புதன், 30 நவம்பர், 2016

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகன் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை: டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ. 30 டில்லியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அம் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

பெற்றோர்களுடன் தங்கு வதற்குசட்டப்படியானஉரிமை இல்லை என்ற கீழமை நீதிமன் றத்தின் உத்தரவை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய் துள்ளனர்.

முன்னதாக, டில்லியைச் சேர்ந்த இணையர் கீழமை நீதிமன்றத்தில் தங்களுடைய மகன்கள் மற்றும் மருமகள்கள் மிகவும் சுமையாக இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தனர். தாங்கள் சம்பாதித்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற் றுமாறு அந்த மனுவில் தெரி வித்து இருந்தனர். அதற்கு முன்பு காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித் திருந்தனர்.

இந்தவழக்கில்ஆஜரான மகன்கள்மற்றும்மருமகள் கள் தாங்களும் பெற்றோர் கள் வீட்டின் பங்கு உரிமை யாளர்கள்தான் என்று வாதிட் டனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்து பெற்றோர்களுடன் தங்குவதற்கு சட்டப்படியான உரிமை இல்லை என்று கூறி விட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மகன்கள் மற்றும் மருமகள்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா ரானி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் தன்னுடைய தீர்ப் பில் நீதிபதி கூறியதாவது:-

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும், இல்லை என்றாலும் சட்டப்படி அங்கு தங்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. பெற் றோர்கள் கருணையின் அடிப் படையில் அனுமதிக்கும் காலம்வரை அந்த வீட்டில் மகன் இருக்கலாம்.

மகன் உடனான உறவு சுமூகமாக இருக்கும் வரை பெற்றோர்கள் மகனை வீட்டில் இருக்க அனுமதிக்கலாம். இறுதி வரை பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு நீதிபதி தெரி வித்தார்
-விடுதலை,30.11.16

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமை

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமையை மறுக்க முடியாது: மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 26_ மதுரை முடக்குச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி ஆசிரியையாக பணி யாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது சுய சம்பாத்தியத் தில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள் ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சுமதி, தான் இறந்த பின்பு, தனது சொத்துக்களை யார் அனுபவிக்க வேண் டும் என்று உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து விட்டார்.
சுமதியின் சுய சம்பாத் திய சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தங்கள் சகோதரர்கள் பிரித்துத் தர மறுப்பதாகவும், சொத் தில் தங்களுக்கு உரிய பங்கை பிரித்துத் தர உத் தரவிட வேண்டும் என் றும் சுமதியின் 2 மகள் களும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோன்று, சுமதி யின் கணவருக்கு உள்ள பூர்வீக சொத்துக்களை ஆண் வாரிசு என்ற அடிப் படையில் சுமதியின் மகன் கள் சொந்தம் கொண்டா டுவதாகவும், அந்த சொத் துக்களிலும் தங்களுக்கு உரிய பங்கை வழங்க உத் தரவிட வேண்டும் என் றும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடன் சேர்ந்து தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சுமதி யின் கணவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மதுரை 5- ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.
சுமதியின் கணவர், 2 மகள்கள் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர் ஒய். ஜேக்கப் கூறியதாவது:-
உயில் போன்ற ஆவ ணங்கள் எழுதாமல் இறந்து போன ஒரு இந்து பெண்ணின் சுய சம்பாத் திய சொத்து அவருடைய மகன், மகள், கணவருக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்து வாரிசுரி மைச் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, தந்தைக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பாட்டனாரின் பூர்வீகச் சொத்திலும் மகனைப் போன்று மக ளுக்கும் சம பங்கு உரிமை உள்ளது என்று இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பாகத்தை பிரித்துக் கேட் கும் சமயத்தில் தந்தை உயி ருடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் உள்ளது. அதேபோன்று, 9.9.2005-ஆம் ஆண்டுக்குப் பின்பு பெற்றோர் வாழ்ந்து வரும் வீட்டிலும் சம பங்கு கேட்க பெண்க ளுக்கு உரிமை உள்ளது என்று மத்திய அரசு உரிய சட்டப்பிரிவை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டப்படி, சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சுமதியின் கணவர், அவருடைய மகள்கள் ஆகியோருக்கு சம பங்கு உள்ளது. எனவே, அந்த சொத்துக்களில் சமபங்கை பிரித்துக் கொடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு வழக்குரை ஞர் ஒய்.ஜேக்கப் கூறினார்.
சுமதியின் மகள்களுக்கு திருமணத்தின்போது செய்யவேண்டிய அனைத்து சீர்வரிசைகளையும் சுமதி யின் மகன்கள் தான் செய் துள்ளனர் என்றும், அவர் களுக்கு சொத்தில் கிடைக்கவேண்டிய பங்கை விட அதிகமாக திருமணத் துக்கு செலவு செய்துள்ள தாகவும், எனவே, சுமதி யின் சுய சம்பாத்திய சொத்து,
சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சம பங்கு கேட்க சும தியின் மகள்களுக்கு உரிமை இல்லை என்றும் சுமதியின் மகன்கள் தரப் பில் ஆஜரான வழக்கு ரைஞர் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதி மன்றம் பிறப்பித்த உத்தர வில் கூறி இருப்பதாவது:-
ஆண் பிள்ளைகளுக்கு சொத்துக்களில் என்ன பங்கு, உரிமை உள்ளதோ, அதே பங்கு மற்றும் உரிமை பெண் பிள்ளை களுக்கும் சட்டப்படி கிடைக்கக்கூடியதாகும். சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்கு கிடைத்த பூர்வீகச் சொத்து ஆகியவற்றில் சுமதியின் மகள்களுக்கு சட்டப்படி சமபங்கு வழங் கப்பட வேண்டும்.
சுமதி யின் மகள்களுக்கு திரு மணத்தின் போதும், அதற்கு பின்பும் செய்ய வேண்டிய நகை உள் ளிட்ட அனைத்து சீர் வரி சைகளையும் செய்துள் ளோம் என்று கூறி, அவர்களுக்கு சொத்தில் கிடைக்க வேண்டிய சம பங்கை மறுக்க முடியாது.
எனவே, சுமதியின் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கை பிரித்துக் கொடுக்க வேண் டும். அதேபோன்று, சுமதி யின் கணவருக்கும் சொத் துக்களில் சமபங்கு பிரித் துக் கொடுக்கப்பட வேண் டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,26.6.15

திங்கள், 21 நவம்பர், 2016

அய்க்கிய அரபு நாடுகளில் தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு


அபுதாபி, ஜூன் 1_- ரம லானை முன்னிட்டு வரும்  ஜுன் மாதம் 15ஆ-ம் தேதி யில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயி லின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட் டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்கு மாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு அய்க்கிய அரபு அமீரக அரசு உத்தர விட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ரமலான் வருவதால், நேர டியாக வெயிலில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் இந்த இரண்டரை மணி நேர ஓய்வினை கட்டாய மாக வழங்க வேண்டும். அவசர வேலை நிமித்த மாக தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டிய சூழ் நிலையில் தொழிலாளிக ளுக்கு தேவையான குடிநீர்,
குளிர்பானம் போன்ற ஏற் பாடுகளை செய்துதர வேண் டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டு களாக அமலில் இருந்து வரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வு அளிக்கப்பட வேண் டிய நேரத்தில் தொழிலா ளர்களை வேலையில் ஈடு படுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாள ருக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவ துடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என அய்க் கிய அரபு அமீரக அரசு வெளி யிட்டுள்ள செய் திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,1.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

சிறாரை கைது செய்யும்போது செய்ய வேண்டியவை என்ன?


1,500 காவல் நிலையங்களில் விளம்பர பலகை வைக்க உத்தரவு

டி. செல்வகுமார்
சிறார்களை கைது செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 1500 காவல் நிலையங்களில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறார் நீதி சட்டப்படி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண் டனை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், டெல்லி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர் நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப் பட்டது. இவ் வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட தற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி யது. சிறார் நீதி சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கும், பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத் திருத் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து ஜனவரி 15ஆ-ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து இளம் சிறார்கள் கைது செய்யப்படும்போது அவர் களை காவல்துறையினர் எப்படி நடத்த வேண்டும்? எப்படி நடத்தக் கூடாது? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து காவல் நிலை யங்களிலும் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.
இதை யடுத்து 6 வகையான வண்ண போஸ் டர்களை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தயாரித் துள்ளது.
இளம் சிறார்களை கைது செய் யும்போது, அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது, விலங்கிடவோ, சங்கிலியால் பிணைக்கவோ கூடாது. காவல் நிலைய அறை அல்லது சிறையில் வைக்கக் கூடாது. கைது செய்த பிறகு அரு கில் உள்ள குழந்தை நல அதிகாரியிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை மேற்கெள்ள நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தகவலை சிறாரின் பெற்றோருக்கு தெரி வித்தல் வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற் றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறியதாவது:
நாங்கள் தயாரித்துள்ள போஸ் டர்கள் 1500 காவல் நிலையங்களிலும், 32 மாவட்ட காவல்
கண்காணிப் பாளர் அலுவலகங்களிலும், 30 மாற்று தீர்வுமுறை மய்யங் களிலும், 32 சட்ட உதவி மய்யங்களிலும், 426 குற்ற வியல் நீதிமன்றங்களிலும் விரைவில் வைக்கப்பட வுள்ளன. காவல் நிலையங் களில் மட்டும் விளம்பரப் பலகையாக வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. நீதிமன் றங்களில் போஸ்டராக ஒட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,19.3.16

கொலை, கடத்தல், பாலியல் வன்முறை வழக்குகளில் சமரசத் தீர்வை ஏற்க முடியாது

உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கொலை, மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, லஞ்சம், வழிப்பறி, கடத்தல், சிலை திருட்டு, பெண்களைத் தவறாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் போன்ற வழக்குகளில் சமரச உடன் படிக்கையை ஏற்கக் கூடாது என உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவரது புகாரின் பேரில் பிரபு, சந்திரமோகன் ஆகி யோர்மீதான வழக்கு, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் மாரியம்மாள் என்பவர் புகாரின் பேரில் வீரபாண்டியன்மீது பதிவு செய்த வழக்கு, திண்டுக்கல் மாவட் டம், சாணார்பட்டியில் கெம்பையா என்பவரின் புகாரின் பேரில் சாகுல் உட்பட 6 பேர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகிய வற்றை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த மனுக்களில், புகார் தாரர், எதிர்தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், அந்த சமரசத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர்கள்மீது பல் வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றில் பல குற்றங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங் களாக உள்ளன.
சிறப்புச் சட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர் களின் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாத நிலை நீதி மன்றத்துக்கு ஏற்பட்டுள் ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பதிவு செய் யப்படும் வழக்குகளைப் பொறுத்தவரை சமரச உடன்படிக்கையை ஏற்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சொத்து, வணிகம், பங்குதாரர் பிரச்சனை, திரு மணப் பிரச்சினை, வரதட் சணை, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் சமரசத்தை ஏற்கலாம். அதே நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசத்தை ஏற்க முடியாது.
குறிப்பாக கொலை, கொலை முயற்சி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலி யல் வன்முறை, லஞ்சம், போலி ஆவணம் தயாரித்தல், பொய்சாட்சியம் அளித்தல், வழிப்பறிக் கொள்ளை, கடத்தல், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை, சிலை திருட்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை தவ றாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் உள் ளிட்ட பல குற்றங்களில் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாது.
இதுதவிர ஆயுதச் சட்டம், லஞ்ச ஒழிப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், கந்து வட்டி தடைச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங் களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சமரச உடன்படிக்கையை ஏற்று ரத்து செய்ய முடியாது.
அதேநேரத்தில் சமரச உடன்படிக்கையை ஏற்கும் முன்பு குற்றவாளியின் முந்தைய நடத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமரச உடன்படிக்கையை ஏற்பதில் நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக செயல் படக்கூடாது.
ஏனெனில், சமரச உடன் படிக்கை, அந்த வழக்கில் இருந்து குற்றவாளியை தப்பிக்கச் செய்வதாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த வழக்குகளை பொறுத்தவரை உசிலம்பட்டி காவல் நிலைய வழக்கை ரத்து செய்ய முடியாது. விருது நகர் மற்றும் சாணார்பட்டி காவல் நிலைய வழக்குகள் திருமணப் பிரச்சினை தொடர்பானது.
அந்த வழக்குகளில் சமரச தீர்வை ஏற்கலாம். அதற்காக அந்த வழக்குகளை 28.1.2016- இல் பட்டியலிட்டு சமரச உடன் படிக்கையை ஏற்க வேண்டும். என்றார் நீதிபதி.
-விடுதலை ஞா.ம.,19.3.16

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

தெரிந்து கொள்வீர்!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான வன்கொடு மைகளை தடுப்பதற்கான சட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை தொடர்பான சட்டதிருத்த அவசரச் சட்டம்
1. சட்ட திருத்தத்தின் விபரங்கள் மற்றும் வசதிகள்  தாழ்த்தப்பட் டவர்கள் மற்றும் பழங்குடியினரை அவமானப்படுத்துவதும் அவர்களைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவது
தாழ்த்தப்பட்டவர்களை பலவந்தப் படுத்துவது வாக்களிக்க மிரட்டுவது, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது
தாழ்த்தப்பட்டவர்களின் சொத்துக் களை மிரட்டி பலவந்தமாக பிடுங் குவது,
2.    தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடு மைகள்
பாலியல்வன்கொடுமை மற்றும் துண்புறுத்தல் மேலும் தாழ்த்தப் பட்ட பழங்குடியினப் பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வது,
தகாதவார்த்தைகளில் பாலியல் சைகை முறையில் பெண்களை மனம்புண்படும்வகையில் பேசுவது
தலித் பெண்களை தேவதாசி களாக அல்லது கோவிலகளில் அப்பெண்களை அடிமைகளாக  மாற்ற முயலும் கோவில் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை
நவீன சாதனங்களை (மொபைல் மூலம் தகாதவார்த்தை பேசுவது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது) பயன்படுத்தி தவறாக வார்த்தை களைப் பயன்படுத்துதல்
3. பொது இடங்களில் செருப்பை அணிவதைத் தடுப்பது, மலம் அள்ள வற்புறுத்துவது, மிரட்டிக் கட்டாயப் படுத்துவது, பொது இடங்களில் ஜாதிரீதியாக பேசி அவமானப்படுத்து வது, மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி அவமானப்படுத்தும் விதமாக பேசுவது, சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர்களை ஜாதி குறித்துப் பேசி அவமானப்படுத்துவது மற்றும் அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்லி ஏளனம் செய்வது
4.    வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதி மறுப்பது, பொது இடங்களை பயன்படுத்துவதை தடுப்பது ஆகியவையும் இந்த சட்ட வரம்புக்குள் புதிதாக இணைக்கப்பட் டுள்ளன.
5.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
6.    தாழ்த்தப்பட்ட பழங்குடியி னரை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் அரசுப் பணியா ளர்களுக்கு பணி நீக்கம் மற்றும் சிறைத் தண்டனை
7.    உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் மற்றும் வாய்மொழியாக வழங்கபப்ட்ட புகாரை பதிவேட்டில் ஏற்றி புகார் கொடுத்தவரின் கையொப்பத்தைப் பெற்று அதன் நகலை புகார் அளித்தவரிடம் அளிக்கவேண்டும்.
8.    மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் நியமித்தல்
9.    இரண்டு மாதத்திற்குள் வழக்கை விசாரித்து நீதி வழங்க
10.    மூன்று மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் இந்த வழக் குகள் தேங்கக் கூடாது,
11.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
•    புகார் அளிப்பவரை பாதுகாத்தல்
•    சாட்சியளிப்பவர்களைப் பாது காத்தல்
• சாட்சியளிப்பவர்களுக்கும் புகார் அளிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உரிமைகளை வழங்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்
-விடுதலை ஞா.ம.12.3.16

திங்கள், 7 நவம்பர், 2016

14) பெண்ணுரிமைச் சட்டங்கள்

நேற்றையத் தொடர்ச்சி

திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.05.1930 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில்,

தீர்மானம் 2

ஆண்களைப் போன்று பெண்களுக்கும், சொத்துரிமை வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும், அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாக ஆரம்பக்கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.

தோழர் ஆர்.கே. சண்முகம் தலைமையில் 1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில்,

தீர்மானம் 10

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண்களுக்குச் சொத்துரிமை, கலியாண உரிமை, கலியாண ரத்து, விதவை மணம் முதலியவைகளை அமலுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமென்றால், அதற்கேற்ற சட்ட சம்பந்தமான காரியமும் செய்யப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இத்தீர்மானங்கள் தொடர்பாக இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 இல் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் படி ஆண் வாரிசுகளுக்கும், பெண்வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு உரிமை உண்டு. இச்சட்டத்திற்கு முன்பு சீதனச் சொத்தைத் தவிர, பிற சொத்துக்களில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமை மட்டுமே இருந்தது.

இச்சட்டம் அதை நீக்கி, பெண்களை சொத்துக்கு முழு உரிமையாளர்களாக்கியது. இந்து வாரிசுச் சட்டம் பிரிவு 6 இதற்கு வகை செய்கிறது. இப்பிரிவில் 2005 இல் இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 இன்படி 09.09.2005-லிருந்து நடைமுறைக்கு வந்தது.

1956-இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு மகளிர் நிலை

1956- இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மகளிர் நிலையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை வருமாறு,

1) பழைய சட்டத்தின்படி இறந்தவருக்கு மகனோ அல்லது விதவையோ இருப்பின், மகளுக்கு இறங்குரிமையின் அடிப்படையில் சொத்து கிடைக்காது. ஆனால் 1956 இன் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி மேற்படி நிலை ஒழிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, மகளுக்கும் இறந்தவரின் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட்டது. அவள், இறந்தவரின் மகன், விதவை மற்றும் தாயுடன் சொத்தில் சம பங்கினைப் பெற தற்பொழுது உரிமையுடையவள் (பிரிவு 8)

2) முன்னதாக இறந்து போய்விட்ட மகளின் (Predeceased daughter) குழந்தை கள், இறந்தவரின் சொத்தில் மகள் என்ன பாகத்தைப் பெறுவாளோ அந்த பாகத்தை அவர்கள் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். பழைய சட்டத்தின்படி இதற்கு உரிமை கிடையாது.

3) பழைய சட்டத்தின்படி மகள் பெறும் சொத்து வரையறைக்குட்பட்டதாகும். (Limited Interest) மகளின் மரணத்திற்குப் பிறகு, அது அவளுடைய தந்தையின் பிற வாரிசுகளுக்கு சென்றடைந்துவிடும். ஆனால், மேற்படி 1956 ஆம் ஆண்டின் சட்டப்படி, மகளுக்கு இறங்குரிமையில் வரும் சொத்தில், அவளுக்கு முழு உரிமை யுண்டு. அது அவளுடைய மரணத்திற்குப் பிறகு, அவளுடைய வாரிசுகளுக்குத்தான் செல்லும். பிரிவுகள் 15 மற்றும் 16). மாறாக மேற்கண்ட பழைய சட்டத்தின்படி செல்லாது.,

4) மேற்படி 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு அம்மகள் வரையறுக்கப்பட்ட சொத்துக்கள் ஏதேனும் பெற்றிருந்து, மேற்படி சட்டம் வரும்பொழுது அச்சொத்து அவளது உடைமையில் இருந்தால் (in her possession), வரையறைக்குட்பட்ட சொத்துரிமை மறைந்து, அச்சொத்திற்கு அவளே முழு உரிமையாளராகி விடுவாள் (absolute ownership) பிரிவு 14

5) 1956-இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் கூட்டு குடும்பச் சொத்தின் பங்குரிமையர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்குரிய இப்பங்குரி மையாளர்கள், இறந்தவரின் சகோதரர்களாகவோ அல்லது சிற்றப்பா, பெரியப்பாமார் களாகவோ இருப்பார்கள். இவர்கள் இறந்தவரின் மகளை சொத்துரிமை பெறுவதிலி ருந்து தள்ளிவிடுகிறார்கள்.

(exclude) அதாவது இறந்தவரின் சொத்துக்களை பங்குரிமையர்கள், எஞ்சுநர் (Survivorship) அடிப்படையில் அடைகின்றனர். ஆனால், 1956- இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பங்குரிமைச் சொத்தில் மகளுக்கும் உரிமை வந்துவிட்டது. இதன்படி, இறந்துபோன தந்தையாரின் சொத்துக்களை மகளும், ஒரு பங்குரிமையரைப் போலவே அடையலாம். இது பிரிவு 6-இல் விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றம் ஆகும்.,

தமிழக அரசின் சட்டத் திருத்தம் (Amendment Act)

தமிழக அரசு தனது 1990-ஆவது ஆண்டின் 1-ஆவது சட்டத்தின் மூலம் (Act-1 of 1990) 25.03.1989 ஆம் தேதியில் மேற்படி 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 29-இல் திருத்தம் செய்ததன் விளைவாக பின்வரும் 29-A, 29-B, 29-C ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்த்தது.

பிரிவு 29 A(i): இப்பிரிவு பங்குரிமைச் சொத்தில் மகளுக்கும் சமபங்கு கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. (Equal rights to Daughter in Coparcenary property). அதாவது, இந்து கூட்டுக் குடும்பத்தில் மிதாக்ஷா முறையில் மகன் எவ்வாறு பிறந்தவுடனேயே பங்குரிமையர் ஆவானோ, அவ்வாறே மகளும் பிறந்தவுடன் பங்குரிமையர் ஆகிவிடுகின்றாள். மகனுக்கு உள்ள அனைத்து பொறுப்புகளும், தகுதியின்மைகளும் (liabilities and disabilities) மகளுக்கும் உண்டு.

(ii) மகனுக்குச் சொத்தில் எவ்வளவு பங்கு கிடைக்கிறதோ அதே அளவு பங்கு மகளுக்கும் கிடைக்கும். மகள் இறந்து விட்டால், அவளது வாரிசுகளுக்கு அவள் பங்கு சென்றடையும்.

(iii) மகளுக்குக் கிடைத்த பங்கினை அவள் தன்னுடைய விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் உயில் மூலமோ அல்லது மற்ற ஆவணங்களின் மூலமோ கொடுக்கலாம்.

(iv) 25.03.1989-ஆம் தேதிக்கு முன் திருமணமான மகளுக்கு இந்தச் சட்டத் திருத்தத்தால் எப்பலனும் கிடைக்காது.

(v) 25.03.1989 ஆம் தேதிக்கு முன் நடைபெற்ற எப்பாகப்பிரிவினைக்கும் இச்சட்டத்திருத்தம் பொருந்தாது.

பிரிவு 29-B: 25.03.1989 ஆம் தேதிக்குப்பின் ஒரு பெண் இறந்துவிட்டால், அவ ளுடைய சொத்து உயிருடன் உள்ள மற்றைய எஞ்சுநர்களுக்குப் (Survivors) போய்ச் சேரும். ஆனால் அவள் இறக்கும் பொழுது அவளுடைய குழந்தையோ அல்லது குழந்தையின் குழந்தையோ இருந்தால் 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் அவளின் சொத்து சென்றடையுமே தவிர, எஞ்சுநர் முறைப்படி (Survivorship) சொத்து சென்றடையாது.

பிரிவு 29-சி: சில நேர்வுகளில் சொத்தை அடைவதற்கான முதல் நிலை உரிமை யானது (Preerential right to acquire property is certain cases), மேலே கூறிய பிரிவுகள் 29-A மற்றும் 29-B-யின் படி 25.03.1989ஆம் தேதிக்குப்பின், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் வாரிசுகளோ அல்லது பெண் வாரிசுகளின் வாரிசுகளோ இருந்தால்,

அவர்களுக்கு அசையும் சொத்தோ அல்லது செய்யும் தொழிலில் பங்கோ மொத்தமாகவோ (solely) அல்லது கூட்டாகவோ (jointly) கிடைக்கும் பொழுது அவர்களில் யாராவது ஒருவர் தங்களுடைய பங்கினை விற்க விரும்பினால் மற்றவர்கள் (Co-shares) அவரின் சொத்தினை வாங்கும் முன்னுரிமை பெற்றவர்கள் ஆவர். (இது அண்டைச் சொத்தில் முற்படுவிலை கொள் உரிமையைப் (Right of Pre-emption) போன்றதாகும்).

பிரிவு 29-C (2): அவ்வாறு அச்சொத்தை வாங்க விரும்புபவர்கள் அதற்கு உண்டான தொகையைக் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் நீதிமன்றத் தீர்ப்பே முடிவானதாகும்.

பிரிவு 29-C (3) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடன் பங்குரிமையர்கள் (Co-shares) இருக்கும்பொழுது அதில் ஒருவர் தனது பங்கை விற்க விரும்பினால் மீதியுள்ள பங்குரிமையர்களில் யார் அதிகத் தொகை கொடுக்க உடன்படுகிறார்களோ, அவர்களுக்குத்தான் அப்பங்கை விற்க வேண்டும்.

எனவே, 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மகளின் சொத்துரிமை நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தொடர்புக்கு: 9443472914

(தொடரும்)

-விடுதலை,2.7.15

வயது சான்றுக்கு பள்ளிச் சான்றிதழ் போதுமானது உச்சநீதிமன்றத் தீர்ப்பு


உரிமையியல் முறையீடு எண். 2016 இன் 1676
(@விசேஷ விடுப்பு மனு c எண் 2012ன் 37555)HINA
மனுதாரர்கள்
எதிர் யூனியன் ஆஃப் இந்தியா - _ பிறர்பிரதிவாதிகள்
தீர்ப்பு : குரியன், நீதியரசர்
1. விடுப்பு வழங்கப்பட்டது
2. இந்த மனுவின்மேல் எழும் சிறிய கேள்வி மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் கலம்னுரி என்னும் இடத்தில் பெட்ரோலியம்/டீசல் வியாபார சில்லறைக் கடை வைக்க ஒதுக்கீடு செய்ய மனுதாரர் கொடுத்த விண்ணப்பத்தை வழக்கப்படி சமர்ப்பிக்க வேண்டிய வயதுச் சான்றிதழ் உயர்நிலைப்பள்ளியுடையது அல்ல; ஆனால் மேல்நிலைப் பள்ளியுடையது என்ற காரணம் காட்டி இரண்டாம் பிரதிவாதி அமைப்பு நிராகரித்தது நியாயமானதா என்பதுதான்.
3. மனுதாரர் சமர்ப்பித்த சான்றளிக்கப்பட்ட நகலான சிறீ ஷாந்தி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, விரட்ஷாபுர், ஹிங்கோலி கொடுத்த பள்ளி விலகல் சான்றிதழ் மேல்நிலைப்பள்ளியுடையது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்த சான்றிதழ் பள்ளிக்கூட முதல்வர் கொடுத்தார். மனுதாரர்_அதனுடைய சான்றளிக்கப்பட்ட நகலை முன்வைத்தார்
4. உயர்நீதிமன்றத்தின் திருப்தியளிக்காத தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“அமைப்பு அணுகியமுறை நுணுக்கமானது என்ற போதிலும் அமைப்புக்கு தேவைப்பட்ட விதத்திலும் விளம் பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதத்திலும் மனுதாரர்_வயது அத்தாட்சி சமர்ப்பித்திருக்கலாம் விளம்பரத்தின் நிபந்தனைகளில் சேர்க்கவோ திருத்தவோ அல்லது மாற்றவோ_ அறிவுறுத்துவது உசிதம் அல்ல.
5. தகுதி நிபந்தனை ஷரத்து2(c)ன் படியான தே-வையை மனுதாரர் குறிப்பிட்டபடி அனுசரிக்கவில்லை என்ற காரணத்தால் மனு நிராகரிக்கப்படுகிறது. ஷரத்து 2(c) இவ்வாறு கூறுகிறது:
(c) வயது விண்ணப்ப தேதியன்று (பூர்த்தியான ஆண்டுகள்) 21 ஆண்டுகளுக்குக் குறையக கூடாது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள மெட்ரிகுலேசன் அல்லது உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது PAN கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.
6. அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட_ஆலோசகர் வாதிடுகையில் சான்றளிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி சான்றிதழ் தேவை என்று கூறினார். அவர்கள் முன்பு சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அவர்கள் முன்பு இணைக்கப்பட்டதால் அமைப்பு விண்ணப்பத்தை நிராகரித்ததன் மூலம் நியாயமாக_நடந்து கொண்டது. மேலும் குறிப்பிடுகையில் தகுதி நிபந்த னையை பூர்த்தி செய்யாத அப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பங் களும் அறிந்து கொண்டு அமைப்பு அப்படிப்பட்ட விண் ணப்பங்களை நிராகரித்தது. மனுதாரர். அதே பிரச் சினையை எழுப்பியுள்ளாரா என்பது தெளிவாக இல்லை.
7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனையி லிருந்து வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் போதுமானது இருந்தபோதிலும், தகுதி நிபந்தனையின் தேவையை உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழின் நகல் பூர்த்தி செய்கிறது என்றால் உயர் நிலைப்பள்ளி விலகல் சான்றிதழுக்கும் மேல்நிலைப்பள் ளியின் விலகல் சான்றிதழுக்கும் என்ன வித்தியாசம்? அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் வாரியம் கொடுக்கிறது. ஆனால் மேல்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழ் பள்ளிக்கூடம் கொடுக்கிறது. பள்ளி விலகல் சான்றிதழ் என்றாலே பள் ளியை விட்டு மாணவர் போவதால் பள்ளி கொடுக்கிறது. மனுதாரர் அமைப்பின் முன்பு பள்ளி விலகல் சான்றிதழ் தாக்கல் செய்தது இணைப்பு P1 இல் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தேவை வயதின் ஆதாரமாகும். தகுதி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்களை வயது ஆதாரத்திற்காக ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போது வயது ஆதாரத்திற்கு உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் நகலை ஏற்றுக் கொள்ளும் பொழுது சான்றளிக்கப்பட்ட மேல் நிலைப்பள்ளி விலகல் சான்றிதழின் நகல் வயது ஆதாரத் திற்காக ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது இது ஒரு பொது அறிவு ஆகும். உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறு. நாங்கள் தெளிவுபடுத்தியது நிபந்தனையைத் திருத்தாது.
8. பிரதிவாதி எண் 4_ற்காக ஆஜராகும் மதிப்புக்குரிய சட்ட- ஆலோசகர் திரு.ஷி.வி.ஜாதவ் அமைப்பின் மதிப் புக்குரிய சட்ட ஆலோசகர் முன்வைத்த வாதங்களை ஆத ரித்து மேலும் கூறுகையில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு நிலுவையில் இருக்கும்பொழுது 4 ஆம் பிரதிவாதிக்கு சில்லறைக்கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட-து. அது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மனுதாரர் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைப்பு நடத்திய தேர்வின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும்
9. அதன்படி, நாங்கள் இந்த முறையீட்டை அனு மதிக்கிறோம். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம். இரண்டாம் பிரதிவாதி அமைப்பை மீண்டும் தேர்வு நடத்த உத்தர விடுகிறோம். அமைப்பால் தகுதி பெற்றவர்களுடன் இங்கு மனுதாரராக உள்ளவரையும் அதில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தர விடுகிறோம். இன்று முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாக தேவைப்படி நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
Lawyers Line March 2016
-விடுதலை,ஞா.ம.,16.4.16

செவ்வாய், 1 நவம்பர், 2016

விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி

ரூ.350 ஆக நிர்ணயம்
மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, அக்.29 மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலா ளர்களின் (சி பிரிவு) தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்..
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கை, நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து பிரிவிலான தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மேலும் கூறியதாவது:-
சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டு வரப்படும். அதற்கு முன்பாகவே சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்து மாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை கூறப்படும். அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் எனது தலைமையில் அமைக்கப் பட்டுள்ள குழு கவனித்து வருகிறது. நாங்கள் சந்தித்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதில்தான், ஒரு குழுவை நியமிக்க முடிவு எடுத்தோம். அந்த அடிப்படையில்தான் இப் போது குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் ஆகியோரை கொண்டுள்ள குழு, தனது அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளரிடம் வழங்கும். அவர் அதன் பேரில் தனது பரிந்து ரைகளை அரசுக்கு வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,29.10.16