சென்னை, ஆக.21 மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீமின்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன் முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய் திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.8.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப் படுத்தப் படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது. மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகு பாடும் காட்ட கூடாது எனவும், அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் 18 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இது வரை சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி பணி குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் 60 கிரா மங்களில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணி களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக் கான தடுப்பூசி பங்கீட்டை 90 விழுக்காடு ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 10 விழுக்காடு ஆகவும் வழங்க வேண்டும் எனறு கூறினார்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,ஆக.21- தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த கரோனா பாதிப்பு, சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது தொடர் பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவ மனைகளில் 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 663 பேர் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 621ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 199ஆக பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக