புதுடில்லி,ஜன.3 அவசர சட்டத்தை மீண்டும் மீண்டும் பிறப்பிப்பது அரசியலமைப்பு சட்டத்தை வஞ்சிக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவசர சட்டங்களை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளின் பரிசீலனைக்கு வைப்பது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அப்படி வைக்க தவறுவது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளனர். அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது அரசியல் சட்டத்தை வஞ்சிக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர். அவ்வாறு மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கு குடியரசு தலைவரோ, அல்லது மாநில ஆளுநரோ அளிக்கும் ஒப்புதல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தான் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
-விடுதலை,3.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக