ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்


மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்
லக்னோ, ஜூன் 12 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து மதவழிபாட்டு இடங் களையும் அகற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோவின் மொகல்லா தாடா கேரா பகுதியில் பொது வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலாகா பாத் உயர்நீதிமன்றத்தில் 19 பேர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக் கள், லக்னோ உயர்நீதிமன்றத் தில் நீதிபதிகள் சுதீர் அகர்வால், ராகேஷ் சிறீவாஸ்தவா ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், நடமாடுவதற் கான அடிப்படை உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமை, பொது இடத்தில் விதிமுறைகளை மீறும் சிலரால் பாதிக்கப்படு வதை அனுமதிக்க முடியாது.
ஆகையால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக் குப் பிறகு, பொதுச் சாலை களிலோ அல்லது நடைபாதை களிலோ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அனைத்து மத வழிபாட்டு இடங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், சாலைகளைப் பராமரிக்கும் துறைகளின் அதிகாரிகள் ஆகி யோருக்கு மாநில அரசு குறிப்பு அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசிடம் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதேசமயம், 2011ஆம் ஆண் டுக்கு முன்பு, மேற்கண்ட இடங் களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மதவழிபாட்டு இடங்களை 6 மாதங்களுக்குள் தனியார் நிலத்துக்கு அப்புறப் படுத்த வேண்டும்; அல்லது அகற்றவேண்டும்.
நெடுஞ்சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சந்துகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன் படுத்தும் சாலைகளில் எந்த வகையிலும் மதவழிபாட்டு இடங்கள் அமைக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறு திப்படுத்த வேண்டும். இதற் காக மாநில அரசு தனித்திட் டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாதது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக எடுத் துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-விடுதலை,12.6.16

ஞாயிறு, 29 மே, 2016

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும்  பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, பிப்.2- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, அக்குழந்தையைப் பராமரிக்க 6 மாதங்களுக்கு பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில்வே துறையில் பணிபுரியும் பெண், குழந்தை பெறுவதற்காக ஒரு வாடகைத் தாயுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில், அந்த வாடகைத் தாய்க்கு தற்போது 33 வார கால மகப்பேறு நிறைவடைந்துள்ளது.
பிரசவ காலம் நெருங்குவதால், அக்குழந்தையை பராமரிக்கும் பொருட்டு தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு ரயில்வே உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கு ரயில்வே துறை விதிமுறைகளில் இடம்பெறவில்லை என்று கூறி அந்தப் பெண்ணின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கானது நீதிபதிகள் அனூப் மேத்தா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.29) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு இடைக்கால தீர்வாக, மனுதாரருக்கு மகப்பேறு கால விடுப்பாக 180 நாள்கள் (6 மாதம்) வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு
புதுடில்லி, பிப்.2- மத்திய அரசின் சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், சிறார் நீதி திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம், பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு, பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து, அது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான தாசீன் பூனாவாலா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சிறார் நீதி திருத்தச் சட்டமானது, நியாயமற்றது, அவசர கதியில் கொண்டு வரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது’’என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்  எனத் தெரிகிறது.
டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டும் விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
-விடுதலை,2.2.16

.

‘‘முக்கியமான முடிவுகளை எடுக்க மூத்த மகளுக்கு உரிமை உண்டு!’’

வரவேற்கத்தக்க டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு!
‘‘முக்கியமான முடிவுகளை எடுக்க மூத்த மகளுக்கு உரிமை உண்டு!’’

புதுடில்லி, பிப். 1_  முக்கிய மான முடிவுகளை எடுக் கும்போது வீட்டில் தந்தை பொறுப்பில் மூத்த மகளே அந்த முடிவுகளை எடுக்க லாம் அவளுக்கு அந்த உரிமை உள்ளது என்று டில்லி உயர்நீதிமன்றம் முக் கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
டில்லி ஆனந்த்பர்பத் என்ற பகுதியில் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. 4 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் சகோதரர்கள் அனைவரும் இறந்து விட்டனர்.
நான்கு சகோதர்களில் மூத்தவருக்கு ஒரு மகளும் மகனும் உண்டு. மற்றவர் களுக்கு மகன்கள் மட்டுமே உண்டு. இந்த நிலையில் பாகப் பிரிவினைபற்றி மூத்த மகளைக் கலந் தாலோசிக்காமல் வீட்டில் உள்ள ஆண்கள் மட்டுமே முடிவு செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து அந் தப் பெண் டில்லி நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வீட்டில் தந்தைக்குரிய இடத்தில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்க முத்த மகளுக்கு தகுதியுண்டு. இந்த வழக்கில் மூத்தவர் பெண்ணாக இருப்பதால் அவரை கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்றும் அவருக்கான பங்கை கொடுத்துவிடுவோம் என்று கூறுவதை ஏற்கமுடி யாது.
மாற்றங்கள் வந்துவிட்டன!
சமூகத்தில் பலவித மாற் றங்கள் ஏற்பட்டுவிட்டன. இக்காலகட்டத்திலும் பெண் களை வீட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்து விலக்கி வைப்பதை ஏற்கமுடியாது. தந்தையின் இடத்தில் இருந்து முடி வெடுப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
பாகப் பிரிவினை, மதம் தொடர்பான விழாக்களை வீட்டில் நடத்துவது, மற் றும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பற் றிய ஆலோசனை செய்து முடிவெடுப்பதில் ஆண் களின் பங்கே இதுநாள் வரை அதிகம் இருந்தது. இதனால் திடீரென பெண் ஒருவர் இந்த நிகழ்வுகளில்  முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் போது ஆண்களுக்குப் புதிதாகப் படலாம், ஆனால் இது இக்காலகட்டத்திற்கு மிக வும் தேவையான மாற்ற மாகும். வீட்டில் மூத்தவ ராக ஒரு ஆண் முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத் தில் மூத்தவளாகப் பிறந்த பெண் ஏன் அந்த முடிவை எடுக்கக் கூடாது? ஆகவே இனி அந்தக் குடும்பத்தில் நடக்கும் முக்கிய முடிவுகள் அனைத்திலும் மூத்த பெண் ணின் ஆலோசனைகளை யும் கேட்டு நடக்கவேண் டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள் ளது.
2005 ஆம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டம்
2005 ஆம் ஆண்டு இந்துமதவாரிசுரிமைச் சட்டப்பிரிவு 6 பெண் களுக்கு பூர்வீகச் சொத்து உரிமை கொண்டாட முழு உரிமை உள்ளது என்று திருத்தம் கொண்டுவரப் பட்ட நிலையில் தற்போது குடும்பத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் மூத்த பெண்களின் பங்கு அவ சியம் என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தீர்ப்பாகும்.
டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், முக்கியமாக உயர் ஜாதி வர்க்கத்தில் உள்ள ஆணாதிக்கம் முடிவிற்கு வரும். இன்றளவும் இந்தி யாவில் பெரும்பான்மை யான குடும்பங்களில் பெண் கள் மூத்தவர்களாக இருந் தாலும் அங்கு ஆண்களின் அதிகாரமே குடும்பம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் இருக்கும்.   நீதிபதி வாஜரி கூறிய தாவது:
பெண்கள் முக்கிய முடி வெடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதைக் கூட நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டுமா? பெண் களுக்கு சொத்துரிமை கிடைத்துவிட்டது, ஆகை யால் கொடுப்பதை வாங் கிக்கொண்டு அமைதியாகச் செல்லும் காலம் முடிந்து விட்டது, ஆண் பெண் சம உரிமை பேசும் காலத்தில் இன்றும் பெண்களை முடி வெடுக்கத் தகுதியில்லாத வர்களாகப் பார்ப்பது எவ் விதத்திலும் சரியல்ல, பெண் கள் முக்கிய முடிவெடுக்கும் தகுதியற்றவர்கள் என்று கூறி புறக்கணிக்கும் பட்சத் தில் அவர்களின்  உரிமை களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம், 1956-ஆம் ஆண்டு சொத்துரி மைக்கான சட்டம் 2005-ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறி னார்.
-விடுதலை,1.2.16