வரவேற்கத்தக்க டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு!
‘‘முக்கியமான முடிவுகளை எடுக்க மூத்த மகளுக்கு உரிமை உண்டு!’’
புதுடில்லி, பிப். 1_ முக்கிய மான முடிவுகளை எடுக் கும்போது வீட்டில் தந்தை பொறுப்பில் மூத்த மகளே அந்த முடிவுகளை எடுக்க லாம் அவளுக்கு அந்த உரிமை உள்ளது என்று டில்லி உயர்நீதிமன்றம் முக் கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
புதுடில்லி, பிப். 1_ முக்கிய மான முடிவுகளை எடுக் கும்போது வீட்டில் தந்தை பொறுப்பில் மூத்த மகளே அந்த முடிவுகளை எடுக்க லாம் அவளுக்கு அந்த உரிமை உள்ளது என்று டில்லி உயர்நீதிமன்றம் முக் கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
டில்லி ஆனந்த்பர்பத் என்ற பகுதியில் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. 4 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் சகோதரர்கள் அனைவரும் இறந்து விட்டனர்.
நான்கு சகோதர்களில் மூத்தவருக்கு ஒரு மகளும் மகனும் உண்டு. மற்றவர் களுக்கு மகன்கள் மட்டுமே உண்டு. இந்த நிலையில் பாகப் பிரிவினைபற்றி மூத்த மகளைக் கலந் தாலோசிக்காமல் வீட்டில் உள்ள ஆண்கள் மட்டுமே முடிவு செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து அந் தப் பெண் டில்லி நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வீட்டில் தந்தைக்குரிய இடத்தில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்க முத்த மகளுக்கு தகுதியுண்டு. இந்த வழக்கில் மூத்தவர் பெண்ணாக இருப்பதால் அவரை கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்றும் அவருக்கான பங்கை கொடுத்துவிடுவோம் என்று கூறுவதை ஏற்கமுடி யாது.
மாற்றங்கள் வந்துவிட்டன!
சமூகத்தில் பலவித மாற் றங்கள் ஏற்பட்டுவிட்டன. இக்காலகட்டத்திலும் பெண் களை வீட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்து விலக்கி வைப்பதை ஏற்கமுடியாது. தந்தையின் இடத்தில் இருந்து முடி வெடுப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
பாகப் பிரிவினை, மதம் தொடர்பான விழாக்களை வீட்டில் நடத்துவது, மற் றும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பற் றிய ஆலோசனை செய்து முடிவெடுப்பதில் ஆண் களின் பங்கே இதுநாள் வரை அதிகம் இருந்தது. இதனால் திடீரென பெண் ஒருவர் இந்த நிகழ்வுகளில் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் போது ஆண்களுக்குப் புதிதாகப் படலாம், ஆனால் இது இக்காலகட்டத்திற்கு மிக வும் தேவையான மாற்ற மாகும். வீட்டில் மூத்தவ ராக ஒரு ஆண் முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத் தில் மூத்தவளாகப் பிறந்த பெண் ஏன் அந்த முடிவை எடுக்கக் கூடாது? ஆகவே இனி அந்தக் குடும்பத்தில் நடக்கும் முக்கிய முடிவுகள் அனைத்திலும் மூத்த பெண் ணின் ஆலோசனைகளை யும் கேட்டு நடக்கவேண் டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள் ளது.
2005 ஆம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டம்
2005 ஆம் ஆண்டு இந்துமதவாரிசுரிமைச் சட்டப்பிரிவு 6 பெண் களுக்கு பூர்வீகச் சொத்து உரிமை கொண்டாட முழு உரிமை உள்ளது என்று திருத்தம் கொண்டுவரப் பட்ட நிலையில் தற்போது குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் மூத்த பெண்களின் பங்கு அவ சியம் என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தீர்ப்பாகும்.
டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், முக்கியமாக உயர் ஜாதி வர்க்கத்தில் உள்ள ஆணாதிக்கம் முடிவிற்கு வரும். இன்றளவும் இந்தி யாவில் பெரும்பான்மை யான குடும்பங்களில் பெண் கள் மூத்தவர்களாக இருந் தாலும் அங்கு ஆண்களின் அதிகாரமே குடும்பம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் இருக்கும். நீதிபதி வாஜரி கூறிய தாவது:
பெண்கள் முக்கிய முடி வெடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதைக் கூட நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டுமா? பெண் களுக்கு சொத்துரிமை கிடைத்துவிட்டது, ஆகை யால் கொடுப்பதை வாங் கிக்கொண்டு அமைதியாகச் செல்லும் காலம் முடிந்து விட்டது, ஆண் பெண் சம உரிமை பேசும் காலத்தில் இன்றும் பெண்களை முடி வெடுக்கத் தகுதியில்லாத வர்களாகப் பார்ப்பது எவ் விதத்திலும் சரியல்ல, பெண் கள் முக்கிய முடிவெடுக்கும் தகுதியற்றவர்கள் என்று கூறி புறக்கணிக்கும் பட்சத் தில் அவர்களின் உரிமை களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம், 1956-ஆம் ஆண்டு சொத்துரி மைக்கான சட்டம் 2005-ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறி னார்.
-விடுதலை,1.2.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக