வியாழன், 22 ஜூலை, 2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!!

 

புதுடில்லிஜூலை 21 தமிழ் நாட்டில் மருத்துவப் படிப் பில் அரசு பள்ளி மாண வர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்ததுநீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்ததுஇதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இந்த சட்டத் திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்க ளுக்கும் இதே உள் ஒதுக் கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங் கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுஆனால் இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதங்களை ஏற் றுக்கொண்ட நீதிமன்றம், 7.5சதவீத  உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள் ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதி ராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்சிறீ என்ப வர் தரப்பில் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டதுஅதில்,’ 12ஆம் வகுப்பு மட்டுமே அரசு பள்ளியில் படித்திருந்தாலும் அந்த மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்மேலும் திருச்சியைச் சேர்ந்த ஜோனிஸ்ராஜ் என்பவர் தரப்பிலும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டதுஅதில்,’ தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்  ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசமைப்புக்கு எதிரானதுஅதனால் இந்த சட்டத்தை உடன டியாக ரத்து செய்யவேண் டும் எனத் தெரிவித்திருந் தார்.

இந்த நிலையில் மேற் கண்ட மனு உச்ச நீதிமன் றத்தின் நீதிபதிகள் நாகேஸ் வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசார ணைக்கு வந்ததுஅப் போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில்,’  அரசு பள்ளியில் படித்த மாண வர்களுக்கு மட்டும் மருத் துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்ததுஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதனால் மேல்முறை யீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம்,’என்று தெரிவித்தனர்இதைத் தொடர்ந்து ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள்முத லில் உயர்நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக