வியாழன், 29 டிசம்பர், 2016

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் 


ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் குறைவாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 12_ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழான சம்பளமானது, மாநில அரசுகள் நிர்ண யித்துள்ள, குறைந்தபட்ச சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.

மேல்முறையீடு

ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் சம்பளம், விவசாய தொழிலாளர் களுக்காக, கருநாடக மாநில அரசு நிர்ணயித் துள்ள, குறைந்தபட்ச சம்பளத்தைவிட, குறை வாக இருக்கக் கூடாது என, 2011 செப்டம்பர், 23 இல், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டது.

குறைந்தபட்ச சம்பளத்தைவிட குறைவாக இருக்கக் கூடாது

இந்த மனுவை விசா ரித்த, நீதிபதிகள் முகோ பாத்யாய் மற்றும் பாப்டே ஆகியோர் அடங்கிய, அமர்வு பிறப்பித்த உத் தரவு வருமாறு:

விவசாய தொழிலாளர் களுக்காக, ஒவ்வொரு மாநில அரசும், குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ண யித்துள்ளன. அதனால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரி வோருக்கு வழங்கப்படும் சம்பளமானது, மாநில அரசுகளால் நிர்ணயிக் கப்பட்டுள்ள, குறைந்த பட்ச சம்பளத்தை விட குறைவாக இருக்கக் கூடாது. இவ்வாறு, நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரி வோருக்கு, மத்திய அரசு வழங்கும் சம்பளமானது, 118 ரூபாய் முதல் 181 ரூபாய் என்ற அளவில், மாநிலத் திற்கு மாநிலம் வேறுபடு கிறது.

இந்தச் சம்பள மானது, ஆறு மாநிலங் களில், அம்மாநில அரசு களால், விவசாய தொழி லாளர்களுக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ள, குறைந்த பட்ச சம்பளத்தை விட குறைவாக உள்ளது. அதே நேரத்தில், 14 மாநிலங் களில், மத்திய அரசு வழங்கும் சம்பளமானது, அதிகமாக உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,12.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக