சனி, 5 செப்டம்பர், 2015

குழந்தையின் பாதுகாவலர் விவகாரம் - தந்தையின் ஒப்புதல் தேவையில்லை

குழந்தையின் பாதுகாவலர் விவகாரம் - தந்தையின் ஒப்புதல் தேவையில்லை
புதுடில்லி, ஜூலை 6 திருமணமாகாத தாய்க்குப் பிறந்த குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமாகாத அரசு பெண் ஊழியர் ஒருவர், தனது குழந்தையின் பாதுகாவலராக இருப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குழந்தையின் பாதுகாவலராக, தாய் இருப்பதற்கு, தந்தையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடை முறையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத பெண்ணுக்குப் பிறகும் குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு  மாறாக, கீழ்நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ, இதுபோன்ற தீர்ப்பை குழந்தையின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அறிவித்திருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-உண்மை1-15.8.15

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.3_- ஜாதி மறுப்பு திருமணம் செய் பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள் ளது.
கடலூர் மாவட்டம், முத்தாண்டிகுப்பம் பகுதி யைச் சேர்ந்த விஜய லெட்சுமி_- சிவராமகிருஷ் ணன் இருவரும் காத லித்து ஜாதி மறுப்பு திரு மணம் செய்து கொண் டனர். விஜயலெட்சுமி யின் உறவினர்கள், சிலர் இணையரை கொலை செய்யும் நோக்கோடு தேடி வந்தனர். இதுகுறித்து விஜயலெட்சுமி தனது கணவருடன் காவல்துறை யில் புகார் அளித்தார். அந்தப் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே, விஜய லெட்சுமி_- சிவராமகிருஷ் ணன் இணையருக்கு பாது காப்பு அளித்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செய லாளர் சுகந்திக்கு தொடர்ந்து தொலைபேசி யில் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் 27.5.2015 அன்று காவல்துறை கூடுதல் இயக்குநர், மற்றும் கட லூர் மாவட்ட கண் காணிப்பாளர் ஆகியோரி டம் புகார் அளித்தார். சிவராமகிருஷ்ணனது உற வினர்களும் தொடர்ந்து மிரட்டப்பட்டனர்.
சிவராமகிருஷ்ணனது உறவினர் கடத்தி செல்லப் பட்டது குறித்து சிவ ராமகிருஷ்ணனது தாயார் புகார் கொடுத்திருந்தார். பின்னர் அவரை மிரட்டி புகாரை திரும்பப் பெறச் செய்தனர். சிவராமகிருஷ் ணனது தந்தை மாயவனை சிலர் தாக்கினர். நெய் வேலி காவல் நிலையத்தில் 20.8.2015 அன்று புகார் கொடுத்த பின்னரும் நடவடிக்கை மேற்கொள் ளப்படவில்லை. இத்த கைய கொலை மிரட்டல் தொடர் கதையாக இருந் தது.
இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், டிஜிபியிடம் புகார் அளித்தார். மேலும், மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல் வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக விஜயலெட் சுமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தில், நீதிபதி பி.என்.பிர காஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட லூரில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் சி.ராம கிருஷ்ணன், பிற்படுத்தப் பட்ட சமூக பெண் விஜய லெட்சுமியை திருமணம் செய்ததாகவும், பெண் ணின் வீட்டார் இருவரை யும் பிரிக்க முயல்வதாக வும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாது காப்பளிப்பது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை என சுட்டிக்காட் டினார். இந்த வழக்கில், ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையரை மிரட் டுபவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தர விட்டார். வழக்கு தொடர் பாக, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறைக் கண் காணிப்பாளருக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
-விடுதலை,3.9.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்


வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்
சென்னை, ஆக.9 சென்னை 13-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நியமித் துல்லா என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ஹரிகரராஜன் என்பவர் தன் வீட்டில் வாடகைக்கு இருப்பதா கவும், கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் முதல் 2008-ஆம் ஆண்டு ஜனவரி வரை வேண்டுமென்றே வாடகை கட்டணத்தை தராமல் இருந்து வருகிறார். எனவே, ஹரிகரராஜனை என் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தர விடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு, ஹரிகரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறுவது தவறு என்றும், வீட்டு வாடகை பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பியதை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.சசிகுமார் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
மனுதாரர் வீட்டில் எதிர்மனுதாரர் ஹரிகர ராஜன் வாடகைக்கு இருந்து வருகிறார். இதற் காக மாதம் ரூ.2,500 வாடகை கட்டணமும், 10 மாத வாடகைக் கட்டணமான ரூ.25 ஆயிரத்தை முன் தொகையாகவும் வீட்டின் உரிமையாளருக்கு, அவர் கொடுத்து வந்துள்ளார். தற்போது, 11 மாத வாடகை தரவில்லை என்று வீட்டின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால், 9 மாத வாடகை கொடுத்துள்ள தற்கான ஆதாரங்களை ஹரிகரராஜன் தாக்கல் செய்துள்ளார். 2 மாதம் வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்ப தால், வீட்டின் உரிமையா ளருக்கு அவர் 2 மாத வாடகை கொடுக்க வேண்டும்.
அதே நேரம், 1996-ஆம் ஆண்டு கே.நரசிம்மராவ் - டி.எஸ்.நசிமூதீன் அகமது ஆகியோரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வீட்டை வாடகைக்கு கொடுக்கும் உரிமை யாளர்கள், வாடகைதாரர் களிடம் இருந்து ஒரு மாத வாடகை கட்டணத்தைத் தான் முன்பணமாக பெற வேண்டும். ஒருவேளை அதிக தொகை வசூலித்து இருந்தால், அந்த கூடுதல் தொகையை திருப்பிக் கொடுக்கவேண்டும். அல்லது வாடகை கட்டணத்தில் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மனு தாரர் நியமியத்துல்லா, ரூ.25 ஆயிரம், அதாவது 10 மாத வாடகைத் தொகையை முன்பணமாக வாங்கி யுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரூ.2,500-அய் முன்பணமாக வைத்துக் கொண்டாலும், மனுதார ரிடம் கூடுதலாக ரூ.22,500 உள்ளது. அதில், 2 மாத வாடகை கட்டணத்தை, (ரூ.5 ஆயிரத்தை) கழித் தாலும் ரூ.17,500 வீட்டின் உரிமையாளரிடம் உள்ளது. எனவே, வீட்டின் உரிமை யாளரிடம் இவ்வளவு பெரிய  தொகை இருக்கும் போது, ஹரிகரராஜன் வேண்டுமென்றே வாடகை தொகையை கொடுக்காமல் உள்ளார் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அவரை வீட்டை விட்டு வெளி யேற்றக்கோரி தாக்கல் செய் யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
விடுதலை,9.8.15

வியாழன், 30 ஜூலை, 2015

மணமான பிறகும் மனைவியுடன் கட்டாய உடலுறவு குற்றமே! நீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜூலை 17_ டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மணமான பின் னர் மனைவியுடன் கட் டாய உறவு கொள்ளும் பாலியல் வன்செயலைக் குற்றமாக அறிவித்திட வேண்டும் என்று கோரப் பட்டது.
அவ்வழக்கில் மனைவி யிடம் பாலியல் வன்செய லில் ஈடுபடும் கணவன்மீது இந்திய தண்டனைச் சட் டத்தின்படி குற்றமாகக் கருதி தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது
தன்னைவிட வயதில் குறைவான மனைவியிடம் உறவு கொள்வதை பாலி யல் வன்செயலாகக் கருதிட முடியாது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாது ரையில் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜயந்த் நாத் ஆகியோர் கூறுகையில், இந்தப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையே இவ்வழக் கிலும் தொடருகிறது. ஆகவே, இவ்வழக்கினுள் நாங்கள் நுழைய விரும்ப வில்லை. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது போன்றே இப்போது இம் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப்பாலியல் வன் கொடுமைகுறித்த வழக்கைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு திருத்தப் பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375இன்கீழ் விதிவிலக்கினை அளிப்ப தற்கானத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ரிட் பவுண் டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுநல வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. அம்மனுவில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 15வயதுக்கு மேற்பட்ட மனைவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கணவனைக் காப்பதாகவே உள்ளது. இது அரசமைப் புக்கு விரோதமானது. அரசமைப்பின் பிரிவு 14இன்கீழ் மணமான ஒரு பெண்ணுக்கு உறுதி அளிக் கப்பட்டுள்ள சம உரிமை யினை மீறுவதாக இருக் கிறது. பாலியல் வன்செயல் களில் அரசமைப்பு பாகு பாடுகளைக் கொண்டுள் ளதாக இருக்கக் கூடாது. பாதிக்கப்படுபவர் மண மான மனைவி என்பதா லேயே கணவன் தப்பிக்கக் கூடாது.
மத்திய அரசின்சார்பில் வாதுரைத்த அரசு வழக் குரைஞர் சஞ்சய் ஜெயின் கூறும்போது, இதே போன்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் மண மானபின்னர் தம்பதியரில் கட்டாயமான உறவுகொள் வது என்கிற பாலியல் வன்செயல் குற்றமே என்று குறிப்பிட்ட ஜெ.எஸ். வர்மா குழுவின் பரிந் துரை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விசா ரணை மேற்கொள்வதற் காக வெர்மா குழு அமைக் கப்பட்டது.
மணமான பின்னர் பாலியல் வன்செயல் என்பதைக் குற்றம் என்று அமெரிக்க அய்க்கிய நாடு கள், அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா மற்றும் கனடா உள்-ளிட்ட பல்வேறு நாடு களில் பன்னாட்டளவில்  குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரின் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டது.

-விடுதலை,17.7.15

.

புதன், 29 ஜூலை, 2015

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப் பதை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப் பித்துள்ளது. இது தொடர் பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசு களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில்  கூறப்பட்டுள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந் தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது. அதனால் தாயின் அடை யாளம் கண்டிப்பாக தெரியும்.  சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம்.
இதுபோன்ற  கார ணங்களால் ஒரு குழந்தை யின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பி டப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலு வானவை, அடிப்படையா னவை. அதே நேரத்தில் மாறி வரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில்  பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப் பட வேண்டும்.
எந்தக் கார ணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது. இதை  அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந் தையின் பிறப்பு சான்றித ழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று  கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ் வாறு உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.15

சனி, 25 ஜூலை, 2015

33ஆயிரம் கோடி கடவுள்கள்- உச்ச நீதி மன்றம் கருத்து



-தினத்தந்தி,25.7.15

கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு



சென்னை, ஜூலை 24- கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை யிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.சந்தோஷ் யாதவ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக் குரைஞராக பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் விண்ணப்பம் செய்தேன். ஆனால் என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் கொடும்பாவி எரித்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணம் கூறி என் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்துவிட்டது. ஆகை யால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-இன் கீழ் மனுதாரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, தீ மற்றும் எரிபொருட் கள் மூலம் பொதுமக்களுக்கு காயத்தை உருவாக்குதல் அல்லது அபாயத்தை ஏற்படுத்தல் குற்றம் என்று கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை கவனத்துடன் பரிசீலிக்கும்போது, கொடும்பாவியை எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்பது தெளி வாகிறது. எனவே கொடும்பாவி எரிப்பதற்கு தண்டனை எதுவும் இல்லாததால், தீ மற்றும் எரிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு காயம், அபாயம் ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கொடும்பாவி எரிப்பது என்பது இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, கொடும்பாவி எரிப்பது என்பது சட்டப்படி குற்றம் இல்லை. அதனால், மனுதாரர் மீதான வழக்கின் அடிப்படையில் அவர் குற்றப் பின்னணி கொண்ட நபர் என்று கூற முடியாது. இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறோம். அவரது விண்ணப் பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள் ளனர்.
-விடுதலை,24.7.15