ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற உரிமை


கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற 
உரிமை உண்டு

டில்லி நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, பிப்.9- கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று டில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
டில்லியை சேர்ந்தவர்கள் ஹரிஷ், ஸ்வேதா இணையர் (பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது.) இவர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இல்வாழ்வில் 3 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் இணையர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு வரும் பிரிந்துவிட்டனர். இருப்பினும் ஒரே கட்டிடத்தில் அடுத்தடுத்த மாடியில் குடியிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹரிஷ் தனக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டில்லி நீதிமன்றம் ஒன்றில் ஸ்வேதா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிந்து சென்ற கண வனிடம் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது என கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் அவர் செசன்சு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை டில்லி கூடுதல் செசன்சு நீதிபதி புலஸ்த்ய பிரமச்சாலா விசாரித்தார்.
விசாரணை முடிவில் அவர் கீழ் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஸ்வேதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்ப தாவது:-
இந்த வழக்கை பொறுத்தமட்டில் வழக்குதாரர் (ஸ்வேதா), தனது வாழ்க் கையை நடத்தத் தேவையான வசதி படைத்தவர் அல்ல என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போன்று, எதிர்வழக்குதாரர் (ஹரிஷ்), ஒரு வசதியான வாழ்க்கை நடத்து வதற்கு தேவையான பண பலத்தை பெற்றிருக்கிறார் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய அம்சம். எனவே அவர் வழக்குதாரருக்கு ஜீவ னாம்சம் தர மறுக்கக்கூடாது.
அவர் வழக்குதாரருக்கு ஜீவ னாம்சம் தர விரும்பவில்லை என்பது அவரது வாதத்தில் தெளிவாக தெரிகிறது. இதுவே அவர் வழக்கு தாரருக்கு பொருளாதார ரீதியில் முறைகேட்டினை செய்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரமாக அமைகிறது.
வழக்குதாரருக்கும், எதிர் வழக்கு தாரருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குடும்ப உறவு இருந்துள்ளது. 3 குழந்தைகளும் உள்ளனர். ஒரே வீட்டில், வெவ்வேறு மாடியில் வசிக்கின்றனர். எனவே தற்போது அவர்களிடையே உறவு இருப்பதை காண்கிறேன்.
இப்போது அவர்கள் இடையே பிரச்சினை உள்ளதால், அந்த பெண்ணுக்கு வாழ்வாதார பிரச்சினை உள்ளது. அவருக்கு அதற்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு திரும்ப அனுப்பப் படுகிறது. அவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பாதுகாப்பு வழி முறைகளை, ஜீவனாம்ச தொகையை அந்த நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும். வழக்குதாரர் பாதுகாப்பு உத்தரவும், ஜீவனாம்ச உத்தரவும் பெற உரிமை படைத்தவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விடுதலை9.2.15,பக்கம்-2

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது
மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.
-விடுதலை,7.2.15,பக்கம்-8

கணவனின் வருவாயை அறிய மனைவிக்கு உரிமை உண்டு


கணவனின் வருவாயை அறிய தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனைவிக்கு உரிமை உண்டு
மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
புதுடில்லி, பிப். 8_ கணவனின் சொத்து விவ ரங்கள், முதலீடுகள் மற் றும் பிற சொத்துகள் உள் ளிட்ட பல்வேறு வருவாய் குறித்த தகவல்களை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனை விக்கு உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அளித்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.
குடும்ப வன்முறை பாதிப் புக்கு ஆளாகிய மனைவி யின் மனுவின்மீதான வழக் கில் மத்திய தகவல் ஆணை யம் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழக்கில் தனி நபர் வரு வாய் என்பது தனிப்பட்ட தகவல் என்று வாதிடப் பட்டது. அப்பெண்ணின் கணவன் பணிபுரியும் டில்லி டிரான்ஸ்கோ நிறு வனத்துக்கு கணவன் வருவாய் குறித்து, அவர் மனைவியின் வாழ்வாதார உரிமைக்குத் தேவையான தகவலை அளிக்க ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள் ளது.  தகவல் பெறும் உரி மைச்சட்டத்தின்கீழ் தனிப் பட்டவர்களின் தகவலை அளிக்கக்கூடாது என்பதி லிருந்து விதிவிலக்காக மனைவிக்கு கணவனின் வருவாய்குறித்த தகவல் அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் வரதட் சணையாக அளிக்கப்பட் டது உள்பட கணவனின் சொத்து விவரங்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன் றது, மனைவியை பொரு ளாதார ஆதரவின்றி கைவிட்டது உள்ளிட்ட வைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தகவல்களை மனைவி கேட்டுள்ளார்.
தீர்ப்பில் கூறும்போது, தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்காமல் பொதுப் பிரச்சினையாகவே இதைப்பார்க்க வேண்டும் என்று தகவல் ஆணையர் எம்.சிறீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, டில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்திடம் ஒரு பெண் கேட்டுள்ள தகவல் களை அளிக்காமல் தள்ளி விட முடியாது.
தனிநபர்குறித்த தகவல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, ஒரு அரசு அலு வலரின் பொதுவான கடமை என்பதில் குடும்ப வன்முறை என்றில்லாமல் மனைவி மற்றும் குழந் தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. கண வனின் வருவாய் குறித்த தகவலை மனைவிக்கு 48 மணி நேரத்துக்குள் டிரான்ஸ்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் கசம் சர்மா எதிர் மகிந்தர் குமார சர்மா வழக்கில் மத்திய தகவல் ஆணை யம் எடுத்துக்காட்டி உள் ளது. டில்லி உயர்நீதிமன்றம் கணவன் மற்றும் மனை வியின் வருவாய், சொத்து மற்றும் முதலீடுகள் குறித்த உறுதிமொழி ஆவணங் களை அளிக்க உத்தர விட் டது. அதற்கு முன்னதாக தனிப்பட்டவர்களின் தகவல் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
பொருளாதாரத்தில் சார்பு நிலைகுறித்தும், பெற்றோர்கள்  ஆதரவின் றியும், கணவனின் பரா மரிப்பு இன்றியும் உள்ள மனைவி, தன்னுடைய வாழ்வாதார உரிமையை சவாலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இத்தகவல்கள் மனைவி யின் வாழ்வாதார உரிமை யைப் பொருத்துள்ள தாகும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   - விடுதலை,8.2.15,பக்-8

ஒரு குழந்தைக்கு பெற்றோர் மூவர்-முதல் சட்டம்

ஒரு குழந்தைக்கு பெற்றோர் மூவர் என்பதற்கான முதல் சட்டம், பிரிட்டனில் நிறைவேற்றம்


லண்டன், பிப் 8- ஒரு குழந்தை பிறப்பதில் தொடர்புடையவர்களாக உள்ள  பெற்றோர் என் றால் தாய்,தந்தை என இருவர் மட்டுமே கருதப் பட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது கருத் தரிப்பில் மூன்றாவது நபரின் உதவியுடன்  பிறக்கும் பிள்ளைகளுக்கு மரபணுவில் தொடர் புள்ள வகையில் (டிஎன்ஏ) பெற்றோர் மூவர் என்று கூறும் சட்டத்தை முதல் முறையாக பிரிட்டன் நிறைவேற்றி உள்ளது. வெல்கம் டிரஸ்ட் எனும் மருத்துவ அறக் கட்டளையின் இயக்குநர் ஜெரெமி ஃபாரர் கூறும் போது, குழந்தையின் நலத்தில் அக்கறை கொண்டுள்ள குடும்பத் தினர் தெரிந்து கொள்ள வேண்டியது குழந்தையை பாதிக்கக்கூடிய கடும் நோய்குறித்து முடிவு செய்திட மைட்டோகாண் டிரியல் கொடை எனும் கரு வளர்ச்சிக்கான கொடையை சரியான வகையில் தேர்வு செய்ய ஏதுவாகும். ஆகவே, இந்த சட்டத்துக்கு ஆதரவளிப் பதன்மூலம் சரியான வகையில் தேர்வு செய் வதை வரவேற்கிறோம் என்றார். மருத்துவத்துறையினர் கூறும்போது, பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஏறக்குறைய 125 குழந் தைகள் குறைபாடுகளு டன் பிறப்பதாகக் கூறு கின்றனர்.
மதிப்பிட முடியாத தேர்வு
பிரிட்டனில் செயற் கைக் கருத்தரித்தல் மற் றும் கருவியல் நிபுணர்கள் அங்கீகரித்துள்ள முறை யில் ஆய்வு மய்யம் நியூ காஸ்ட்டல் நகரில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது.
பாரம்பர்ய நோய்களுக் கான நிறுவனங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சட்ட வரைவை ஆதரிக்கிறார்கள். மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் ஜான் டூக் என்பவர் கூறும்போது, மிகுந்த மகிழ்வடைந்துள்ளோம். இதுபோன்ற சிகிச்சை முறைகள்மூலமாக கரு விலேயே நோய் ஏற்படும் குழந்தைகளின் எண் ணிக்கையைக் குறைக்க ஏதுவாகும். பல குடும் பங்களின் மகிழ்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் வழிவகுக் கும். இன்று அளிக்கும் ஆதரவு வாக்கு என்பது பல ஆண்டுகளாக அறிவி யல் மற்றும் பொது மக்களின் வாதங்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது என்றார். நேர்மறை வாழ்வுக் கான நிறுவனத்தின் சார்பில் ஜோசப்பைன் குயூன்டாவாலி என்பவர் குழந்தைகளைப்பெறுவதில் உள்ள முறைகுறித்து கருத் தாகத் தெரிவிக்கும்போது, குணப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மனிதவாழ் வின் ஆரம்பத்திலேயே அழிவு முறையைக் கையா ளக் கூடாது என்றார்.
ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் சார்பில் இச் சட்ட மாற்றத்தை எதிர்த் துக் கூறும்போது, கரு விலேயே மனித இனத்தை அழிப்பதற்கான செயலின் ஒரு பகுதியாக இது உள்ளது என்று கூறப் பட்டுள்ளது.

இங்கிலாந்து சர்ச் சார்பில் நெறிசார்ந்த கவலையாகக் கூறும் போது, போதுமான வகையில் ஆராயப்பட வில்லை என்று கூறப்பட் டுள்ளது.