சென்னை, டிச. 22- முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட் டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதா ரத்துறைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஏழை மற்றும் குறைந்த வரு வாய் பெறுபவர்கள் உயிர்காக் கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற் றும் தனியார்மருத்துவமனைக ளில் பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் 2009இல் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் தொடங் கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ் வொரு பயனாளியின் குடும்பத் துக்கும் ரூ.1 லட்சம் வரை இலவ சமாக சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 2012 ஜனவரி 11ஆம் தேதி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட் டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாநிலம் முழுவ தும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்தத் திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயனாளியாகச் சேர்க்கப்பட் டன. இந்த திட்டத்துடன் பிர தான் மந்திரிஜன் ஆரோக்யா யோஜனா என்றதிட்டத்தை ஒருங்கிணைத்து, முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்ட பயனாளிகளுக் கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு தளங் களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் கருத்து ருவின் அடிப்படையில், இந்த திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.72 ஆயிரத் தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தலாம் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
இதை பரிசீலனை செய்து, 2022 ஜனவரி 11ஆம் தேதி முதல் புதிதாக நீட்டிக்கப்பட உள்ள முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அரசா ணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.