புதன், 4 ஜூலை, 2018

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெற பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு


பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று (29.6.2018) விதி எண் 110இன் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதில், பத்திரிகையாளர் பெற்று வரும் ஓய்வூதியத்தை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் கடந்த ஆண்டு  அரசு உயர்த்தி வழங்கியது. மேற்படி ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு, 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்கள் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 50 ஆயிரம் ரூபாய் நிதி யுதவி, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 30.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக