வியாழன், 22 ஜூலை, 2021

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு!

 

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரைஜூலை 21- குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவு களை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற் பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன்புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுஅப்போது அரசு தரப்பில்ஜனவரி 2020இல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளதுமீண்டும் உயர்நீதமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின் பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், 2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சிவெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது என்றும்ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்து விட்டுபட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமாஎன கேள்வி எழுப்பினர்தொடர்ந்துமதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்களில் தமிழ் வழி யில் படித்ததற்கான சான் றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர் கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 2020 டிஎன்பி எஸ்சி குரூப் 1 முடிவிலி ருந்து 1 வகுப்பு முதல் பட் டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக