வெள்ளி, 28 அக்டோபர், 2016

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது

குழந்தை திருமண தடைச் சட்டத்தில்
பெண்களை தண்டிக்க முடியாது  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.11
 சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதி மன்றம் வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.
நாமக்கல் மாவட்டம், நாம கிரிபேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தன் 15 வயது பேத்தியை, மது என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பார்வதி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “குழந் தை திருமண தடுப்புச் சட்டத்தின், 11-ஆவது பிரிவின்படி, குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கில் பெண்களுக்கு தண்டனை விதிக்க முடியாது’ என்றார்.
இந்த வாதத்தை ஏற்று, பார் வதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதார ருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். 
விடுதலை,11.9.16

திங்கள், 17 அக்டோபர், 2016

திருமணமான மகன்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை மத்திய அரசு அறிவிப்பு


புதுடில்லி, செப்.7 கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந் தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வழங் குவது நடைமுறை. ஆனால் திருமணமான மகனுக்கு இந்த வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

பணிக் காலத்தில் உயிரி ழக்கும் ஊழியரின் வாரிசு களுக்கு, கருணை அடிப் படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, இனி திரு மணமான மகன்களுக்கும் பொருந்தும்.
இதற்கு மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்சினையும் இன்றி பணி வழங்கப்படும். வரு மானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தி னருக்கு இது மிகவும் உதவி கரமாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

55 வயதுக்கு முன், மருத் துவக் காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
-விடுதலை,7.9.16

திங்கள், 10 அக்டோபர், 2016

கிறித்துவ முறைப்படி வழங்கப்படும் விவாகரத்து : சட்டப்படி செல்லாது உச்சநீதிமன்றம்



புதுடில்லி, ஜூலை 7 கிறிஸ்தவ முறைப்படி வழங்கப்படும் விவா கரத்து சட்டப்படி செல்லாது. நீதி மன்றத்தில் வழங்கப்படும் விவாகரத் துக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக கத்தோலிக்க சங்கத் தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான கிளாரன்ஸ் பயஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில், கிறிஸ்தவர்களுக்கு திருமணங் களை அங்கீகரிக்கவும், அதை முறித்து விவகாரத்து அளிக்கவும் கிறிஸ்தவர்களுக்கான கேனன் லா அதிகாரம் அளித்துள்ளது. அதன்படி, கிறிஸ்தவ தேவாலய நீதிமன்றங்களில் விவாகரத்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்க மறுப்பதால், இந்த முறையில் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்தவர்கள், இந்திய குற்றவி யல் சட்டத்தின் பிரிவு 494-ன் கீழ் தண்டிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ளன. முஸ்லிம்களுக்கு அவர்களது மதச் சட்டத்தின்கீழ், மூன்று முறை தலாக் சொன்னால், அதை விவாகரத்தாக ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், கிறிஸ்த வர்களுக்கு அவர்களது மத வழக்கப்படி வழங்கப்படும் விவாகரத்தை ஏன் ஏற்றுக் கொள் ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பியதுடன், கிறிஸ்தவர் களின் விவாகரத்தை அங்கீகரிக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் 96-ஆம் ஆண்டு மேரி ஜோசப் மற்றும் ஜார்ஜ் செபஸ்டி யான் வழக்கிலேயே முடித்து வைக்கப்பட்ட ஒன்று.

கிறிஸ்தவ முறைப்படி விவா கரத்து பெற்றிருந்தாலும், அதற்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித் தால் மட்டுமே அந்த விவா கரத்து சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெ னவே தீர்ப்பளித்து விட்டது. மேலும், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 மற்றும் விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை மட்டுமே சட்டப்பூர்வ மானது. அந்த சட்டங்களை கேனன் லா எனப்படும் தனிநபர் மதச்சட்டத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ அமைப்புகள் மீறுவ தற்கு அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்தது. பின்னர் கருத்து தெரிவித்த நீதி பதிகள், கிறிஸ்தவ நீதிமன்றங் களில் வழங்கப்படும் விவா கரத்து சட்டப்படி செல்லாது. இந்த வகை யில் விவாகரத்து பெற்ற பின்னர் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்கள் குற்றம் செய்தவர்களாக கருதப் படுவார்கள்.

இத்தகைய விவாகரத்துகளை சட்டப்படி நீதிமன்றம் ஏற்றுக் கெண்டால் மட்டுமே அதற்கு அங்கீகாரம் உண்டு என்று தெரி வித்தனர். இதற்கிடையே மனு தாரர் கிளாரன்ஸ் பயஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சொலி சொரப்ஜி, இந்த வழக்கை துரிதமாக நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதி பதிகள் வழக்கை துரிதமாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
விடுதலை,7.7.16

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..!.

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.
அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.
இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.
ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.
சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.
அதற்கு சார்ஜ் 1ருபாய்.
கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும்.
இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
நட்புடன் உங்கள் தோழி. ...!!!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

வில்லங்கம் இல்லாமல் சொத்தை விற்க வேண்டுமா !



பல ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரத்துக்குத்தானே இந்த சொத்தை வாங்கினோம்.
பல லட்சங்களுக்கு இப்போது கிரயம் பெறத் தயாராக இருக்கிறாரே… வாங்கும் நபர் கிரயப்பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிட்டால் நமக்கென்ன? நமக்கு லாபமாக பல லட்சங்கள் கிடைக்கிறதே… என்கிற மனநிலையில் உள்ளவரா நீங்கள்?

உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. பின்நாட்களில் உங்களைப் பிரச்னையில் தள்ளிவிடும் நிகழ்வாகவே அந்த கிரயப்பத்திரம் உருவெடுத்துவிடும்.

குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள சொத்துக்களை பொறுத்த மட்டில், அரசு வழிகாட்டி மதிப்பும், கிரயத் தொகையாக நிச்சயிக்கப்படும் தொகையும் பெருமளவில் வித்தியாசப்படும் நிலையே காணப்படும்.

இந்த நகரங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு சொந்தமான சொத்து எங்கே இருந்தாலும் அதனை விற்கும் போது ஏமாறாமல் இருக்க, நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

முதலில் இது போன்ற பெரு நகரங்களில் சொத்தின் சந்தை மதிப்பும் (Market Value) முத்திரைத் தீர்வைக்கென அரசு காட்டியுள்ள வழிகாட்டி மதிப்பும் (Guide Line Value) மிகச் சரியாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சொத்தினை விற்கும்போது, வாங்கும் நபர் வழிகாட்டி மதிப்புக்கு பத்திரம் பதிவு செய்து கொண்டு, சந்தை மதிப்போடு வித்தியாசப்படும் தொகைக்கென பணப் பட்டுவாடாவை தனிப்பட்ட முறையில் செய்து கொள்வதாக சொல்வார்கள்.

இதற்கென எழுத்து மூலமாக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்வதை சட்டம் அனுமதிக்காது.
இதன் மூலம் பல பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே, முதல் படியாக விற்பனையின்போது இவ்வாறான ரொக்கப் பரிவர்த்தனையை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது.

இதுபோன்ற சூழ்நிலையில் நம் சொத்தினைக் கிரயம் பெறும் நபரிடம், கிரயப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் கிரயத் தொகையானது (Sale Consideration) எந்த மறைமுகக் குறைப்பு மின்றி நாம் நிர்ணயித்து உள்ள கிரயத் தொகையாக இருக்க வேண்டும் என முன்னரே பேசி, அதனைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.

கிரயத் தொகையானது வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாகும்பட்சத்தில், வழிகாட்டி மதிப்புடன் வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை (Stamp Duty), மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) போன்ற பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் கிரயமும், உங்கள் பணப் பட்டுவாடாவும் முறையானதாக இருக்கும்.

உங்கள் வருமானமும் தெரிவிக்கப் பட்ட வருமானமாகவே (Declared Income) கணக்கில் கருதப்படும்.

இல்லை என்றால் சொத்தை அதிகத் தொகைக்கு விற்றுவிட்டு குறைவான தொகையைக் கணக்கில் காட்டியதாக உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்போது பணப் பரிமாற்ற விஷயத்துக்கு வருவோம். கிரயப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிரயத் தொகையினை, ஆவணப் பதிவுக்கு முன்பாகவே, ஆர்டிஜிஎஸ் (RTGS), நெஃப்ட் (NEFT) போன்ற வங்கிப் பணப் பரிமாற்றம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றும் படியாகவும் கூறலாம்.

அவ்வாறான பணப் பரிமாற்றத்துக்குப் பின்பு, உங்கள் கணக்குக்கு பணம் வந்தடைந்ததை உறுதிப்படுத்திய பின்னர், பத்திரப்பதிவையும் மேற் கொள்ளலாம். பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களையும்கூட கிரயப் பத்திரத்தில் தெளிவாக விவரித்து கிரயப் பத்திரத்தினை பதிவு செய்யலாம்.

விற்கப்படும் சொத்தின் நில மதிப்புடன், கட்டடத்துக்கென நீங்கள் நிர்ணயித்துள்ள மதிப்பீட்டுத் தொகை சரிதானா என ஒரு பொறியாளரிடம் கேட்டு, அரசு அனுமதி பெற்ற சொத்து மதிப்பீட்டாளர் மதிப்பிடும் கட்டட மதிப்பை, கிரயப் பத்திர இணைப்பு 14-ல் (Annexure 1A) தெளிவாகக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.

பின்நாளில் கள ஆய்வுக்குப் பின்பு, பதிவாளரால் கட்டடத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்க நேர்ந்தால், வித்தியாசப் படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம், கட்ட வேண்டியதுடன், அவ்வாறு மதிப்பிடப்படும் தொகையினை சொத்தின் மதிப்புடன் சேர்த்து கிரயத் தொகையாக வந்தடைந்த தாகவே, வருமானக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

எனவே, கிரயத்துக்குப் பின்பு, கிரயப் பத்திரத்தில் கூறப் பட்டுள்ள சொத்தின் மதிப்பும், கிரயத் தொகையும் சரியானதே என்ற சான்றிதழுடன் கூடிய, கிரயப் பத்திர நகலைக் கிரயம் பெற்றவரிடமிருந்து வாங்கி அதனைப் பத்திரப்படுத்துதல், அந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது உங்களைப் பாதுகாக்கும்.

‘வாங்குபவர்களே விழிப்புடன் இருங்கள்’(Beware of Buyer) என்பதுதான் ஒவ்வொரு சொத்தின் கிரயத்தின்போதும் அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும். அதே அளவு கவனம், சொத்தினை விற்பவரும் மேற்கொள்ள வேண்டும் .

நட்புடன் உங்கள் தோழி. ....!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

உங்கள் ஆவணங்கள் தொலைந்தால் திரும்ப பெறுவது எப்படி?

யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
2.#மதிப்பெண் #பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல்,
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
கட்டணம் செலுத்திய ரசீது.
#எவ்வளவு #கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
#காலவரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
#நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு,
முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம்
கையொப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.#ரேஷன் #கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;
நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை
#எவ்வளவு #கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு
கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,
பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள்
கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட
விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை
வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின்
உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.
இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்
நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து
சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம்
குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய
வேண்டும்.
இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல
வேண்டும்.
8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள்
நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு
சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.),
வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்
விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9.பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல்,
20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை
என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய்
முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு
செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட்
அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்
அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்
கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள்
உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.
நட்புடன் உங்கள் தோழி. ...!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...

என்றாவது ஒரு நாள் நமக்கே தேவை படும் நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :—
93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-
Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:-
044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்–
044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:
044-25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-–– 044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—- 09383337639
போலீஸ் SMS :- —————————————- 9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—- 9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—– 98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————- 9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———- 044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–—— 100
தீயணைப்புத்துறை:————————-—–101
ஆம்புலன்ஸ் : —————————————- 102, 108
போக்குவரத்து விதிமீறல———————– 103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-– 1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-– 1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-— 1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-— 1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—– 1093
🗡
ரத்த வங்கி அவசர உதவி : —————-—– 1910
🗡
கண் வங்கி அவசர உதவி : —————-—– 1919
🗡
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
நட்புடன் உங்கள் தோழி. ..!!!!திருவாரூர் ராஜநந்தினிினி

”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்”

நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள். 
கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது.
அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான்.
தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :
***********************************************************************
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது.
திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.
இத்திட்டத்தில் பலனடைய வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக ”கலப்புத்திருமண தம்பதிகள் சங்கம்” எனும் அமைப்பு முன்வந்திருக்கிறது.
அந்த அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442927157
மேலும் சில விவரங்கள் :
*************************************
கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?
கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு.
இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை.
வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
நட்புடன் உங்கள் தோழி. ....!!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்து விட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும்.
அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.
காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம்.
இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும்.
அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
நட்புடன் உங்கள் தோழி. .......!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

சாதி மறுப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?

கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது.
மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.
வருமான, வயது உச்சவரம்பு எதுவும் இல்லை.
திருமணத்தின்போது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று, மணமகள் மற்றும் மணமகன் ஜாதிச் சான்று, வயதுச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
இந்நிதியுதவி மணமகள், மணமகனிடம் நேரடியாக வழங்கப்படும்.
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கப்படும்.
வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.
திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்தின்போது குறைந்தபட்ச வயது 20 ஆகவும், மணமகனின் வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விதவைச் சான்று, மறுமண பத்திரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம்.
சமூக நலத்துறையின் மூலம் ஐந்து வகை திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
2014-15ல் 8747 பேருக்கு ரூ.33.48 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.
1) மூவலுார் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி
2) ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி
3) அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி
4) கலப்பு திருமண நிதியுதவி
5) விதவை மறுமண நிதியுதவி
குறிப்பு :
************
முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக் கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள்.
அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.
நட்புடன் உங்கள் தோழி. ...!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

இஸ்லாமியர்களின் திருமண இழப்பு #சட்டம்


இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
2. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
3. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
4. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
5. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் …
…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.
இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும்.
வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.
இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
நட்புடன் உங்கள் தோழி. ......!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

ரேஷன் கடைகாரரின் முறை கேட்டை தடுக்க!!!

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். 
நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :
PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (Shop Code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(Server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நட்புடன் உங்கள் தோழி. .....!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

பாஸ்போர்ட் பெறுவது எப்படி!

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது.
அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம்.
அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது.
நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம்,
இனி அந்த அவசியம் தேவையில்லை.
உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.
#பாஸ்போர்ட் #எத்தனை #வகைப்படும்
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும்,
Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்
,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
•தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
•எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.
என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
#வேறு #சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப்பிக்கலாம்.
26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது.
பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :
http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும்.
அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள்.
அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன.
அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது.
இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்
பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி, அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் பார்க்கலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
#விசா #பெற #வழிகாட்டும் இனையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும்.
அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும்.
ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன.
இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம்.
மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும்.
வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம்.
மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது.
இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது.
ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம்.
இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும்.
உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித்தளமே.
இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது.
மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது.
விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது.
விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது.
ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.
ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான்.
இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன
நட்புடன் உங்கள் தோழி. ...!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி