புதன், 12 செப்டம்பர், 2018

கணவரின் சம்பள விவரங்களை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

கணவரின் சம்பள விவரங்களை அறிந்து கொள்வதற்கு மனைவிக்கு முழு உரிமை இருப்பதாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவரும், இவரது கணவர் பவன் குமார் ஜெயினும் பிரிந்து வாழ்கின்றனர். கணவர் தரும் வாழ்வூதியத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கீழமை நீதிமன்றத் தில் சுனிதா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் பிஎஸ்என்எல் நிறு வனத்தில் அதிக ஊதியம் பெறும் அதிகாரி. ஆனால் பராமரிப்புத்தொகையாக ரூ.7 ஆயிரம் மட்டுமே தருகிறார். எனவே, வாழ் வூதியத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று சுனிதா கோரி யிருந்தார். இந்த வழக்கில், பவன்குமார் தமது சம்பள ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைப் பரிசீலித்த நீதிமன்றம், சுனிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கணவரின் உண்மையான சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சுனிதா கோரினார். இதன்பேரில், பவன்குமாரின் சம் பள விவரங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இதன் தொடர்ச்சியாக, ம.பி. உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் சுனிதா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.கே. சேத் மற்றும் நந்திதா துபே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

கணவரின் சம்பள விவரங்களை அறிந்து கொள்வதற்கு மனைவிக்கு முழு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் மனைவியை மூன்றாம் நபராக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த வழக்கில் சுனிதா வின் கணவரின் சம்பள விவரங்களை உடன டியாக அவருக்குதெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

- நன்றி: ‘சட்டக்கதிர்’, ஜூலை 2018, பக்கம் 64

- விடுதலை ஞா.ம.25.8.18

திங்கள், 3 செப்டம்பர், 2018

வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் சலுகை பெற முடியாது உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

டில்லி, ஆக.31 ‘‘ஒரு மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி என்று வகைப்படுத்தப் பட்டவர், வேறு மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியாது’’ என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக உள்ளவர், வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி.யாக அறிவிக்கப்படாத நிலையில் அந்த மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியுமா என்று கேள்வி எழுப்பி உச்ச நீதி மன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பி னர் டெல்லியில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியுமா என்று கேள்வியும் எழுப் பப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர்.பானுமதி, எம்.சந்தான கவுடர், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மனுக்களை விசாரித்து நீதிபதிகள் நேற்று ஒருமனதாக அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடி யாது. வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி பட்டியலில் அறிவிக் கப்படாமல் இருந்தால், இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது

மேலும், ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக அறிவிக் கப்பட்டவர் என்பதாலேயே, அதே அந்தஸ்தை அவர் வேறு மாநிலத்தில் பெற முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டில்லியைப் பொறுத்தவரையில் எஸ்சி, எஸ்டி விஷயத்தில் மத்திய இட ஒதுக்கீடு கொள்கை இங்கு பொருந்தும் என்ற 4 நீதிபதிகள் கூறினர். இந்தக் கருத்தை நீதிபதி பானுமதி ஏற்கவில்லை. எனினும், 4:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் டில்லியில் இடஒதுக்கீடு குறித்த விஷயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 31.8.18

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அடிப்படை கடமைகள் ( Fundamental Duties 51A)

இந்தியஅரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகள் ( Fundamental Duties 51A) என்ற பகுதி (Part-lVA) நெருக்கடி நிலை காலத்தில் 42 வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வழியாக 1976ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. 10 துணை பிரிவுகள் இதில் உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கடமைகளில் - வலியுறுத்தப்பட்ட - சீர்திருத்தம், ஆய்வு மனப்பான்மை, மனிதநேயம், அறிவியல் உணர்வு ஆகியவை மேம்படுத்த வேண்டும் (51(h) -to develop the scientific temper, humanism, and the spirit of enquiry)

சனி, 1 செப்டம்பர், 2018

மணவிலக்கு பெற்றிருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்க சட்ட ஆணையம் பரிந்துரை

புதுடில்லி, செப்.1  மணவிலக்கு பெற்றிருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கிட வேண்டும் என 21ஆவது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் 21ஆவது சட்ட ஆணைய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவு கான் தலைமையில் அமைக்கப் பட்டது. இந்த ஆணையத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.  இதனால், சட்ட ஆணையம் பல்வேறு பரிந்து ரைகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், குடும்ப சட்ட சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மண விலக்கு பெற்ற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகு கணவன் சுயமாக வாங்கிய சொத்தில் சமபங்கு வழங்கிட வேண்டும். எனவே, மணவிலக்கு பெற்றி ருந்தாலும் கூட, பெண்களுக்கு திருமணத்துக்குப் பிறகு வாங் கப்பட்ட சொத்துக்களில் சமபங்கு வழங்கும் வகையில் தனி நபர் சட்டங்களில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 01.09.18