டெகராடூன், ஜூலை 13 உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சில ஜாதியினரை, பழங்குடியின மக்களை கோவிலில் பூஜைகள் செய்யவும், வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் உத்தர காண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறும்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கோவில்கள் மற்றும் ‘‘புனிதத்'' தலங்களில், தாழ்த்தப்பட்ட வகுப் பினர்களுக்காக, உயர்வகுப்பு பூசாரிகள், பூஜைகள், சடங்குகள் செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு வகுப்பினரும் எந்த தடையும் இன்றி, உத்தரகாண்ட்டில் இருக்கும் கோவில்களுக்குச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், பயிற்சி பெற்ற எந்த ஒரு நபரும் ஒரு கோவிலின் அர்ச்சகராக, பூசாரியாக செயல்படுவதற்கு அவருடைய வகுப்பு ஒரு தடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள் -- உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் லோக் பல் சிங்.
பார்ப்பனர்கள்
எதிர்ப்பு
ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர் விற்காக புரட்சிகர சிந்தனையை விதைத்த சந்யாசியான ரவிதாஸ் என்பவரின் கோவில் அரித்துவாரில் உள்ள பிரபல சிவன் கோவிலுக்கு அருகே உள்ளது. ரவிதாசை வழிபட வரும் உயர்ஜாதியல்லாதவர்கள் சிவன் கோவிலின் படிகளில் ஏறித்தான் ரவிதாஸ் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவார்கள். இவ்விவகாரம் தொடர்பாக சிவன்கோவில் பார்ப்பனர்களும், சில உயர் ஜாதியினரும் நீண்ட ஆண்டுகளாகவேஎதிர்ப்பு தெரிவித்துவந்தனர். படிகளை சேதப்படுத்து வதும், ரவிதாஸ் கோவிலின் கதவுகளை சேதப்படுத்தி அதை திறக்காத வண்ணம் செய்துவந்தனர். இந்த விவகாரம் நீதிமன் றத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று ரவிதாஸ் கோவிலுக்குச் செல் லும் படிகட்டுகளை அகற்றிவிட்டு, புதிய பாதை சிவன்கோவிலுக்கு மட்டும் செல்லுமாறு அமைத்தனர். இதனால் ரவி தாஸ் கோவிலுக்குச் செல்ல முடியாமல் போனது. இதனை அடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரில் சென்று பார்வையிட்ட நீதிமன்றம்
நீதிமன்றம் இந்த வழக்கை விசா ரணை செய்தது. மேலும், நேரில் சென்று மாற்றப்பட்ட படிகட்டுகளைப் பார்வை யிட்டது. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாதை மாற்றப்பட்டது மட்டுமின்றி ரவிதாஸ் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கங்கைக்குச் சென்று வழிபடும் பாதையும் தடுக்கப்பட்டிருந்தது. உத்தரகாண்டில் புதி தாக அமைந்த பாஜக அரசு கங்கையில் குளித்துவிட்டு ராமதாஸ் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்க முனைந்து இந்த பாதகச் செயலைச் செய்திருந்தது.
அரசமைப்புச் சட்டம்
17 இன்படி குற்றமே!
இதை நேரில் கண்ட நீதிமன்ற பிரதி நிதிகள் நீதிபதிகள் முன்பு சான்றுகளுடன் எடுத்துரைத்தனர். மேலும் இது அரசமைப்புச் சட்டம் பிரிவு 17அய் கடுமையாக மீறும் செயலாகும்.
கோவிலுக்கு பெரும்பான்மையான மக்கள் வரும்போது குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தடுப்பது நீதியாகாது. அரசமைப்புச் சட்டம் 17- இன்படி கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் அனைவருக்கும் பொதுவானது.
இது குறித்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ‘‘கங்கையில் பெரிய அளவில் பல மதத்தினர், வகுப்பினர் குளிக்கின்றனர். அதேபோல் அனைத்துக் கோவிலிலும் அனைவரும் வந்துவழிபடுகின்றனர். இதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் கோவிலின் பாதை யைப் பயன்படுத்தி அவர்கள் வழிபடும் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று படிகட்டு களை உடைப்பதும், பாதையை மாற்றுவதும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
மாவட்ட நிர்வாகம் சேதப்படுத்தப்பட்ட படிகட்டுகளை மீண்டும் சரி செய்து தடை செய்யப்பட்ட வகுப்பினர் அங்கு வருவதை உறுதி செய்யவேண்டும். அவர்களை யாரும் தடை செய்வதை அனுமதிக்கக் கூடாது, மேலும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வகுப் பினர் கங்கையில் இறங்குவதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட அனைத்துத் தடைகளையும் அகற்றவேண்டும். அரித்துவார் என்பது அனைவருக்குமான ஒரு நகரமாகும். இங்குள்ள தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்குமானது.குறிப்பிட்ட வகுப்பினர் நுழைவதை மறைமுகமாக நிறுத்த கட்டப்பட்ட, அனைத்துத் தடைகளையும் உடனடியாக அகற்றவேண்டும்.
சட்டத்தின்முன்
அனைவரும் சமமே!
பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை, மேலும் பிறர் பூசை செய்வதை தடுக்கவும் கூடாது, எந்த சமூகத்தினர் ஆனாலும் மரியாதை தந்தே ஆகவேண்டும், அவர்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். நமது அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15(2) 17 19, 21,25,29(2),38, 46, மற்றும் 51-கி போன்றவைகள் சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால் நன்கு பயிற்சி எடுக்கப்பட்ட, பூஜை முறைகளை நன்கு கற்ற யார் வேண்டுமானாலும் பூசாரி களாக பூஜைகள் செய்ய எந்த கோவிலிலும் அனுமதிக்கப்படவேண்டும், இதை உச்சநீதி மன்றமும் உறுதிபடுத்தியுள்ளது, சட்டத்தின் முன்பு கோவில் மற்றும் பூசாரிகளும் ஒன்று தான்.
மேலும் நீண்ட நாட்களாக பராமரிக் கப்படாத ரவிதாஸ் கோவிலை மாநில அரசு முன்னின்று பழுதுகளை சரிபார்த்து கோவிலை நன்கு பராமரிக்க தன்னுடைய மேற்பார்வையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் குழுவில் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியை ஊட கங்கள் மற்றும் பிரதிகள் மூலம் அனை வருக்கும் தெரிவிக்கப்படவேண்டும், கோவி லிலும் தெளிவாக எழுத்துமூலம் எழுதி ஒட்டப்படவேண்டும்'' என்று தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர்.
- விடுதலை நாளேடு, 13.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக