‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் 24.12.2015 ஆம் தேதி WINDS OF CHANGE - All sides claim victory with SC verdict
என்ற தலைப்பில் வெளிவந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம்.
அனைத்துத் தரப்பினரும் தங்க ளுக்கான வெற்றி என்று கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழர் தலைவர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த உண்மையை உணர்த்தும் பேட்டி
அனைத்துத் தரப்பினரும் தங்க ளுக்கான வெற்றி என்று கொண்டாடி வரும் சூழ்நிலையில் தமிழர் தலைவர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த உண்மையை உணர்த்தும் பேட்டி
அனைத்து தரப்பினரும் அர்ச்சக ராகலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு இனிமேல் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முடியாது ஒரு தரப்பினர் கொக்கரிக்கின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு ஆகமம் கற்றறிந்த யாவரும் அர்ச்சகராக முடியும் என்று தெளிவாக் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு தானே முன்வந்து ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற 206 அர்ச்சகர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். பயிற்சி பெற்ற இந்த அர்ச்சகர்கள் அனை வரும் தகுதிபெற்ற மதவல்லுநர்களால் சரியான ஆகமவிதிகளைக் கடை பிடித்து பயிற்சி பெற்றவர்கள்.
சிலர் இந்தத் தீர்ப்பைப் பற்றி தவறான தகவல்களைப் மக்களிடையே பரப்பி வருகின்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணையான 23 மே 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சிவாச்சாரி யார்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்து. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசாணையை எவ்விதத்திலும் பாதிக்காது. தமிழ்நாடு நீண்டகாலமாக முற்போக்குக் கருத் திற்கு ஓர் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிற்து. மேலும் இந்தியாவில் நிலவும் ஜாதியக் கொடுமைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதும் ஒன்றாகும். இதன் மூலம் கோவில்களில் நிலவும் ஜாதி தீண்டாமை ஒழியும். அர்ச்சகராக பயிற்சிபெற்றவர்கள் நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கின் காரணமாக அர்ச்சகர் பணியைச் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். கோவில் களில் தீண்டாமை இன்றும் தொடர்கிறது.
கோவில்களில் முன்பு இருந்த தேவதாசி முறையை தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது முடிவிற்கு கொண்டு வந்தது. தந்தை பெரியார் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் ஜாதியைக் காட்டி ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்க தடைசெய்யப்பட்ட தெருக்களின் வழியாக அம் மக்களை அழைத்துச் சென்று அங்கு நிலவும் தீண்டாமையை ஒழித்தார். தேவதாசி மற்றும் வைக்கம் இரண்டு போராட்டத் திலும் பெரியார் முனைப்புடன் செயல்பட்டு அங்கு நிலவி வந்த ஜாதி தீண்டாமையை ஒழித்தார்.
ஒரு பிரிவைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையையே சீரழித்து வந்த தேவதாசி முறை, ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதை தடை செய்த கொடுமை, நாயும் பன்றியும் திரியும் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்று தடைவிதித்த அவலங்களை பெரியார் தன்னுடைய போராட்டங்களினால் முடிவிற்குக் கொண்டு வந்தார். இன்று எந்த கோவிலுக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்லலாம் இதை யாரும் தடை செய்ய முடியாது.
சட்டம் அனைவருக்கும் சமம்
ஆனால் இன்று வரை கோவில்களில் தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே அர்ச்சகராகும் வடிவத்தில் உள்ளது. சிலர் அர்ச்சகராக குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தகுதியுடையவர்கள் என்றும், குறிப்பிட்ட வகுப்பில் பிறந்த வர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும் அவர்களால் மட்டுமே சிலை யைத் தொட்டு பூசை செய்யவும் அந்த கர்ப்பக்கிரகத்திற்குள் நுழையவும் தகுதி யுடையவர்கள் என்றும் கூறுகின்றனர். பிற வகுப்பினரால் கோவில்களில் அர்ச்சகராக முடியாது என்றும் அப்படி அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் கோவில்களின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்றும் வதந் தியைப் பரப்பி விடுகின்றனர்.
இந்த நிலையை மாற்றி அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற எந்த வகுப்பினரும் கோவிலில் அர்ச்சகராகலாம் என்ற கருத்தை முன்வைத்தவர் தந்தை பெரி யார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது பெரியாரின் வாழ்நாள் லட்சியங் களில் ஒன்றாகும். இதனை மனதில் வைத்தே பெரியாரின் வழிவந்த தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி புதிய அரசாணையைப் பிறப்பித்த்து. இதன் மூலம் கோவில்களில் நிலவிவந்த தீண்டாமை அகற்றப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறையின் மூலம் நியமிக்கப்பட்ட தலைசிறந்த ஆகம வேத விற்பன்னர்களின் மூலம் 206 மாண வர்களுக்கு மந்திர உச்சாடன்ங்கள் மற்றும் ஆகம விதிகள் பயிற்றுவிக்கப்பட்டன.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் இவர்களின் அர்ச்சகர் பணி நியமனம் தடைப்பட்டது. அரசாணைக்கு எதிரான வழக்கில் அரசு மதச்சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளில் தலையிடுகிறது என்று கூறப்பட்டிருந்த்து. ஆனால் அரசியல் சாசனப்படி மதச்சுதந் திரம் என்பது அனைவருக்கும் சம்மானது என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்தரப்பு மனுதாரர்களின் வாதங்களை உச்சநீதி மன்றம் நிராகரித்தது; மேலும் தனது தீர்ப் பில் அரசியல் சாசனத்தில் கூறப்பட் டுள்ள உரிமைகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்றும் மதரீதி யிலோ இன ரீதியிலோ பாகுபாடு காண் பித்து சமூகத்தில் பிரிவினையை ஏற் படுத்தக் கூடாது என்றும் தீர்ப்பில் தெளி வாகக் கூறிவிட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து மாநில அரசு 2006 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசா ணையின்படி பயிற்சிபெற்ற அனை வரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும். தமிழக அரசின் இந்த ஆணை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இன்றுவரை கோவில் களில் நிலவும் தீண்டாமையை ஒழித்து தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடி யாக இருக்கவேண்டும்
-விடுதலை,28.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக