப் பயன்படுத்தி அவர்கள் வழிபடும் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று படிகட்டு களை உடைப்பதும், பாதையை மாற்றுவதும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட படிகட்டுகளை மீண்டும் சரி செய்து தடை செய்யப்பட்ட வகுப்பினர் அங்கு வருவதை உறுதி செய்யவேண்டும். அவர்களை யாரும் தடை செய்வதை அனுமதிக்கக் கூடாது,  மேலும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வகுப் பினர் கங்கையில் இறங்குவதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் அகற்றவேண்டும். அரித்துவார் என்பது அனைவருக்குமான ஒரு நகரமாகும். இங்குள்ள தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்குமானது.குறிப்பிட்ட வகுப்பினர் நுழைவதை மறைமுகமாக நிறுத்த கட்டப்பட்ட, அனைத்துத் தடைகளையும் உடனடியாக அகற்றவேண்டும்.

சட்டத்தின்முன்

அனைவரும் சமமே!

பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை, மேலும் பிறர் பூசை செய்வதை தடுக்கவும் கூடாது, எந்த சமூகத்தினர் ஆனாலும் மரியாதை தந்தே ஆகவேண்டும், அவர்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். நமது அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15(2) 17 19, 21,25,29(2),38, 46, மற்றும் 51-கி  போன்றவைகள் சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால் நன்கு பயிற்சி எடுக்கப்பட்ட, பூஜை முறைகளை நன்கு கற்ற யார் வேண்டுமானாலும் பூசாரி களாக பூஜைகள் செய்ய எந்த கோவிலிலும் அனுமதிக்கப்படவேண்டும், இதை உச்சநீதி மன்றமும் உறுதிபடுத்தியுள்ளது, சட்டத்தின் முன்பு கோவில் மற்றும் பூசாரிகளும் ஒன்று தான்.

மேலும் நீண்ட நாட்களாக பராமரிக் கப்படாத ரவிதாஸ் கோவிலை மாநில அரசு முன்னின்று பழுதுகளை சரிபார்த்து கோவிலை நன்கு பராமரிக்க தன்னுடைய மேற்பார்வையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் குழுவில் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியை ஊட கங்கள் மற்றும் பிரதிகள் மூலம் அனை வருக்கும் தெரிவிக்கப்படவேண்டும், கோவி லிலும் தெளிவாக எழுத்துமூலம் எழுதி ஒட்டப்படவேண்டும்'' என்று தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 13.7.18

ஞாயிறு, 15 ஜூலை, 2018

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


புதுடில்லி, ஜூலை 15 அரசுப் பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) சமூகம் - பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு (கிரீமி லேயர்) கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
இதேபோல், எஸ்சி, எஸ்டி பிரிவிலும் கிரீமிலேயர் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, நீதிபதி எம். நாகராஜ் கடந்த 2006-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். அவர், எஸ்சி, எஸ்டி பிரிவினரை கிரீமிலேயர் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், எஸ்.சி., எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குபோது, அவர்களின் பொரு ளாதார நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளால், ரயில்வே துறையில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர்; எனவே, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும்‘’ என்று வாதிட்டார்.
அப்போது, “இந்த விவகாரம் தொடர் பாக நீதிபதி எம்.நாகராஜ் பிறப்பித்த உத்த ரவுக்கு தடை விதிக்க முடியாது. ஏற்கெனவே ஒரு அரசியல் சாசன அமர்வு பல்வேறு வழக்குகளை விசாரித்து வருவதால், இந்த மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்தான் விசாரிக்க முடியும்‘’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்தும், ஆதரித்தும் வெவ்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மும்பை - பஞ்சாப், அரியாணா உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. ஒருபுறம் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறைக்கு ஆதரவாகவும், மறுபுறம் எதிராகவும் உத்தரவுகள் வெளியாகின.
இதற்கு நடுவே டில்லி உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக் கீடு அளிக்கும் முறையை ரத்து செய்தது.
இத்தகைய முரண்பட்ட தீர்ப்புகளால் அந்த வகுப்பினருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 5-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில், சட்ட விதி களுக்குட்பட்டு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
- விடுதலை நாளேடு, 15.07.18

புதன், 4 ஜூலை, 2018

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெற பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு


பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று (29.6.2018) விதி எண் 110இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதில், பத்திரிகையாளர் பெற்று வரும் ஓய்வூதியத்தை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் கடந்த ஆண்டு  அரசு உயர்த்தி வழங்கியது. மேற்படி ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு, 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்கள் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபாய் நிதி யுதவி, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 30.6.18

ஞாயிறு, 1 ஜூலை, 2018

மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பது கணவரின் கடமை

டில்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 1- 'மனைவியை பிரிந்து வாழும் கணவர், மனைவி மற்றும் குழந்தையின் பராமரிப்புக்காக, பணம் தருவது அவசியம்' என, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டில்லியை சேர்ந்த நபர் மீது, அவரது மனைவி அளித்த புகாரின் படி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கும், தன் மகனுக்குமான பராமரிப்பு செலவுக்காக, பிரதி மாதம், ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுத் தரும் படி, அந்த பெண், கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு, ஒவ்வொரு மாதமும், 15 ஆயிரம் ரூபாய் அளிக்க, கணவருக்கு உத்தரவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த நபர், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சஞ்ஜீவ் குமார், அவரது கோரிக்கையை நிராகரித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பது, கணவரின் கடமை. இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர், மாதம், 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அவரது மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. எனவே, அவரது பராமரிப்புக்காக, மாதம், 10 ஆயிரம் ரூபாயும், குழந்தையின் பராமரிப்புக்கு, மாதம், 5,000 ரூபாயும், கணவன் தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

-  விடுதலை நாளேடு, 1.7.18