ஞாயிறு, 2 அக்டோபர், 2016

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்கள்!


#அறிந்து #கொள்வோம் 

#தொழிலாளர் #வருங்கால #வைப்புநிதி 

பிஎப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி உங்கள் ஓய்வு களத்தில் சேமிப்பாக உதவுவதுடன் மற்றும் பல்வேறு பயன்களையும் தருகிறது. 

தேவையான அளவு தொகையைப் பிஎப் கணக்கில் சேர்த்த நபர்கள் அதிலிருந்து முன்பணத்தைப் பெறவும், 58 வயதைக் கடந்திருந்தால் தங்கள் எல் ஐ சி பாலிசிக்கு நிதியளிக்கவும் அல்லது தங்கள் பி எப் கணக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியும்.

இவ்வளவு வசதிகள் இதில் இருப்பதால் நாம் இவற்றிற்கான விண்ணப்பப்படிவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை அறிந்திருப்பது அவசியமாகும்.
இதன் மூலம் இந்த நடைமுறைகள் எளிதாகவும் ஆகும்.

இழப்பீட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டிய பல்வேறு படிவங்கள் இதோ உங்களுக்காக :

1. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தனிநபர்
**************************************************************
படிவம் 31
****************
இந்தப் படிவம் ஒரு தனிநபர் தன் கணக்கிலிருந்து தனக்குத் தேவையான கடன், முன்பணம் அல்லது பணமெடுப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்குப் பயன்படும். கடன்கள் ஒருவருடைய தகுதியைப் பொறுத்து மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே படிக்க..

படிவம் 14
***************
ஒருவர் தன்னுடைய எல்ஐசி பாலிசி நிதிக்கு பிஎப் கணக்கிலிருந்து பணம் பெற இதைப் பயன்படுத்த வேண்டும்.
படிவம் 10டி இந்தப் படிவம் தன்னுடைய ஓய்வூதிய நிதி (பென்ஷன் பண்ட்) வைத்திருப்போருக்குத் தேவைப்படும்.
இந்த நிதியில் 10 வருடத்தை முடித்திருந்து ஒருவருடைய வயது 58-இற்கு மேல் இருந்தால் இந்தப் படிவத்தை நிரப்பி அதனை முடித்துக்கொள்ளலாம்.

படிவம் 10சி
******************
தன ஓய்வூதிய நிதியிலிருந்து பணமெடுக்க ஒருவர் 10 வருடங்களை அல்லது 58 வயதை கடந்திராவிடில் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

2) ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்தில் சேர்ந்த நபர்கள்
************************************************************************************************

படிவம் 13
****************
ஒருவர் தான் முன்பு பணிசெய்த நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குத் தன பி எப் கணக்கை மாற்றப் படிவம் 13 ஐ பயன்படுத்த வேண்டும்.

3) பணியை விட்டுவிட்டு எங்கும் பணியைத் தொடராதவர்கள்
********************************************************************************************

படிவம் 19
****************
ஒருவர் 10 வருடப் பணியை முடித்து ஆனால் வயது 50 வயதுக்குள் இருக்குமானால் அவர்கள் படிவம் 19 ஐ கொடுத்துக் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

படிவம் 10சி
******************
ஒருவர் தன்னுடைய ஓய்வூதிய நிதியில் இருந்து சான்றிதழையும் முடிவுறு தொகையையும் பெறப் படிவம் 10சி ஐ பயன்படுத்த வேண்டும்.
10 வருடப் பணிக்காலத்தை முடிக்காதவர்கள் கூட இதற்குப் படிவம் 19 மற்றும் படிவம் 10சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
படிவம் 10டி ஒருவர் 58 வயதைக் கடந்திருந்தால் படிவம் 10டி ஐ பயன்படுத்தலாம்.
ஆனால் 10 வருடப் பணிக்காலத்தை முடித்திருக்க வேண்டும்.

4) உடல் ஊனத்தால் பணியைத் தொடர இயலாமை
******************************************************************************
படிவம் 19 - ஓய்வூதியத் தொகையைப் பெற
******************************************************************
படிவம் 10டி - 58 வயதுக்குக் குறைவான ஆனால் 10 வருடம் பணி நிறைவு செய்தவர்கள் - ஓய்வூதியப் படிவம் 10டி மூலம் மாதாந்திர உறுப்பினர் ஓய்வூதியம் பெறலாம்.
படிவம் 10சி வயது 58- க்குள் இருக்கும் 10 வருடப் பணி நிறைவு செய்யாதவர்கள் ஓய்வூதியப் படிவம் 10 சி நிரப்பி ஓய்வூதிய நிதி முடிவுறு பலன்களைப் பெறலாம்.

நட்புடன் உங்கள் தோழி. ..!!!
திருவாரூர் ராஜநந்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக