ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து சட்ட விரோதமானது அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு


அலகாபாத், டிச. 9 -“முஸ்லிம்கள் மத்தியிலுள்ள, மும்முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவா கரத்து செய்யும் நடைமுறை, சட்ட விரோதமானது என்பதுடன், குரான் போதனைகளுக்கே அது எதிரானது” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், “அரசியல் சாசனத்தைக் காட்டிலும், தனி நபர் சட்ட வாரியம் அதிகாரம் பெற்றது அல்ல” என்றும் நீதிபதி சுனீத் குமார் கூறியுள்ளார்.முஸ்லிம் சமு தாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அங்கீகரிக்கிறது.
ஆனால், தற்போது ‘முத்த லாக்’ முறைக்கு எதிராக, முஸ் லிம் பெண்கள் மத்தியிலேயே விவாதம் எழுந்துள்ளது. ‘முத்த லாக்’ முறை, இஸ்லாமிய பெண் களின் வாழ்க்கையில் ஒரு நிச்சய மற்ற தன்மையை ஏற்படுத்து வதுடன், அவர் களின் உரிமையை அவமதிப்பதாக- பறிப்பதாக உள்ளது என்று மாதர் அமைப்புக் களும் கூறி வருகின்றன. இதை யொட்டி வழக்குகளும் தொடரப் பட்டு உள்ளன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத் உயர்நீதிமன்றத் தில் தொட ரப்பட்ட வழக்கு ஒன்று, வியாழ னன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுனீத் குமார், விவாதத்தின் இடையே பேசினார்.அப்போது, “மும்முறை ‘தலாக்’ கூறிவிவா கரத்து செய்யும் முறை, அல்லது ‘உடனடி விவாகரத்து’ முறை யானது மிகவும் கொடூரமானது, நீதித்துறையின் மனசாட்சி, இந்த ‘தலாக்’ முறையினால் தொந்தரவு அடைந்துள்ளது” என்று குறிப் பிட்ட நீதிபதி சுனீத் குமார், “கணவர் ஒருவர்தன்னை விட பாதி வயது குறைந்த வர் மீது கவரப்பட்டுள்ளார் என்றகாரணத் திற்காக, தவறே செய்யாத முதல் மனைவி வேறொரு வாழ்க்கை யை வாழ வேண்டியுள்ளது; முஸ்லிம் கணவர் ஒருவிதமான அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு உடனடி விவாகரத்து என்ற தீமையை பெண்கள் மீது செலுத்துவது இஸ்லாமிய போதனைகளுக்கே விரோத மானது” என்று தெரிவித்தார்.
“இஸ்லாத்தில் விவாகரத்து என்பது மிக மிக அவசரகாலத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; இருவரையும் சேர்த்து வைக்கும் அனைத்துவிதமான முயற்சிகளும் சாத்தியங் களும் தோல்வியடைந்த நிலையில் மட்டுமே இருதரப்பி னரும் தலாக் முறைக்குச் செல்ல அனுமதிக்கிறது; அப்படியிருக்க, இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரானின் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “குரான் சட்டங் களின் படி முஸ்லிம் ஆணுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது என்று ஒரு பொதுப்புத்தியில் பதியப் பட்ட தப்பு அபிப்ராயம்தானே தவிர, உண்மையில், குரான் போத னைகளின்படி இதுபோன்ற மோசமான அதிகாரத்தின் மூலம் திருமணங் களைக் கலைப்பதற்கு இடமே இல்லை” என்ற சுனீத் குமார், “சில பலமதகுருமார்கள், தங்களுக்கு சாதகமாக அளித்துள்ள குரான் விளக்கங் கள் மூலம், இனியும் தந்தை வழிஆதிக்கப் பிடிகளில் பெண் சமு தாயத்தை வைத்திருக்க முடியாது” என்றும் திட்டவட்டமாக கூறினார்.
-விடுதலை,9.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக