செவ்வாய், 7 மார்ச், 2023

கர்ப்பத்தை கலைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

புதுடில்லி, டிச.8 33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.  

டில்லியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பெண், திருமணத் துக்குப் பின்னர் கர்ப்பம் தரித்தார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு 'ஸ்கேன்' பரிசோ தனை செய்து பார்த்தபோது, அவரது கருக்குழந்தை பெரு மூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறி யப்பட்டது. இது அவருக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. இப்படிப்பட்ட குழந் தையைப் பெற்றெடுத்து, அந்த குழந்தை காலமெல்லாம் அவதி களுடன் மருத்துவ சிகிச்சையை சார்ந்து வாழ்வது மிகக் கொடு மையானது என கருதினார். இதனால் அவர் கருவைக் கலைப்பதற்காக டில்லி குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட் டத்தின்படி 24 வாரங்களுக்குள் தான் கருக்கலைப்பு செய்ய முடி யும், அவரது கர்ப்பம் 24 வாரங் களைக் கடந்து விட்ட தால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத் தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என கூறி விட்டனர்.

இதையடுத்து அவர் கருக் கலைப்புக்கு அனுமதி கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதி மன்ற விசாரணையில்  தனது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டிருப்பது, நவம்பர் 12-ஆம் தேதிதான் தெரிய வந்துள்ள தாகக் கூறி, தான் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் அந்த பெண் கேட்டுக் கொண் டிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பிரதிபா எம்.சிங் விசா ரித்தார். வழக்குதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் அன்வேஷ் மதுக்கர், பிராச்சி நிர்வாண் ஆகியோர் ஆஜராகி வாதாடி னார்கள். விசாரணை முடிந்த நிலையில், வழக்கைத் தொடுத் துள்ள பெண், தனது 33 வார கருவைக்கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதி பிர திபா எம்.சிங் நேற்றுமுன்தினம் (6.12.2022) தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண் டில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாரா யண் மருத்துவமனையிலோ அல்லது குரு தேக் பகதூர் மருத் துவமனையிலோ அல்லது சட் டப்படி அனுமதி பெற்றுள்ள பிற மருத்துவ மனைகளிலோ கருக்கலைப்பு செய்து கொள்ள லாம் என நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-  

"ஒரு கர்ப்பிணிப் பெண், தனது கர்ப்பத்தை கலைக்கும் உரிமை, உலகமெங்கும் விவாதப் பொரு ளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சட்டத்தில் இந்த விஷயத்தில் பெண் தேர்வு செய்து கொள்கிற உரிமையை அங்கீகரிக்கிறது. 

* மருத்துவ குழு,  ஊனத்தின் அளவு அல்லது கருக்குழந்தை பிறப்பின் பின்னர் வாழும்விதம் குறித்து குறிப் பிடத்தக்க கருத்து எதையும் வழங்கவில்லை. இத னால், அத்தகைய எதிர்பாராத நிலையில் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண் ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 

* அத்தகைய சந்தர்ப்பங்களில், இறுதி முடிவு எடுப்பதில் தாயின்  விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும். பிறக்காத குழந்தை யின் கண்ணியமான வாழ்க் கைக்கான வாய்ப்பை அங்கீ கரிக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைத்துக்கொள்ள அனுமதிக் கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

 

சென்னை, செப். 29-  ‘கடந்த 2021  ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, திருமணம் ஆகாத பெண் களும் கருக்கலைப்பு செய்யலாம்,’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில் லியைச் சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண் கருவுற்றார். கருவைக் கலைக்க, அப்பெண் முடிவு செய்தார். ஆனால், கரு 24 வாரங்கள் ஆனதால், சட்டரீதியான பிரச்சினை எழுந்தது. இதனால், கருவைக் கலைப்பதற்கு அனுமதி கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந் தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் அந்தப் பெண் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் போபண்ணா அமர்வில் நேற்று (28.9.2022) வழக்கை விசாரித்து, ‘கருக் கலைப்பு சட்டத்தில் 2021 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை டில்லி உயர்நீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதியில், ‘கணவர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘துணை’ என்ற வார்த்தை மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருமண மாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம். இருப்பினும், மனுதாரரை எய்ம்ஸ் மருத்துவக் குழு உடல்நீதியாக பரி சோதனை செய்து, சான்றிதழ் வழங்கினால் கருக்கலைப்பு செய்ய எந்தத் தடையும் இல்லை,’ என உத்தரவிட்டனர்.

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூலை 25- திருமணமாகாத பெண்ணுக் கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்ப ருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கரு வுற்றார். கருவுற்றது குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரிய வந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்து கொள்ள மருத் துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக் கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்து விட்டனர். 

இதனையடுத்து அப்பெண் டில்லி உயர் நீதிமன் றத்தை நாடினார். அங்கும் அவரது கருக்கலைப்புக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இந்நிலையில் அப்பெண் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் கந்த், ஏஎஸ் போப்பண்ணா தலைமையிலான அமர்வு முன் விசார ணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் மனமுவந்து உறவில் இருந்துள்ளார். இதில் அவர் கருவுற்றுள்ளார். கருவுற்றது குறித்து அவருக்கு ஜூன் மாதம்தான் தெரியவந்துள்ளது. அப்போது அவரது கரு 22 வாரங்கள் வளர்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில் அவரது நண்பர் திடீரென திருமணத்துக்கு சம்மதமில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையிலேயே அப்பெண் கருக்கலைப்புக்கு அனுமதி கோரியுள்ளார். திருமண உறவைத் தாண்டி குழந்தை பெற்றுக் கொண்டால் அதனால் பல்வேறு சமூக நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டும். அதை எதிர்கொள்ள நான் தயாராக இல்லை என்று அப்பெண் காரணம் கூறியுள்ளார்.

ஆனால், டில்லி நீதிமன்றம் அவர் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி மறுத்துள்ளது. மனமொத்த உறவின் மூலம் உண்டாகும் கரு 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி கண்டிருந்தால் கலைக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மனுதாரர் திருமணமாகாதவர், அவர் ஒருமித்த சம்மதத்துடன் உறவு கொண்டு கருவுற்றிருப்பதால் இது தொடர்பாக 2003 கருக்கலைப்பு சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை. எனவே கருக் கலைப்புக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. ஒரு பெண் திருமணமாகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்க முடியாது. இப்போது அந்தப் பெண்ணின் கரு 24 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு மனுதாரரை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கருக்கலைப்பால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாம். அவ்வாறு அந்தப் பெண் ணுக்கு கருக்கலைப்பு செய்ய இயலாத மருத்துவ நெருக் கடி ஏற்படின் அவர் பத்திரமாக குழந்தைப் பேறு செய்ய தகுந்த பாதுகாப்பான இடத்தில் வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம். குழந்தை அரசு காப்பகத் தில் ஒப்படைக்கப்படும். அங்கு குழந்தையை தேவை யானோர் முறைப்படி தத்து எடுத்துக் கொள்ளலாம். குழந் தைகளை தத்து எடுத்துக் கொள்ள நாட்டில் ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.

ஞாயிறு, 5 மார்ச், 2023

இணைய தளத்தில் பதிவேற்றம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது

 

புதுடில்லி, ஜன.27- ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் நேற்று (26.1.2022) வெளியிடப்பட்டது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. முதல் கட்டமாக தமிழ், ஹிந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகளை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (25.1.2023) உச்சநீதிமன்றத் தின் அலுவல்கள் தொடங்கியவுடன வழக்குரைஞர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1268 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதா கவும் குடியரசு நாளினை யொட்டி இந்தத் தீர்ப்புகள் வெளி யிடப்படும் என தெரிவித் தார்.

இதன்படி, நேற்று தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளி யானது. 

தமிழில் -52, அசாம் - 4, ஹிந்தி - 1554, கன்னடம் - 17,  மலையாளம் - 29, மராத்தி - 14, ஒடியா - 21, பஞ்சாபி - 4, தெலுங்கு - 28, உருது -3 என தீர்ப்புகள் உச்சநீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.  மற்ற மொழிகளிலும் தீர்ப்புகளை மொழி பெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

‘கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு'


கொச்சி, நவ.6 கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

 கேரள உயர்நீதிமன்றத்தில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து, பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், அத னால் தான் கர்ப்பம் தரித்து இருப்பது 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறி, தனது 26 வார கால கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி இருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி வி.ஜி. அருண் விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை மருத்துவர்கள் குழு சோதித்து, அந்தக் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் பெற்றது. 

அதில், பாதிக்கப்பட்டுள்ள மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கர்ப்பத்தைத் தொடர்வது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கர்ப் பத்தை கலைத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதுகுறித்த தீர்ப்பில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவும் அல்லது கர்ப்பத்தை தவிர்க்கவும் உள்ள உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அரசமைப்புச் சட்டப் பிரிவு

இது குறித்து பெண்களுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உரிமை வழங்கி உள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த மாணவி தனது கர்ப்பத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது அதற்கான வசதி களைக் கொண்ட பிற மருத்துவமனைகளிலோ கருக் கலைப்பு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.


வியாழன், 22 செப்டம்பர், 2022

அரசுக் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்காக வயது வரம்பு தளர்வு! அர்ச்சக மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி

சனி, 2 ஜூலை, 2022

300 சட்ட நூல்கள்: தமிழாக்கம் செய்து சாதனை

மதம் மாறுவது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது! -டில்லி உயர்நீதிமன்றம்


புதுடில்லி, ஜூன் 4 மதம் மாறு வது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடை யில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த வழக் குரைஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரி மைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி கள் விசாரித்தனர். 

அப்போது மனுவை பரி சீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற் கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் சமூக வலைதளங் களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என் றும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின் பற்ற அரசமைப்புச் சட்டத்தில் உரிளமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரி வான விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து எந்தவித அறிவிக்கையையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள் ளனர்.