ஞாயிறு, 11 ஜனவரி, 2015

விபத்து இழப்பீட்டை நிர்ணயம் செய்ய

















பாலினம் அடிப்படையில் விபத்து 



இழப்பீட்டை நிர்ணயம் 



செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.30_ பாலின பாகுபாட்டின் அடிப்படையில் விபத்தில் பலியானவரின் குடும்பத் துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ய முடியாது என்றும், விபத்தில் பலியான பெண் ணின் பெற்றோருக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந் தவர் அருள்தாஸ். இவரது மனைவி டெய்சி. இவ ருக்கு இரண்டு மகள்கள். அதில், 23 வயதான முதல் மகள் தனது தோழியுடன் ஆலந்தூரிலிருந்து அண்ணாநகருக்கு மோட்டார் சைக்கிளில் கடந்த 2007- ஆம் ஆண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது மாநகரப் பேருந்து இருசக்கர வாக னத்தின்மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந் தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழி யில், அருள்தாசின் மகள் இறந்துவிட்டார். இதை யடுத்து, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு களை விசாரிக்கும் தீர்ப் பாயத்தில், அருள்தாஸ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசா ரணை செய்த தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.13.57 லட்சம் வழங்க சென்னை மாநகரப் போக் குவரத்து கழகத்துக்கு உத் தரவிட்டது. இந்த இழப் பீடு போதாது என்றும், இழப்பீடு தொகையை உயர்த்தி தரவேண்டும் என்றும் அருள்தாஸ் மற் றும் அவரது குடும்பத்தி னர் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தனர். அதேபோல, தீர்ப் பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை மாநகர அரசு போக்கு வரத்துக் கழகம் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுக்கள் நீதி பதிகள் எம்.ஜெய்ச்சந் திரன், அருணாஜெகதீசன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர்களின் மகள் 23 வயதில் இறந்துள்ளார். அவர் இறக்கும்போது, பி.பி.ஓ. நிறுவனத்தில் குழு தலைவியாக பணியாற்றி யுள்ளார். மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளம் பெற் றுள்ளார். இந்த சம்பளத் தொகை அடிப்படை யிலும், அவரது வயது, அவரது பெற்றோர்களின் வயது ஆகியவற்றின் அடிப் படையிலும் ரூ.13.57 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. ஆனால், மனு தாரர்கள் இறந்த பெண் ணைச் சார்ந்து வாழ்ந் துள்ளனர். அவரது மகள் சம்பளம், ஊக்க ஊதியம் என்று மாதத்துக்கு ரூ.19 ஆயிரத்து 500 பெற்றுள் ளார். விபத்தில் இறப்ப வர்கள் வாங்கும் ஊதியத் தின் அடிப்படையில் இழப்பீட்டை கணக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
அதே நேரம், போக்கு வரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில், மனுதாரரின் மகள் திரு மணமாகி கணவன் வீட் டுக்குச் சென்றுவிட்டால், அவர் தன் வருமானத்தை பெற்றோருக்கு கொடுக்க மாட்டார். அதனால், இழப்பீட்டு தொகையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால், தற்போதைய சமுதாயத்தில் மகன், மகள் என்ற பாகுபாடு இல்லா மல், அனைவரும் தங் களது பெற்றோரை கவ னித்து வருகின்றனர். தங்களது ஊதியத்தில் ஒரு தொகையை பெற்றோ ருக்குக் கொடுத்து வருகின் றனர். அதுவும், மகனை விட மகள்தான் பெற் றோரை அதிகமாக கவ னிக்கின்றனர். எனவே, போக்குவரத்து கழகத்தின் வாதத்தை ஏற்கமுடியாது. அந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
எனவே, பாலினத்தின் அடிப்படையில் பாகு பாட்டுடன் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்யமுடியாது. மனுதாரர் மகள் வாங்கிய ஊதியத் தின் அடிப்படையில், எனவே, மனுதாரர்களுக் கான இழப்பீடாக ரூ.17.13 லட்சமாக உயர்த்தி நிர் ணயம் செய்கிறோம். இந்த தொகையை, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்
விடுதலை30.12.14