நாமும் சட்ட முறைமையும்

புதன், 22 மார்ச், 2023

மகப்பேறு விடுப்பு : நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுப்படுவதில்லை

 

    September 17, 2021 • Viduthalai

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, செப்.17 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போல, பணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திருமண மான பெண் அரசு ஊழியர் களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன் முறைப்படுத்தப்படாத, தற் காலிக பணியாளர்களுக்கும் நீட் டித்து 2020-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

தற்காலிக ஊழியர்கள்

ஆனால், இந்த அரசா ணைகள் முறையாக அமல் படுத்தப்பட வில்லை. பல மாவட்டங்களில் அரசு மருத் துவமனைகளில் பணிபுரியும், பணி வரன் முறைப்படுத் தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லை. அவர்களது விண்ணப் பங்கள் நிலுவையில் உள்ளன. தற் காலிக அரசு பணியாளர்களுக் கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ குரு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பாரபட்சம் இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு ஆகி யோர் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மகப்பேறு விடுப்பில் பார பட்சம் காட்டக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து கூறினர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

முடித்து வைப்பு

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மகப்பேறு விடுப்பு வழங் குவதில் வரன்முறை செய்யப் பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே அரசு பாரபட்சம் ஏதும் காட் டுவதில்லை. வரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால், ஊதியத் துடன் கூடிய மகப்பேறு விடுப்பை பெற்றுக்கொள்ள லாம். மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக (ஓர் ஆண்டு) அதிகரித்து கடந்த ஆகஸ்டு 23-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:57 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாரபட்சம், மகப்பேறு விடுப்பு

மகப்பேறு விடுப்பு: பாகுபாடு காட்டக் கூடாது” தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


  August 21, 2021 • Viduthalai

சென்னை, ஆக.21 மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீமின்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன் முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய் திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.8.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப் படுத்தப் படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது. மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகு பாடும் காட்ட கூடாது எனவும், அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் 18 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இது வரை சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி பணி குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,  தமிழ்நாட்டில் 60 கிரா மங்களில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணி களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக் கான தடுப்பூசி பங்கீட்டை 90 விழுக்காடு ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 10 விழுக்காடு ஆகவும் வழங்க வேண்டும் எனறு கூறினார்.

தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,ஆக.21- தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த கரோனா பாதிப்பு, சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது தொடர் பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவ மனைகளில் 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 663 பேர் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 621ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 199ஆக பதிவாகியுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:55 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாகுபாடு, மகப்பேறு விடுப்பு

ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை

 

    September 11, 2022 • Viduthalai

சென்னை, செப்.11  நியாய விலை கடையில் பணிபுரியும் பெண் விற்ப னையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பெண் பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு அரசால் அவ்வப்போது அறிவிக்கப் படும் மகப் பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டு றவு சங்கங்களின் பதி வாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில், அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள் ளது. அரசு பணியாளர் களுக்கு அரசால் அவ்வப் போது அறிவிக்கப் படும் மகப்பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, நியாய விலை கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர் களுக்கும் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும்.

இதற்கென அனைத்து சங்கங்களிலும் தேவை யான சிறப்பு துணை விதி திருத்தம் மேற்கொள்ளப் பட்டு தகுதியுள்ள பெண் பணியாளர்களுக்கு இவ் விடுப்பினை அனுமதிக்க தங்கள் அளவில் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தங்கள் மண்ட லத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங் கங்களின் கட்டுப்பாட் டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர் கள் மற்றும் கட்டுநர் களுக்கு அரசாணையின் படி 12 மாதங்கள் மகப் பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு தகுதியுள்ள அனைத்து பெண் பணி யாளர்களுக்கும் மகப் பேறு விடுப்பு அனுமதிக் கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு பணியாளர் களுக்கு, அரசால் அவ்வப் போது அறிவிக்கப்படும் சலுகைகள் நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கும் பொருந் தும் என பதிவாளரால் தெரிவிக்கப்பட்ட இனங் களில் அரசு பணியாளர் களுக்கு அரசால் அறிவிக் கப்படும் சலுகைகள் தொடர்பாக உடனுக் குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டு சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு அச்ச லுகைகள் கிடைக்க உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள் ளப்படாமல் இது போன்ற புகார்கள் பெறப் படுவதை தவிர்க்க வேண் டும். இவ்வாறு அந்த சுற் றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:53 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பெண் ஊழியர், மகப்பேறு விடுப்பு, ரேஷன் கடை

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும்

 

   August 22, 2022 • Viduthalai

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக.22 தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு 

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச் சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என 2021 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

 வாதம் 

பின்னர், இந்த வழக்கைத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. அப்போது மனு தாரர்கள் தரப்பில், கோவில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நிய மிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங் காவ லர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஆகம விதிகள் 

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

விளக்கம் 

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மய்யங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு 

சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகளைப் படித்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று  22.8.2022 தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பான்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய  அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அமர்வு - தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர்.

குழு 

மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய அய்ந்து பேர் கொண்ட 'குழு' நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த அனைத்து வழக்குககளையும் முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:09 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அர்ச்சகர்கள் நியமனம், தீர்ப்பு

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தவறாம்!

 


 

     Sseptember 09, 2022 • Viduthalai

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 விழுக்காடு இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம்: 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப் படையிலேயே பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரச மைப்பு சட்டமும் வழிவகை செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணி யாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 விழுக்காடு இடங்களை பெண் களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்கார வேலன், நளினி சிதம்பரம், வழக்குரைஞர் தாட்சாயினி ரெட்டி:

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 விழுக்காடும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 விழுக்காடு ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட் டில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 விழுக்காடுத்தி லேயே, பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனி யாக வழங்க முடியாது. வேலைவாய்ப் பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண் களுக்கு மெரிட் அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப் படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்ட விரோதம் என்பதால், 30 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதி பதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது கெட்ட வாய்ப்பானது தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறை களில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 விழுக்காடுபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 விழுக்காட்டுக்குள்தான் பெண் களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும் பவில்லை. 

இனிமேல்,இடஒதுக்கீடு தொடர் பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு களை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரசு வேலை, இடஒதுக்கீடு, பெண்கள்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்கள் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது


  August 01, 2021 • Viduthalai

சென்னை, ஆக.1 பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமாரை சேர்க்க வேண்டு மென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோளிங் கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப் படிப்பை படிக்காமல், திறந்த வெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள தால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிக வரித்துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா மற்றும் கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை தலைவர், வணிகவரித் துறை செயலாளர் ஆகி யோரின் தரப்பில் அரசு வழக்குரைஞர் இரா.நீலகண் டனும்,  சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலை பல் கலைக்கழகம் அல்லது தொலை தூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர் களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 1:01 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திறந்தவெளி பல்கலை, தீர்ப்பு

ஞாயிறு, 19 மார்ச், 2023

திருமணமான பெண்ணுக்கு 6 மாதத்தில் கருணைப்பணி உயர்நீதிமன்றம் உத்தரவு



  March 19, 2023 • Viduthalai

மதுரை, மார்ச் 19 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக் காலத்தில் கடந்த 2009இல் திடீரென இறந்தார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி விண்ணப்பித்தார். 

திருமணமானவர் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வாரிசுப் பணி வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுவை வேளாண் விற்பனை சங்க செயலர் 12 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தொழிலாளர் துறை முதன்மை செயலர் மற்றும் வேளாண் விற்பனைத்துறை செயலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோ ரியா கவுரி ஆகியோர் விசாரித்து, திருமண மான பெண்ணுக்கு கருணைப்பணி வழங்க மறுத்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய் துள்ளார். இதில், தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே, மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது. 6 மாதத்தில் கருணைப்பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கருணைப்பணி
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

நீதி

நீதி
சட்டம்
Powered By Blogger

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திருமணமான பெண்களும் வாரிசு வேலை கோரலாம்!
    பிலாஸ்பூர், டிச.7 அரசு துறையில், வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும், கருணை அடிப்படை வேலையை, திருமணமான பெண்களுக்கும் வழங்க வேண்டும்' என, சத்...
  • பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு மசோதா நிறைவேறியது
    புதுடில்லி, மார்ச் 11 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு ...
  • ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்”
    # கலப்பு   # திருமணம் நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள்.  கலப்பு திருமணம் அல்லது கா...
  • அசல் பத்திரம் தொலைந்த சொத்தை விற்க என்ன செய்ய வேண்டும்
    சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்து விட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், த...
  • அறிவோம் சட்டம் -(3) பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்...
  • முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?
    வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது...
  • மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
    மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்: 20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய...
  • பிறப்பு இறப்பு சான்றிதழ்.பெற ....
    # அறிந்து   # கொள்வோம் இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்க...
  • தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி
    சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமு...
  • 14) பெண்ணுரிமைச் சட்டங்கள்
    நேற்றையத் தொடர்ச்சி திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.05.1930 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற...

லேபிள்கள்

  • 10.5%
  • 3.5 சதவீத இடஒதுக்கீடு
  • அடிப்படை உரிமை
  • அடிப்படை கடமைகள்
  • அமல்
  • அய்.நா உடன்படிக்கை
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர்கள் நியமனம்
  • அரசாணை
  • அரசியல் உரிமை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு ஆணைகள்
  • அரசு மருத்துவர்
  • அரசு வேலை
  • அரசுப் பணி
  • அரசுப்பணி
  • அறநிலையத்துறை
  • அறிக்கை
  • அனுமதி
  • அனைத்து சாதியினர் அர்ச்சனை
  • ஆக்கிரமிப்பு
  • ஆக்கிரமிப்பு கோயில்
  • ஆட்டம்
  • ஆணை
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இந்திய அரசமைப்பு
  • இந்திய அரசியலமைப்பு
  • இந்திய சட்டம்
  • இலங்கை அகதிகள் முகாம்
  • இன பேதம்
  • இனிசியல்
  • உச்சநீதிமன்றம்
  • உச்சவரம்பு
  • உடல் உறவு
  • உடலுறவு
  • உடன்படிக்கை
  • உத்தராகாண்டு
  • உயிரற்ற உடல்
  • உயில்
  • உரிமம்
  • உரிமை
  • உரிமைகள்
  • உலக அமைதி
  • உழைப்பு
  • உள்ஒதுக்கீடு
  • ஊக்க மதிப்பெண்
  • ஊடகம்
  • ஊதியம்
  • ஒதுக்கீடு
  • ஓய்வூதியம்
  • கட்டாயம்
  • கணவரை இழந்தவர்
  • கருக் கலைப்பு
  • கருக்கலைப்பு
  • கருணைப்பணி
  • கல்வி
  • கல்வி உதவித்தொகை
  • கல்வியில் பாகுபாடு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கற்பழிப்பு
  • காவிரி
  • காழ்ப்புணர்ச்சி
  • குடந்தை கருணா
  • குடிமக்கள் உரிமை
  • குடியுரிமை
  • குடும்ப வருமானம்
  • குழந்தை
  • குறத்தி
  • குறவன்
  • குறைந்த அளவு
  • கூடும் உரிமை
  • கேரளா
  • கொத்தடிமை
  • கொலை
  • கோயில்
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சபரிமலை
  • சமூகம்
  • சர்வதேசிய பிரகடனம்
  • சாதி சான்றிதழ்
  • சாதி மறுப்பு
  • சாதி மறுப்பு திருமணம்
  • சான்றிதழ்
  • சித்திரவதை
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுரண்டல்
  • சுற்றறிக்கைகள்
  • செல்லும்
  • சொத்து
  • சொத்து உரிமை
  • சொத்துரிமை
  • சோசலிசம்
  • சோம்பேறி
  • தகவல் அறியும் சட்டம்
  • தடை
  • தண்டனை
  • தத்து
  • தத்தெடுக்கும் உரிமை
  • தத்தெடுப்பு
  • தமிழ்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ்வழி
  • தமிழில்
  • தலித்
  • தனிநபர்
  • திராவிடர் இயக்கம்
  • திருத்த சட்டம்
  • திருத்தம்
  • திருமணம்
  • திருமணமான பெண்
  • திறந்தவெளி பல்கலை
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்ப்புகள்
  • தெலுங்கு மொழி
  • தேச விரோதம்
  • தேசியக் கொள்கை
  • தொழிலாளர்
  • நடவடிக்கை
  • நரிக்குறவர்
  • நாத்திகன்
  • நியமனங்கள்
  • நீதிக்கட்சி ஆட்சி
  • நீதிபதிகள்
  • நீதிமன்ற ஆணை
  • நீதிமன்றஆணை
  • நீதிமன்றம்
  • நூல்கள்
  • நோ பார்க்கிங்
  • பங்கு
  • பட்டினி
  • பணிக்கொடை
  • பத்திரப்பதிவு
  • பதவி உயர்வு
  • பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பறிப்பு
  • பன்னாட்டு உடன்படிக்கை
  • பாகுபாடு
  • பார்ப்பான்
  • பாரபட்சம்
  • பிரகடனம்
  • பில்கிஸ் பானு
  • பெண்
  • பெண் ஊழியர்
  • பெண்கள்
  • பெயர் பலகை
  • பொது சிவில் சட்டம்
  • பொருளாதாரம்
  • போக்சோ
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் விடுதிகள்
  • மண விலக்கு
  • மதச்சார்பின்மை
  • மதம்
  • மதமற்றவர்
  • மதமாற்றம்
  • மதிப்பெண்
  • மரம்
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மேற்படிப்பு
  • மருத்துவப் படிப்பு
  • மறுப்பு
  • மனித உரிமை
  • மனித உரிமைகள்
  • மனைவி
  • முகப்புரை
  • முசுலீம்
  • மும்பை
  • முஸ்லிம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை எதிர்ப்பு
  • மூன்றாம் பாலினம்
  • மேல் ஜாதி
  • யுனெஸ்கோ உடன்படிக்கை
  • ராணுவம்
  • ரேஷன் கடை
  • லவ் ஜிகாத்
  • வயது தளர்வு
  • வழக்கு
  • வழக்குரைஞர்
  • வன் கொடுமை
  • வன்முறை
  • வன்னியர்
  • வாகனம்
  • வாரிசு
  • வாரிசு வேலை
  • வாழ்வு படி
  • வாழ்வூதியம்
  • விமர்சனம்
  • வியன்னா பிரகடனம்
  • விளம்பரம்
  • வீடு கட்டும் முறை
  • வேலை வாய்ப்பு
  • வேலைநிறுத்தம்
  • ஜாதி
  • ஜாதி சான்றிதழ்
  • ஜீவனாம்சம்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (6)
    • ▼  ஏப்ரல் (1)
      • அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டும...
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (42)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (24)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (24)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (12)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (13)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2019 (22)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (28)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2017 (17)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (53)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (26)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (39)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
பயணம் தீம். Blogger இயக்குவது.