சனி, 18 ஏப்ரல், 2015

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் சொத்தில் பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஏப்.13
_ திரு மணம் ஆகாமல் சேர்ந்து வாழும் இருவரில் ஆண் துணைவரின் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று அதிரடி யான தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் நீண்ட நாள்களாக சேர்ந்து வாழ் பவர்களை இணையர் களாக அங்கீகரித்து தொடர்ச்சியான தீர்ப்பு களை உச்சநீதிமன்றம் வழங்கி வருகிறது. இந்த வரிசையில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், அமிதா வாரய் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை அளித் துள்ளது.
நீண்ட காலமாக திரு மணம் செய்து கொள்ளா மல் சேர்ந்து வாழ்பவர்கள் இணையர்களாக அங்கீ கரிக்கும் அதேநேரத்தில், அந்த உறவு சட்ட விரோ தமானது என குற்றம்சாட் டுபவர்கள் அதையும் நிரூபிக்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள் ளனர். திருமணம் ஆகாத இருவர் கள்ள உறவு வைத்துக் கொள்வதைவிட சேர்ந்து வாழ்வதை, தாங் கள் திருமணமாக அங் கீகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் நீண்ட காலமாக சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சம்பந்தப் பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் மெய்ப் பிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனடிப்படையில் மட்டுமே சொத்துரிமை குறித்த தாவாக்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளிக் கும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
முதல் மனைவியின் மரணத் திற்குப் பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் 20 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த ஒருவரின் உற வினர்கள், அந்தப் பெண் ணுக்கு சொத்தில் பங் களிப்பதை எதிர்த்து தாக் கல் ஆன வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
-விடுதலை,13.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக