ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஜாதி பாகுபாடு கூடாது

பாராட்டத்தக்க கருநாடக அரசின் ஆணை கோயில்களில் ஜாதி பாகுபாடு கூடாது ஒவ்வொரு கோயிலிலும் விளம்பரப் பலகை

பெங்களூரு, நவ.24 கருநாடக அரசின் முசுராய்த் துறையின் (அறநிலையத் துறை) கீழ் உள்ள 34,453கோயில்களின்நுழைவாயிலில் ‘‘கோயில் களில் ‘கடவுட் காட்சி’ (தர்ஷன்) என்பது ஜாதி, இனம், மதம், பால் கடந்த அனைவருக்கும் பொதுவானது’’ என்று  எழுதப்பட்ட அறிக்கைப் பலகைகளை வைக்க வேண்டுமென்று கருநாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கருநாடகத்தில் உள்ள கோயில்கள் சிலவற்றுள், சில ஜாதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், சில ஜாதியினருக்கு நுழைவு மறுக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளதாக எழுப்பப்படும் குற்றசாட்டுகள் அரசின் கவனத்திற்கு வருவதன் அடிப்படையிலேயே இந்த  அறிவிப்பு வெளியாகி உள்ளது. முசுராய்த் துறையின் துணை ஆணையர்கள் இதனைத் தங்கள் வரம்பிற்குள் வரும் கோயில்களில் உடனே நிறைவேற்ற வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது.
”கோயிலினுள் வழிபட வருவோரிடையே எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதும், அனைவரும் சமமாகவே பாவிக் கப்பட வேண்டுமென்பதும், மக்கள் அனை வரும் எந்தவிதத் தடையும், அச்சமும் இன்றிக் கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்த ஆணையின்  நோக்கம்’’ என்று துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“மாநிலத்தில் உள்ள தனியார் கட்டுப் பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத் துக் கோயில்களும் மக்கள் இறையுணர்வுடன் வந்து செல்லும் இடங்களே. கடவுளின் அருளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பக்த னுக்கும் உரிமை உண்டு. கடவுளின் முன் னால் அனைவரும் சமமே. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 15 ஆவது பிரிவில்,அரசுகுடிமக்களைமதத்தின்பெய ராலோ,ஜாதியின்பெயராலோ,இனத்தின் பெயராலோ, பாலினத்தின் அடிப்படையிலோ பிறப்பிடத்தின் அடிப்படையிலோ பாகு படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட எந்தக் கோயி லாவது எவருக்காவது கோயில் நுழைவைத் தடுக்குமாயின் அது சட்டத்திற்குப் புறம் பானது’’ என இந்த ஆணை எச்சரித்துள்ளது,.
கடந்தஅக்டோபர் திங்களில் உடுப்பி யில் உள்ள கோயிலில் ஜாதிப் பாகுபாடு நிலவுவதைக் கண்டித்து சில முற்போக்கு அமைப்புகள் “சலோ உடுப்பி’’ இயக்கத் தைத் தொடங்கியதை அடுத்தே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.அந்தக்கோயிலைஆளும்மடங் களில்“பங்கிபேதம்’’(பந்தியில்பாகு பாடு) கடைப்பிடிக்கப்பட்டுப் பார்ப்பனர் களுக்கெனத் தனிப் பந்தி ஏற்பாடுகள் நடை முறையில் இருப்பதைக் கண்டித்து அந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பழக்கத்தை மறுக்க முற்பட்ட  அந்த மடங்களின் தலைவரான பெசாவர் மடத் தலைவர் விசுவேச தீர்த்தர்,  உணவுக்கு முன்னர் சில சடங்குகளை மேற்கொள்ளும் சில பிராமணர்கள் தங்களுக்குத் தனிப் பந்தி விரும்பியதாலேயே அந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்றும், பொது வாகப் பந்திப் பாகுபாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த மடத்தின் நடவடிக்கையை நேரடி யாகக் கண்டிக்காமல், பொதுவாக இந்தப் பழக்கங்களை ஒழித் திடும் வகையில் ஆணையைக் கருநாடகஅரசு பிறப் பித்து, உடுப்பி மடங் களையும் ஆணையின் வரம்புக்குள் கொண்டு வந்து விட்டது.
இத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களுள் மிகப் பெரும்பான்மையா னவை பிஜேபியினர் மிகுதியாக உள்ள தென்கன்னட, உடுப்பி  கடற்கரை மாவட்டங்களிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நிலவிடும் பாகு பாடுகளை மேற்கண்ட ஆணையின்வழி உடைத்து, பிற்படுத்தப் பட்டோர், தலித்துகள், சிறுபான்மையோர் வாக்குகளைக் கவரவே இந்த ஆணையை அரசு பிறப்பித்துள்ளதாகவும் சிலர் கூறுகின் றனர். சித்தராமய்யாவின் அரசுக்குக் களங்கம் கற்பிப்பதில் முக்கியமாக இருக்கும் சங் பரிவாரத்தினர் கூற்றே இது.
இந்த ஆணை முழு முயற்சியுடன் செயற்படுத்தப்படுமானால் வழிபாட்டு முறைகளில் சமூகநீதிக்கு வழி பிறக்கும் என்று நம்பலாம். ஆகமங்களின் பெயரால் இந்த  ஆணைக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கருநாடக அரசின் கடமை  ஆகும்.  கோயில்களில் கடவுள்களின் பெயராலும், சாத்திர- சடங்கு களின் பெயராலும் தலை விரித்தாடும் பார்ப்பன மேலாண்மை தகர்க்கப்படுவதற்கு இந்த ஆணை வழி வகுத்திடுட வாய்ப்பு உண்டு.
தீண்டாமை ஒழிப்புச் சட்டம், பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம் போன்ற இன்ன பிற சட்டங்களைப்  போல இந்தச் சட்டமும் அவசியமானதே!
எனினும் மக்களால் நம்பப்படும் கடவுள்களால்  ஒழிக்க இயலாத சமூக அநீதி யையும், பார்ப்பன மேலாண்மையையும் அரசாணைகள் வழித் தொலைத்திட மேற் கொள்ளப்படும் முயற்சிகள் விடவும், சமூகஅநீதிக்குக்காவலரண்களாகத்திகழும் கோயில்களையும்  அங்குக் குடி கொண்டி ருப்பதாக நம்பப்படும் கடவுள்களையும்  புறக்கணிப்பதே உண்மையான மாந்த உரிமைக்கும் சமூகநீதிக்கும்  வழிவகுக்கும் என்பதே பெரியாரியல் காட்டும் நல்வழியாம்.
தகவல்: முத்து.செல்வன்
-விடுதலை,24.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக