ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தாய் பெயரை 'இனிசியலாக' பயன்படுத்த உரிமை உண்டு: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 புதுடில்லி,ஆக.7-'தாயின் பெயரையும் 'இனிசியலாகபயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளதுஎனடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுதாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்குடில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  (6.8.2021) விசாரணைக்கு வந்ததுநீதிபதி ரேகா பாலி விசாரித்தார்மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டதாவது:

என் கட்சிக்காரரின் மகள் மைனர்ஆனால்அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிசியலாக மாற்றப்பட்டுள்ளதுஇதுஎதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி உத்தரவிட்டதாவது:குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிசியலாக பயன்படுத்த உரிமை உள்ளதுதேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி அம்மனுவை தள்ளுபடி செய்தார்.