நாமும் சட்ட முறைமையும்

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

1956 வாரிசுரிமைச் சட்டத்துக்கு முன்பாக தந்தை இறந்திருந்தாலும் தந்தையின் சொத்துகளுக்கு மகள் முழு உரிமை கோரலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!



   January 22, 2022 • Viduthalai

புதுடில்லி,ஜன.22- தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ஆம் ஆண்டுக்கு முன்னரும் செல்லு படியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத் தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. 

இதன்பின் கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-இல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் படி, மூதாதையர்களின் சொத்தில் மகள் களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ஆம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்பத் தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என கோரினார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு  20.1.2022 அன்று தீர்ப்பு வழங்கியது.


 அதில், ‘1956-இல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு’ என அறிவித்தனர்.

ஆண் வாரிசு இல்லாத பட்சத் தில் தந்தையின் சொத்துகளுக்கு மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பர பரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள் ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் தந்தையின் சொத்துக்களுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், தந்தையின் சகோதரனின் மகனுக்கு உரிமை கோர அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதி முராரி தலைமையிலான அமர்வு பிறப் பித்த உத்தரவில், தந்தையின் விருப்ப உயில் இல்லாத சொத்து களுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சொத்து உரிமை, தீர்ப்பு, பெண்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

இலங்கை அகதிகள் முகாமை இனிமேல் "மறுவாழ்வு முகாம்" என அழைக்க அரசாணை வெளியீடு


August 29, 2021 • Viduthalai

பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,  ஆக. 29 சட்டப்பேரவையில், திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேற்று (28.8.2021) பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர் களுக்கான அடிப்படைதேவைகள், கல்வி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பி னர் பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று குறிப் பிட்டார். இன்றுமுதல் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று கூறாமல், "மறுவாழ்வு முகாம்" என்று கூற வேண்டும். அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்க ளுக்கு துணையாக நாம் இருக்கி றோம். எனவே, அகதிகள் முகாம் என்று அழைக்காமல் "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்" என்று அழைக்க வேண்டும்என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கடலூர் தொகுதி திமுக உறுப்பினர் அய் யப்பன் பேசும்போது, முதலமைச் சர் உள்ளிட்டவர்களை பாராட் டினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு, உறுப்பினர் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மனதில் வைத்துக்கெண்டு பேச வேண்டும். நேற்று (28.8.2021)கூட புகழ்ந்து பேசுவதை ஓரளவு குறை வாக வைத்துக் கெள்ளுங்கள் என்றுகட்டளையாகவே கூறியிருக் கிறேன். இப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். அதனால் தயவுசெய்து விவாதத்துக்கு செல்லுங்கள். விரை வாகப் பேசி முடியுங்கள் என்று கேட்டுக் கெண்டார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:58 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரசாணை, இலங்கை அகதிகள் முகாம்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தாய் பெயரை 'இனிசியலாக' பயன்படுத்த உரிமை உண்டு: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

 

   August 07, 2021 • Viduthalai

 புதுடில்லி,ஆக.7-'தாயின் பெயரையும் 'இனிசியலாக' பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  (6.8.2021) விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரேகா பாலி விசாரித்தார். மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டதாவது:

என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிசியலாக மாற்றப்பட்டுள்ளது; இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி உத்தரவிட்டதாவது:குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிசியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி அம்மனுவை தள்ளுபடி செய்தார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:43 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆணை, இனிசியல், நீதிமன்றம்

வியாழன், 22 ஜூலை, 2021

மருத்துவ படிப்புகளில் அ.இ.ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்

 

July 19, 2021 • Viduthalai

 சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 19 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 69 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, உள்ளிட்ட கட்சி களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண் டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்சநீதிமன் றத்தில்  நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத் தரவு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தும், அதை அமல்படுத்த வில்லை எனவும், இது  நீதிமன்ற  அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக் குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்

மேலும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஒன்றிய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தர வின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்தப்படும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசார ணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:49 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இட ஒதுக்கீடு, நீதிமன்றம், மருத்துவ படிப்பு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு!

 

July 21, 2021 • Viduthalai

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 21- குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவு களை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற் பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020இல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின் பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், 2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது என்றும், ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்து விட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்களில் தமிழ் வழி யில் படித்ததற்கான சான் றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர் கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 2020 டிஎன்பி எஸ்சி குரூப் 1 முடிவிலி ருந்து 1 வகுப்பு முதல் பட் டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:11 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஒதுக்கீடு, தமிழ்வழி, தீர்ப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!!

 

July 21, 2021 • Viduthalai

புதுடில்லி, ஜூலை 21 தமிழ் நாட்டில் மருத்துவப் படிப் பில் அரசு பள்ளி மாண வர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இந்த சட்டத் திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்க ளுக்கும் இதே உள் ஒதுக் கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங் கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதங்களை ஏற் றுக்கொண்ட நீதிமன்றம், 7.5சதவீத  உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள் ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதி ராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்சிறீ என்ப வர் தரப்பில் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டது. அதில்,’ 12ஆம் வகுப்பு மட்டுமே அரசு பள்ளியில் படித்திருந்தாலும் அந்த மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் திருச்சியைச் சேர்ந்த ஜோனிஸ்ராஜ் என்பவர் தரப்பிலும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,’ தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்  ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் இந்த சட்டத்தை உடன டியாக ரத்து செய்யவேண் டும் எனத் தெரிவித்திருந் தார்.

இந்த நிலையில் மேற் கண்ட மனு உச்ச நீதிமன் றத்தின் நீதிபதிகள் நாகேஸ் வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில்,’  அரசு பள்ளியில் படித்த மாண வர்களுக்கு மட்டும் மருத் துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்தது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதனால் மேல்முறை யீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம்,’என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள், முத லில் உயர்நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உள்ஒதுக்கீடு, தீர்ப்பு, பள்ளி

செவ்வாய், 6 ஜூலை, 2021

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு (அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது - உச்சநீதிமன்றத் தீர்ப்பு)


June 04, 2021 • Viduthalai

 அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது - உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ்   U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

தேசத்துரோக வழக்கு செல்லாது

ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத் துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 'கோவிட்' என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, அப்பத்திரிகையாளர்மீது 124A செக்ஷன் (Sedtion) என்ற  தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது செல்லாது; பிரதமர் மோடி அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகையாளர்  விமர்சிப்பது தேசத்துரோகத்தின் கீழ் ஒரு போதும் வராது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பது, உடனடியாக அதற்குத்தக்க பரிகாரம் தேவை; நிலைமைகளைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தானே தவிர, வேறு நோக்கத்தோடு அல்ல. எனவே, அது ஒரு போதும் அரசுக்கு எதிரான தேசத் துரோகக் குற்றம் ஆகாது என்பதும், இமாச்சல அரசின் இதன் மூலம் மக்களிடையே இவர் பீதியைக் கிளப்பினார் என்ற குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தைக் கூறிய பத்திரிகை யாளர் வினோத்துவாமீது, வீடியோ பரப்பிய 37 நாள்களுக்குப் பிறகு பா.ஜ.க. அரசில் ஒருவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது.

இ.பி.கோ 124A  மற்றும் அவதூறு பிரிவுகள் இ.பி.கோ. 501, 505 ஆகிய செக்ஷன்களின் கீழ் இப்படி வழக்குப் பதிவு செய்தது செல்லாது; இந்த நீதிமன்றம் (உச்சநீதிமன்றம்) அதனை ரத்து செய்கிறது.

1962லும் தீர்ப்பு....

1962ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் கேதார்நாத்சிங் என்பவர் வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தேசத் துரோகக் குற்றச்சாற்றுகள் பற்றிய வழக்கில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலும், அதையொட்டி வந்த பல தீர்ப்புகளின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர் வன்முறையை தூண்டுபவராக  அரசுக்கு எதிராக அவர் கருத்து அமைந்தால் மட்டுமே குற்றச்சாற்றாக ஏற்க இயலும்.

அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்க எந்த  குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் தெளிவாக விளக்கியிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்

ஜனநாயகம் என்ற மக்களாட்சியில், ஆளுவோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்; அவர்கள் பாதை தவறும் போதோ அல்லது அதிகார அத்துமீறலுக்கு ஆளாகும் நிலைகளை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோ, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் எடுத்து வைக்கும் விமர் சனங்களையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே 124A தேசத் துரோகம் - அரசுக்கு எதிராக 501, 505 போன்ற இ.பி.கோ. பிரிவுகளின்கீழ் வழக்குகள் போடுவது ஏற்புடைத்தல்ல.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும். (குறள் - 448)

ஆளுவோர் - அவர்கள் எக்கட்சியின ராக இருந்தாலும், உள்நோக்கம் இல்லாமல் செய்யப்படும் வரை எந்த விமர்சனங்களையும் அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் - குற்றமாக அதைக் கருதக் கூடாது வரவேற்கவே வேண்டும். தங்களது போக்கில், நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான், உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை

கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக ஒவ்வொரு குடிமகனுக்கும் - மகளுக்கும் வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் மீது ஆட்சிப் பொறுப்பேற்கும் ஆளுவோர் அரசியல் சட்டம்மீது பிர மாணம் எடுப்பதன் தத்துவம் அப்போதுதான் பொருள் உள்ளதாக அமையும்

சிறப்பான தீர்ப்பு இது. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளது. ஜனநாயக காப்புரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பை வரவேற்கிறோம்.

 கி.வீரமணி

 தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை     

4.6.2021               

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:20 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரசு, அறிக்கை, தேச விரோதம், விமர்சனம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

நீதி

நீதி
சட்டம்
Powered By Blogger

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திருமணமான பெண்களும் வாரிசு வேலை கோரலாம்!
    பிலாஸ்பூர், டிச.7 அரசு துறையில், வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும், கருணை அடிப்படை வேலையை, திருமணமான பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, சத்...
  • பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு மசோதா நிறைவேறியது
    புதுடில்லி, மார்ச் 11 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு ...
  • அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்
    சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்து விட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், த...
  • ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்”
    # கலப்பு   # திருமணம் நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள்.  கலப்பு திருமணம் அல்லது கா...
  • அறிவோம் சட்டம் -(3) பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்...
  • பிறப்பு இறப்பு சான்றிதழ்.பெற ....
    # அறிந்து   # கொள்வோம் இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்க...
  • மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
    மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்: 20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய...
  • முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?
    வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது...
  • தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி
    சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமு...
  • சம வேலைக்கு சம ஊதியம்! தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு
    டில்லி, அக்.29  நிரந்தரப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப்போன்றே தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர...

லேபிள்கள்

  • 10.5%
  • 3.5 சதவீத இடஒதுக்கீடு
  • அடிப்படை உரிமை
  • அடிப்படை கடமைகள்
  • அமல்
  • அய்.நா உடன்படிக்கை
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் பணி
  • அர்ச்சகர்கள் நியமனம்
  • அரசாணை
  • அரசியல் உரிமை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு ஆணைகள்
  • அரசு இடம்
  • அரசு மருத்துவர்
  • அரசு வேலை
  • அரசுப் பணி
  • அரசுப்பணி
  • அறநிலையத்துறை
  • அறிக்கை
  • அனுமதி
  • அனைத்து சாதியினர் அர்ச்சனை
  • ஆக்கிரமிப்பு
  • ஆக்கிரமிப்பு கோயில்
  • ஆட்டம்
  • ஆணை
  • ஆணைத்தடை
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இந்திய அரசமைப்பு
  • இந்திய அரசியலமைப்பு
  • இந்திய சட்டம்
  • இலங்கை அகதிகள் முகாம்
  • இன பேதம்
  • இனிசியல்
  • உச்சநீதிமன்றம்
  • உச்சவரம்பு
  • உடல் உறவு
  • உடலுறவு
  • உடன்படிக்கை
  • உத்தராகாண்டு
  • உயர்நீதிமன்றம்
  • உயிரற்ற உடல்
  • உயில்
  • உரிமம்
  • உரிமை
  • உரிமைகள்
  • உலக அமைதி
  • உழைப்பு
  • உள்ஒதுக்கீடு
  • ஊக்க மதிப்பெண்
  • ஊடகம்
  • ஊதியம்
  • ஒதுக்கீடு
  • ஓய்வூதியம்
  • கட்டாயம்
  • கணவரை இழந்தவர்
  • கருக் கலைப்பு
  • கருக்கலைப்பு
  • கருணைப்பணி
  • கல்வி
  • கல்வி உதவித்தொகை
  • கல்வியில் பாகுபாடு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கற்பழிப்பு
  • காவல்துறை
  • காவிரி
  • காழ்ப்புணர்ச்சி
  • குடந்தை கருணா
  • குடிமக்கள் உரிமை
  • குடியுரிமை
  • குடும்ப வருமானம்
  • குழந்தை
  • குறத்தி
  • குறவன்
  • குறைந்த அளவு
  • கூடும் உரிமை
  • கேரளா
  • கொத்தடிமை
  • கொலை
  • கோயில்
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சபரிமலை
  • சமூகம்
  • சர்வதேசிய பிரகடனம்
  • சாதி சான்றிதழ்
  • சாதி மறுப்பு
  • சாதி மறுப்பு திருமணம்
  • சான்றிதழ்
  • சித்திரவதை
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுரண்டல்
  • சுற்றறிக்கைகள்
  • செல்லும்
  • சொத்து
  • சொத்து உரிமை
  • சொத்துரிமை
  • சொந்தம்
  • சோசலிசம்
  • சோம்பேறி
  • தகவல் அறியும் சட்டம்
  • தடை
  • தண்டனை
  • தத்து
  • தத்தெடுக்கும் உரிமை
  • தத்தெடுப்பு
  • தமிழ்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ்வழி
  • தமிழில்
  • தலித்
  • தனிநபர்
  • திராவிடர் இயக்கம்
  • திருத்த சட்டம்
  • திருத்தம்
  • திருமணம்
  • திருமணமான பெண்
  • திறந்தவெளி பல்கலை
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்ப்புகள்
  • தெலுங்கு மொழி
  • தேச விரோதம்
  • தேசியக் கொள்கை
  • தொழிலாளர்
  • நடவடிக்கை
  • நரிக்குறவர்
  • நாத்திகன்
  • நியமனங்கள்
  • நீதிக்கட்சி ஆட்சி
  • நீதிபதிகள்
  • நீதிமன்ற ஆணை
  • நீதிமன்றஆணை
  • நீதிமன்றம்
  • நூல்கள்
  • நோ பார்க்கிங்
  • பங்கு
  • பட்டினி
  • பணிக்கொடை
  • பத்திரப்பதிவு
  • பதவி உயர்வு
  • பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பறிப்பு
  • பன்னாட்டு உடன்படிக்கை
  • பாகுபாடு
  • பார்ப்பான்
  • பாரபட்சம்
  • பிசி-முஸ்லிம்
  • பிரகடனம்
  • பில்கிஸ் பானு
  • பெண்
  • பெண் ஊழியர்
  • பெண்கள்
  • பெயர் பலகை
  • பொது சிவில் சட்டம்
  • பொதுஇடம்
  • பொதுக்கூட்டம்
  • பொருளாதாரம்
  • போக்சோ
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் விடுதிகள்
  • மண விலக்கு
  • மத வழிபாட்டுக் கட்டடங்கள்
  • மதச்சார்பின்மை
  • மதம்
  • மதமற்றவர்
  • மதமாற்றம்
  • மதிப்பெண்
  • மரம்
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மேற்படிப்பு
  • மருத்துவப் படிப்பு
  • மறுப்பு
  • மனித உரிமை
  • மனித உரிமைகள்
  • மனைவி
  • முகப்புரை
  • முசுலீம்
  • மும்பை
  • முஸ்லிம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை எதிர்ப்பு
  • மூன்றாம் பாலினம்
  • மேல் ஜாதி
  • யுனெஸ்கோ உடன்படிக்கை
  • ராணுவம்
  • ரேஷன் கடை
  • லவ் ஜிகாத்
  • வயது தளர்வு
  • வழக்கு
  • வழக்குரைஞர்
  • வன் கொடுமை
  • வன்முறை
  • வன்னியர்
  • வாகனம்
  • வாடகை வீடு
  • வாரிசு
  • வாரிசு வேலை
  • வாழ்வு படி
  • வாழ்வூதியம்
  • விமர்சனம்
  • வியன்னா பிரகடனம்
  • விளம்பரம்
  • வீடு கட்டும் முறை
  • வேலை வாய்ப்பு
  • வேலைநிறுத்தம்
  • ஜாதி
  • ஜாதி சான்றிதழ்
  • ஜீவனாம்சம்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (3)
    • ▼  ஜூலை (1)
      • தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் – பொதுக்...
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2025 (8)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (42)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (24)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (24)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (12)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (13)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2019 (22)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (28)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2017 (17)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (53)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (26)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (39)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
பயணம் தீம். Blogger இயக்குவது.