வியாழன், 4 மே, 2017

இஎஸ்ஐ புதிய விதிமுறை: ஜன.1 முதல் அமல்பதிவு செய்த நேரம்:2016-12-30 21:39:41


நெல்லை: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர் சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத் திட்டம் புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக இஎஸ்ஐ நெல்லை மண்டல துணை இயக்குனர் அருள்ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.15 ஆயிரம் ஆக இருந்த ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக வருகிற ஜன.1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அடிப்படை மருத்துவம் மற்றும் வேலையின்போது ஏற்படும் விபத்திற்கான மருத்துவம் மற்றும் இதர பலன்களை பெற முடியும்.

மேலும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள பழைய மற்றும் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் 2017 மார்ச் 31ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் ெதரிவிக்கும் தேதி முதல் அவர்களது தொழிற்சாலை மற்றும் நிறுவனத்திற்கு இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப்படும். 

இச்சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் மார்ச்சுக்குள் வரும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதன்பிறகு ஆய்வின்போது சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தது கண்டறியப்படால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இஎஸ்ஐ திட்டத்தில் பல்வேறு பணப்பலன் திட்டங்களும் உள்ளன. தற்காலிக நிரந்தர ஊனம் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை, இறந்தோர் உதவித்தொகை திட்டம் உள்ளிட்டவை உள்ளன.
 இவ்வாறு அவர் கூறினார்.

-தினகரன்நாளேடு