புதன், 18 ஏப்ரல், 2018

அரசு ஆவணங்களில் எஸ்சி பிரிவினரை ‘தலித்’ என்று குறிப்பிட வேண்டாமாம்: மத்திய அரசு

புதுடில்லி, ஏப். 17- தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் ஆகியோருக்கு அளிக்கப்படும் அரசு சம்பந்தப்பட்ட ஆவணங் களில் “தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் “ஹரிஜன்’ என்ற வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டாம் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அளிக்கப்படும் பல்வேறு அரசு ஆவணங்களில் “தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 17.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக