வியாழன், 29 அக்டோபர், 2015

சர்க்கரை நோய் காரணமாக வேலை வழங்க மறுக்கக் கூடாது


தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.28_  சர்க்கரை நோயை காரணம் காட்டி, வேலை வழங்க மறுத்த, தெற்கு ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை வேலை வழங்க பரிசீலிக்கும்படியும், ரயில் வே நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது.பு துக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்தவர், பாக்கிய ராஜ்; இவரது தந்தை, மணி என்பவர், ரயில்வேயில் பணியாற்றி வந்தார்; 2010 ஜனவரியில் இறந்தார். கருணை வேலை கேட்டு, பாக்கியராஜ் விண் ணப்பித்தார்.
'சர்க்கரை நோய் இருப்பதால், வேலைக்கு தகுதியில்லை' என, காரணம் கூறப் பட்டது.மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், பாக்கியராஜ், வழக்கு தொடுத்தார். கருணை வேலை வழங்க பரி சீலிக்கும்படி, தெற்கு ரயில் வேக்கு, தீர்ப்பாயம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தெற்கு ரயில்வே சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிகுமார், சொக்கலிங்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், 'சர்க்கரை நோய் காரணமாக, வேலை வழங்க மறுக்க கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு வழங்கும் படி, பாக்கியராஜ் கேட்டு வருகிறார். அதற்கு, 'சர்க் கரை நோய்' என, ஒரே காரணத்தை கூறி, நிரா கரித்து வருகின்றனர். சர்க்கரை நோய் உள்ளது என்பதற்காக, வேலை வழங்குவதை மறுக்கக் கூடாது. வேலை கேட்ட மனுதாரரை, அலைக் கழித்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்த ரவை, சரியான முறையில், ரயில்வே அதிகாரிகள் பரிசீ லிக்கவில்லை. அதனால், சட்ட ரீதியான தீர்வு காண, தீர்ப்பாயம், நீதிமன்றத்தை அணுகும்படி, தேவையில் லாமல் பாக்கியராஜ் தள்ளப்பட்டுள்ளார். எனவே, ரயில்வேயின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. 15 நாட்களுக்குள், பாக்கியராஜ்க்கு தகுந்த பணி வழங்க, ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து, நவ., 16இல் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது
-விடுதலை,28.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக