புதுடில்லி, மார்ச். 18- 24 வாரங்கள் வரை கருக் கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் மக்கள வையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ் நிலைகளின் காரணமாக தங்களது கருவைக் கலைக்க விரும்பினால், 20 வாரங்கள் வரையி லான கருவைக் கலைக்க வழி செய்யும் சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ளன
ஆனால் இந்த கால அளவை 24 வாரங்களாக உயர்த்துமாறு மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளி டம் இருந்து அரசிற்கு கோரிக்கைகள் விடுக்கப் பட்டிருந்தன.
இந்நிலையில் 24 வாரங்கள் வரை கருக் கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் மக்கள வையில் 16.3.2021 அன்று நிறைவேற்றப்பட்டுள் ளது. மத்திய சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட இந்த மசோதா நிறைவேறியுள்ளது.
பாலியல் கொடு மைக்கு ஆளாகும் சிறுமி கள் மற்றும் வல்லுறவின் காரணமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு பலன ளிப்பதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.