ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் #வீடுகட்ட என்ன செய்ய வேண்டும்???

நீங்கள் நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதியிலோ அல்லது கிராமத்தையொட்டிய பகுதியிலோ மனை வாங்க உத்தேசித்துள்ளீர்களா? ஆம் என்றால் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்.
அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.
நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது.
வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதிகள் அல்லது கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள்.
ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டுவிடுவதால், மனை வாங்கியவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
அனுமதி வழங்கும் அதிகாரம் :
**********************************************
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை.
இந்த விவரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை.
குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.
சிக்கல்கள் :
*****************
இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள்.
இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளும் உள்ளன.
இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம்.
=> மனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள், பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
=> வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.
=> மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
=> சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடைலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.
#பஞ்சாயத்துக்குட்பட்ட #மனையில் #வீடுகட்ட #என்னென்ன#வழிமுறைகள்
வழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும்.
இந்த அனுமதியைப் பெற்றுவிட்டால் வீடு கட்டத் தொடங்கலாம்.
ஒரு வேளை சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தாலோ, ஏற்கெனவே சொன்னது போல லே-அவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சிக்கு அமைப்புக்குத் தானமாக எழுதித் தரவில்லை என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.
புறநகர்ப் பகுதிகளிலோ அல்லது கிராமப் புறங்களிலோ புதிதாக வீட்டுமனை வாங்க உத்தேசித் துள்ளவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.
நட்புடன் உங்கள் தோழி. ..!!!!👍திருவாரூர் ராஜநந்தினிி

பிறப்பு இறப்பு சான்றிதழ்.பெற ....

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ்.
ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா? சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.
இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால், வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற : -
http://www.chennaicorporation.gov.in/o…/birthCertificate.do…
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள : -http://www.chennaicorporation.gov.in/…/birthCertificateList…
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற :http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateBasi…
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள :-http://www.chennaicorporation.gov.in/…/deathCertificateList…
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்.
கோயம்புத்தூர் ஆட்களுக்கு : Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php…
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death :https://www.ccmc.gov.in/ccmc/index.php
மதுரை ஆட்களுக்கு : http://203.101.40.168/newmducorp/birthfront.htm(NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு :https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் :
http://210.212.242.67/tmc/bd/birthindex-tmc.html
நட்புடன் உங்கள் தோழி. ...
திருவாரூர் ராஜநந்தினி

ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !
ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும்.
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும்.
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.
நட்புடன் உங்கள் தோழி. ....!!👍திருவாரூர் ராஜநந்தினிி

இணையம் பயன்படுத்தும் பெண்களே. உங்களை பாதுகாக்க சட்டம்

இணையம் பயன்படுத்தும் பெண்களே. உங்களை பாதுகாக்க சட்டம் இருக்கிறது :
உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். 
ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர்.
மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.
#சட்டப்பிரிவு :
IT act section 66A. Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment
உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை.
அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும்.
#சட்டப்பிரிவு :
IPC Section 509: Word, gesture or act intended to insult the modesty of a woman: Acts of sexual harassment demeaning a woman on the basis of her gender or sexuality - and other forms of sexual abuse faced by women online - can fall under this. one year imprisonment
உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம்.
உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள்.
#சட்டப்பிரிவு :
IPC Section 499: Defamation:
Harming the reputation of a person through words, signs, or visible representations. Many women bloggers and Tweeters say that the violent sexist slander they receive goes on to create an irrecoverably negative message for them within their communities, societies, etc. 2 years imprisonment
இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.
வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.
மேற்சொன்ன தகவல்களை வைத்து உங்களை இழிவுபடுத்தியவனை தொடர்பு கொண்டும் பனியவைக்கலாம்.
பிறர் அறிய பகிர்ந்து உதவுங்கள் .
நட்புடன் உங்கள் தோழி. ..!!👍?திருவாரூர் ராஜநந்தினினி

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்கள்!


#அறிந்து #கொள்வோம் 

#தொழிலாளர் #வருங்கால #வைப்புநிதி 

பிஎப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி உங்கள் ஓய்வு களத்தில் சேமிப்பாக உதவுவதுடன் மற்றும் பல்வேறு பயன்களையும் தருகிறது. 

தேவையான அளவு தொகையைப் பிஎப் கணக்கில் சேர்த்த நபர்கள் அதிலிருந்து முன்பணத்தைப் பெறவும், 58 வயதைக் கடந்திருந்தால் தங்கள் எல் ஐ சி பாலிசிக்கு நிதியளிக்கவும் அல்லது தங்கள் பி எப் கணக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியும்.

இவ்வளவு வசதிகள் இதில் இருப்பதால் நாம் இவற்றிற்கான விண்ணப்பப்படிவங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை அறிந்திருப்பது அவசியமாகும்.
இதன் மூலம் இந்த நடைமுறைகள் எளிதாகவும் ஆகும்.

இழப்பீட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டிய பல்வேறு படிவங்கள் இதோ உங்களுக்காக :

1. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தனிநபர்
**************************************************************
படிவம் 31
****************
இந்தப் படிவம் ஒரு தனிநபர் தன் கணக்கிலிருந்து தனக்குத் தேவையான கடன், முன்பணம் அல்லது பணமெடுப்பு போன்ற பரிவர்த்தனைகளுக்குப் பயன்படும். கடன்கள் ஒருவருடைய தகுதியைப் பொறுத்து மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே படிக்க..

படிவம் 14
***************
ஒருவர் தன்னுடைய எல்ஐசி பாலிசி நிதிக்கு பிஎப் கணக்கிலிருந்து பணம் பெற இதைப் பயன்படுத்த வேண்டும்.
படிவம் 10டி இந்தப் படிவம் தன்னுடைய ஓய்வூதிய நிதி (பென்ஷன் பண்ட்) வைத்திருப்போருக்குத் தேவைப்படும்.
இந்த நிதியில் 10 வருடத்தை முடித்திருந்து ஒருவருடைய வயது 58-இற்கு மேல் இருந்தால் இந்தப் படிவத்தை நிரப்பி அதனை முடித்துக்கொள்ளலாம்.

படிவம் 10சி
******************
தன ஓய்வூதிய நிதியிலிருந்து பணமெடுக்க ஒருவர் 10 வருடங்களை அல்லது 58 வயதை கடந்திராவிடில் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

2) ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்தில் சேர்ந்த நபர்கள்
************************************************************************************************

படிவம் 13
****************
ஒருவர் தான் முன்பு பணிசெய்த நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குத் தன பி எப் கணக்கை மாற்றப் படிவம் 13 ஐ பயன்படுத்த வேண்டும்.

3) பணியை விட்டுவிட்டு எங்கும் பணியைத் தொடராதவர்கள்
********************************************************************************************

படிவம் 19
****************
ஒருவர் 10 வருடப் பணியை முடித்து ஆனால் வயது 50 வயதுக்குள் இருக்குமானால் அவர்கள் படிவம் 19 ஐ கொடுத்துக் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

படிவம் 10சி
******************
ஒருவர் தன்னுடைய ஓய்வூதிய நிதியில் இருந்து சான்றிதழையும் முடிவுறு தொகையையும் பெறப் படிவம் 10சி ஐ பயன்படுத்த வேண்டும்.
10 வருடப் பணிக்காலத்தை முடிக்காதவர்கள் கூட இதற்குப் படிவம் 19 மற்றும் படிவம் 10சி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
படிவம் 10டி ஒருவர் 58 வயதைக் கடந்திருந்தால் படிவம் 10டி ஐ பயன்படுத்தலாம்.
ஆனால் 10 வருடப் பணிக்காலத்தை முடித்திருக்க வேண்டும்.

4) உடல் ஊனத்தால் பணியைத் தொடர இயலாமை
******************************************************************************
படிவம் 19 - ஓய்வூதியத் தொகையைப் பெற
******************************************************************
படிவம் 10டி - 58 வயதுக்குக் குறைவான ஆனால் 10 வருடம் பணி நிறைவு செய்தவர்கள் - ஓய்வூதியப் படிவம் 10டி மூலம் மாதாந்திர உறுப்பினர் ஓய்வூதியம் பெறலாம்.
படிவம் 10சி வயது 58- க்குள் இருக்கும் 10 வருடப் பணி நிறைவு செய்யாதவர்கள் ஓய்வூதியப் படிவம் 10 சி நிரப்பி ஓய்வூதிய நிதி முடிவுறு பலன்களைப் பெறலாம்.

நட்புடன் உங்கள் தோழி. ..!!!
திருவாரூர் ராஜநந்தினி

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய தகவல்

தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் கோரும்
விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில்
கொள்ள வேண்டியவை:
RTI FULL DETAILS AND IMPOTANT POINTS:
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்
அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்
குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர்
எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்
விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற
கேள்வி
5.தேதியுடன் கூடிய உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/-
செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற
வில்லை எனில்(court fees stamp) மனுவின்
மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp]
(ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்
(xerox) எடுத்து வைக்கவும்
8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்
கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்
அட்டை முக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த
தகவல்கள் கேட்கலாம்?.
( What type questions can be asked in RTI act
2005 )
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.
( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்
(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information
stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்
(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்
பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and
records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take
Xerox) ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
#தகவல்அறியும் #உரிமை #சட்டத்தில் #மேல்
#முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்
தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த
தகவல் திருப்திகரமாக
இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்
பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்
முறையீட்டு அதிகாரியிடம் 30
நாட்களுக்குள் முதல் மேல்
முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்
திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க
ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்
ஆணையரிடம் இரண்டாவது மேல்
முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &
ஒழுங்கு நடவடிக்கை
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்
செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்
துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக
வேண்டிவரும்
1. நியாயமான காரணம் இல்லாமல் விண்னப்பம்
வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்
(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய
எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறான
எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில்
தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250
வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்ந்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்
மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்
அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்
தண்டணை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட
பொது தகவல் அலுவலர்
மீது தண்டணை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆணையகம்
தண்டணை விதிப்பதை தவிர்க்கின்றது
தண்டணைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானது, புகார்
அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்
ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்
ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்
காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க
மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான
கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த
தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,
தகவலை அளிப்பதை எந்த முறையிலும்
தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம்
பெறப்படும் வரை அல்லது தகவல்
அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்
ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல்
அலுவலர் மீது விதிக்கப்படும்.
எனினும், மொத்த தண்டத்
தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்
இருக்க வேண்டும்.
இருப்பினும், தண்டம்
விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட
பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான
வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும்,
கவனத்துடனும்,
செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு,
அவரையே சார்ந்ததாகும்.
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில்,
பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக,
அவருக்கு பொருந்தத்தக்க
பணிவிதிகளின்படி,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட
துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்
Thanks – thagaval ariyum sattam 2005
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில்
இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற
முடியும்.
இன்னும் சில இடங்களில் கால்
செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்: http://
www.righttoinformation.gov.in http://
www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://
www.rtination.com என்ற தளத்தைப்
பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு,
அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான
போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல்
புகார்கள்
ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம்
கேட்கின்றனர்.
நட்புடன் உங்கள் தோழி. ...
திருவாரூர் ராஜநந்தினி

வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரங்கள்!

*வாக்காளர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
*புதிதாக வாக்காளர் அட்டை பெற*
*வாக்காளர் அட்டை திருத்தம் செய்ய*
*வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.
.....................
நட்புடன் உங்கள் தோழி. .....
திருவாரூர் ராஜநந்தினி