செவ்வாய், 15 மே, 2018

ஆயுதங்களின்றி அமைதியாக பொது இடத்தில் கூடுவது மக்களின் அடிப்படை உரிமை : டில்லி நீதிமன்றம் தீர்ப்பு



புதுடில்லி, மே 15 பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்திய எழுவரை வழக்கிலிருந்து விடுவித்த டெல்லி நீதிமன்றம், ஆயுதங் களின்றி  அமைதியான வழி யில் பொது இடத்தில் கூடுவது மக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ளது. ஊழ லுக்கு எதிரான இந்தியா அமைப்பைச்  சேர்ந்த 30 தன் னார்வலர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 144 தடை உத்தரவை மீறி கூடியதாகவும்,  கலைந்து செல்ல மறுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த எழுவர் மீது காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். இந்த  வழக்கிலிருந்து தங்களை விடு விக்கக் கோரி, அந்த எழுவரும் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட நாளன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட  விரோதமாக கூடியதாக கருத் தில் கொள்ள முடியாது. அவர்கள் எந்த  ஒரு குற்றத் தையும் செய்யவில்லை. அமை தியான முறையில் ஆர்ப்பாட் டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இது 144 தடை உத்தரவை மீறி யதாக எடுத்துக் கொள்ள முடி யாது. ஆயுதங்களின்றி அமை தியான முறையில் பொது இடத்தில்  கூடுவது மக்களின் அடிப்படை உரிமையாகும். எனவே, குற்றம் சாட்டப்பட்ட எழு வரையும் வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என உத்தர விட்டார்.


ஏற்கெனவே, நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர் பான வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம், அமைதி யான வழியில்  போராட்டம் நடத் துவதில் தவறில்லை. இது சட்டம்- - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதில் இருந்து மாறு பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்,  அமைதியான வழியில் போராட்டம் நடத் துவதற்கும், எதிர்ப்பை வெளிப் படுத்துவதற்கும் அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அது வன்முறையாக அல்லது  சட் டம்-- ஒழுங்கை கெடுக்கிற வகையில் அமையக் கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத் தக்கது.

-  விடுதலை நாளேடு,15.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக