மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண்
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .
இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .
அப்போதெல்லாம்
ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து
பதவி விலகி விடவேண்டும் .
அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம்.
மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு நியமனத்தில் முன்னுரிமை உண்டு .
மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது .
1942-ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அவர்,பெண்களின் மகப்பேறு பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுகி,
*பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை அறிவித்தார்* .
அன்று முதல் பெண் ஊழியரகளுக்கு மகப்பேறு விடுப்பு அடிப்படை உரிமையானது.
சுதந்திர இந்தியாவிலும் அது இன்றுவரை தொடர்கிறது .
*அந்த தொழிலாளர்* *நலத்துறை அமைச்சர்*
யார் என்பது தெரியுமா உங்களுக்கு?
வேறு யாருமல்ல
*டாக்டர் அம்பேத்கர்* தான்.
- கட்செவி பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக