திங்கள், 24 ஜனவரி, 2022

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சமாக உயர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முத்தமிழறிஞர் கலைஞர் திருத்தியது செல்லும்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

1956 வாரிசுரிமைச் சட்டத்துக்கு முன்பாக தந்தை இறந்திருந்தாலும் தந்தையின் சொத்துகளுக்கு மகள் முழு உரிமை கோரலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதன், 1 செப்டம்பர், 2021

இலங்கை அகதிகள் முகாமை இனிமேல் "மறுவாழ்வு முகாம்" என அழைக்க அரசாணை வெளியீடு


பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,  ஆக. 29 சட்டப்பேரவையில், திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேற்று (28.8.2021) பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர் களுக்கான அடிப்படைதேவைகள், கல்வி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பி னர் பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று குறிப் பிட்டார். இன்றுமுதல் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று கூறாமல், "மறுவாழ்வு முகாம்" என்று கூற வேண்டும். அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்க ளுக்கு துணையாக நாம் இருக்கி றோம். எனவே, அகதிகள் முகாம் என்று அழைக்காமல் "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்" என்று அழைக்க வேண்டும்என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கடலூர் தொகுதி திமுக உறுப்பினர் அய் யப்பன் பேசும்போது, முதலமைச் சர் உள்ளிட்டவர்களை பாராட் டினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு, உறுப்பினர் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மனதில் வைத்துக்கெண்டு பேச வேண்டும். நேற்று (28.8.2021)கூட புகழ்ந்து பேசுவதை ஓரளவு குறை வாக வைத்துக் கெள்ளுங்கள் என்றுகட்டளையாகவே கூறியிருக் கிறேன். இப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். அதனால் தயவுசெய்து விவாதத்துக்கு செல்லுங்கள். விரை வாகப் பேசி முடியுங்கள் என்று கேட்டுக் கெண்டார்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தாய் பெயரை 'இனிசியலாக' பயன்படுத்த உரிமை உண்டு: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 புதுடில்லி,ஆக.7-'தாயின் பெயரையும் 'இனிசியலாகபயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளதுஎனடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுதாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்குடில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  (6.8.2021) விசாரணைக்கு வந்ததுநீதிபதி ரேகா பாலி விசாரித்தார்மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டதாவது:

என் கட்சிக்காரரின் மகள் மைனர்ஆனால்அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிசியலாக மாற்றப்பட்டுள்ளதுஇதுஎதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி உத்தரவிட்டதாவது:குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிசியலாக பயன்படுத்த உரிமை உள்ளதுதேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி அம்மனுவை தள்ளுபடி செய்தார்.

வியாழன், 22 ஜூலை, 2021

மருத்துவ படிப்புகளில் அ.இ.ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்

 

 சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னைஜூலை 19 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 69 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுகஉள்ளிட்ட கட்சி களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண் டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டதுஅதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுதமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும்உச்சநீதிமன் றத்தில்  நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போதுதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன்உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும்உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத் தரவு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தும்அதை அமல்படுத்த வில்லை எனவும்இது  நீதிமன்ற  அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக் குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர்மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டுதற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும்இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்

மேலும்எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும்இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஒன்றிய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டதுஇதையடுத்துஉயர்நீதிமன்ற உத்தர வின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்தப்படும்இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுவிசார ணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.