ஞாயிறு, 2 அக்டோபர், 2016

”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்”

நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள். 
கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது.
அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான்.
தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :
***********************************************************************
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது.
திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.
இத்திட்டத்தில் பலனடைய வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக ”கலப்புத்திருமண தம்பதிகள் சங்கம்” எனும் அமைப்பு முன்வந்திருக்கிறது.
அந்த அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442927157
மேலும் சில விவரங்கள் :
*************************************
கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?
கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு.
இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை.
வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
நட்புடன் உங்கள் தோழி. ....!!!!!!!!!
திருவாரூர் ராஜநந்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக