அபுதாபி, ஜூன் 1_- ரம லானை முன்னிட்டு வரும் ஜுன் மாதம் 15ஆ-ம் தேதி யில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயி லின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட் டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்கு மாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு அய்க்கிய அரபு அமீரக அரசு உத்தர விட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ரமலான் வருவதால், நேர டியாக வெயிலில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் இந்த இரண்டரை மணி நேர ஓய்வினை கட்டாய மாக வழங்க வேண்டும். அவசர வேலை நிமித்த மாக தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டிய சூழ் நிலையில் தொழிலாளிக ளுக்கு தேவையான குடிநீர்,
குளிர்பானம் போன்ற ஏற் பாடுகளை செய்துதர வேண் டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டு களாக அமலில் இருந்து வரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வு அளிக்கப்பட வேண் டிய நேரத்தில் தொழிலா ளர்களை வேலையில் ஈடு படுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாள ருக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவ துடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என அய்க் கிய அரபு அமீரக அரசு வெளி யிட்டுள்ள செய் திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,1.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக