வியாழன், 22 செப்டம்பர், 2022

அரசுக் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்காக வயது வரம்பு தளர்வு! அர்ச்சக மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி

சனி, 2 ஜூலை, 2022

300 சட்ட நூல்கள்: தமிழாக்கம் செய்து சாதனை

மதம் மாறுவது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது! -டில்லி உயர்நீதிமன்றம்


புதுடில்லி, ஜூன் 4 மதம் மாறு வது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடை யில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த வழக் குரைஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரி மைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி கள் விசாரித்தனர். 

அப்போது மனுவை பரி சீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற் கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் சமூக வலைதளங் களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என் றும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின் பற்ற அரசமைப்புச் சட்டத்தில் உரிளமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரி வான விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து எந்தவித அறிவிக்கையையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள் ளனர்.

வெள்ளி, 20 மே, 2022

'பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திடுக;' ஒன்றிய அரசினை வலியுறுத்தி முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்

 

சென்னை,ஏப்.11- மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும்பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது,

சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) கேள்வி நேரம் முடிந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்க்கண்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மான்யக் குழு, 2022-2023ஆம்  கல்வி ஆண்டு முதல் அம்மான்யக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை(National Testing Agency-NDA) நடத்தும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-CUET)   மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில்   (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சமமான வாய்ப்பினை வழங்கிடாது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும் பாலும், விளிம்பு நிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எனவே, NCERT  பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள், மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இப்பேரவை கருதுகிறது.

பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும்

இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி கல்வி முறைகளை ஓரங்கட்டி பள்ளிகளில் நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் அய்யமில்லை.

மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மய்யங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்

இவ்வாறு ஒரு நுழைவுத்தேர்வினை செயல்முறைக்குக் கொண்டு வருவதால் பள்ளிக்கல்வியோடு பயிற்சி மய்யங் களையும் நாடும் இளைய மாணவர் சமுதாயத்தினர் பெரு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்பு களில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை கேட்டுக்கொள்ளும் முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்தை வரவேற்று, தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சின்னதுரை (சி.பி.எம்.), இராமச்சந்திரன் (சி.பி.அய்.), சிந்தனைச் செல்வன் (வி.சி.க.), கோ.க.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங் கிரசு),  கே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோர் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றுப்பேசினர்.

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புசெய்தனர்.

இதையடுத்து, இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், பேரவையின் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மா னம் விடப்பட்டு ஒரு மனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம்

 

 சென்னை, ஜன.20 கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்  கூறியிருந் தனர்.  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசார்ணை முடிவடைந்த நிலையில்  நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.  அப்போது, கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என்றும் 50% இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக  கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும் அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையிலும் பங்கேற்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

சென்னைஜன.13 சட்டப்பூர்வ தடையில்லாத பட்சத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது

அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடுகடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது

உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பு களில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு சட்டப் பூர்வ தடையில்லாத பட்சத்தில் இந்த கல்வி ஆண்டு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளதுசிறப்பு நிபுணத்துவ மருத்துவப் மேற் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங் கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடுகடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப் பட்டது. 2021-- 2022ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவரான டாக்டர் டி.சுரேஷ் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 2020 --2021ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காததை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், 2020--2021 ஆம் கல்வி யாண்டு செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப் பட்டதாகவும்அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணிஇந்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைஎந்த ஒரு சட்ட தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றம் அனுமதி

 

புதுடில்லி,மார்ச்17- சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அர சுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக் கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர் களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தர விட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்ன தாக வழக்கு விசாரணையின்போது, ’தமிழ்நாடு அரசின் அரசாணை புதி தல்ல. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பது தனி இடஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கை தான்  (different mode of admission).

இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமை. மேலும், இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாகும். எனவே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்’ என தமிழ்நாடு அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும், ’இது ஜாதிவாரியான ஒதுக்கீடு இல்லை. மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. இது அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியா னதே என தெரிவித்துள்ளது என’ வாதிடப்பட்டது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ’சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 2017-இல் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே அந்த நிலையே தொடர வேண்டும். இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என எதிரப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இடஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்தி பார்ப்பது என்றும், இவ் வாறு உள்ஒதுக்கீடு செய்ய முடியாத எனவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவ படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது; எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பான இடைக்கால தீர்ப்பை வழங்க வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ’தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்’ என அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழ் நாடு அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷா லிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத் தவும் அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அதேநேரம் மருத்துவ மேற்படிப் புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங் குவதை எதிர்த்த பிரதான வழக்கை, விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சனி, 19 பிப்ரவரி, 2022

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

உரிமம் பெறாத மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


சென்னை, செப்.11 சென்னையில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் தனியார் சார்பில் ஏராளமான மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை 26 மகளிர் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளன.

முறையாக உரிமம் பெறாமல் இயங்கும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விதிப்படி, தனியார் மகளிர் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதன்படி, விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்று மற்றும் பார்ம் டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகளைத் தவிர). விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு / விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் தங்குவதற்கு சராசரியாக 120 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து, எந்த உரிமமும் பெறாமல் மகளிர் விடுதியாக மாற்றி, போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 24 ஜனவரி, 2022

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சமாக உயர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முத்தமிழறிஞர் கலைஞர் திருத்தியது செல்லும்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!