புதுடில்லி, ஜூலை 17_ டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மணமான பின் னர் மனைவியுடன் கட் டாய உறவு கொள்ளும் பாலியல் வன்செயலைக் குற்றமாக அறிவித்திட வேண்டும் என்று கோரப் பட்டது.
அவ்வழக்கில் மனைவி யிடம் பாலியல் வன்செய லில் ஈடுபடும் கணவன்மீது இந்திய தண்டனைச் சட் டத்தின்படி குற்றமாகக் கருதி தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது
தன்னைவிட வயதில் குறைவான மனைவியிடம் உறவு கொள்வதை பாலி யல் வன்செயலாகக் கருதிட முடியாது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாது ரையில் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜயந்த் நாத் ஆகியோர் கூறுகையில், இந்தப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையே இவ்வழக் கிலும் தொடருகிறது. ஆகவே, இவ்வழக்கினுள் நாங்கள் நுழைய விரும்ப வில்லை. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது போன்றே இப்போது இம் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப்பாலியல் வன் கொடுமைகுறித்த வழக்கைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு திருத்தப் பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375இன்கீழ் விதிவிலக்கினை அளிப்ப தற்கானத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ரிட் பவுண் டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுநல வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. அம்மனுவில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 15வயதுக்கு மேற்பட்ட மனைவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கணவனைக் காப்பதாகவே உள்ளது. இது அரசமைப் புக்கு விரோதமானது. அரசமைப்பின் பிரிவு 14இன்கீழ் மணமான ஒரு பெண்ணுக்கு உறுதி அளிக் கப்பட்டுள்ள சம உரிமை யினை மீறுவதாக இருக் கிறது. பாலியல் வன்செயல் களில் அரசமைப்பு பாகு பாடுகளைக் கொண்டுள் ளதாக இருக்கக் கூடாது. பாதிக்கப்படுபவர் மண மான மனைவி என்பதா லேயே கணவன் தப்பிக்கக் கூடாது.
மத்திய அரசின்சார்பில் வாதுரைத்த அரசு வழக் குரைஞர் சஞ்சய் ஜெயின் கூறும்போது, இதே போன்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் மண மானபின்னர் தம்பதியரில் கட்டாயமான உறவுகொள் வது என்கிற பாலியல் வன்செயல் குற்றமே என்று குறிப்பிட்ட ஜெ.எஸ். வர்மா குழுவின் பரிந் துரை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விசா ரணை மேற்கொள்வதற் காக வெர்மா குழு அமைக் கப்பட்டது.
மணமான பின்னர் பாலியல் வன்செயல் என்பதைக் குற்றம் என்று அமெரிக்க அய்க்கிய நாடு கள், அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா மற்றும் கனடா உள்-ளிட்ட பல்வேறு நாடு களில் பன்னாட்டளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரின் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டது.
-விடுதலை,17.7.15இந்தியாவில் மண மானபின்னர் தம்பதியரில் கட்டாயமான உறவுகொள் வது என்கிற பாலியல் வன்செயல் குற்றமே என்று குறிப்பிட்ட ஜெ.எஸ். வர்மா குழுவின் பரிந் துரை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விசா ரணை மேற்கொள்வதற் காக வெர்மா குழு அமைக் கப்பட்டது.
மணமான பின்னர் பாலியல் வன்செயல் என்பதைக் குற்றம் என்று அமெரிக்க அய்க்கிய நாடு கள், அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா மற்றும் கனடா உள்-ளிட்ட பல்வேறு நாடு களில் பன்னாட்டளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரின் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக