ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற உரிமை


கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற 
உரிமை உண்டு

டில்லி நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, பிப்.9- கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று டில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
டில்லியை சேர்ந்தவர்கள் ஹரிஷ், ஸ்வேதா இணையர் (பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது.) இவர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இல்வாழ்வில் 3 குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் இணையர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு வரும் பிரிந்துவிட்டனர். இருப்பினும் ஒரே கட்டிடத்தில் அடுத்தடுத்த மாடியில் குடியிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹரிஷ் தனக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டில்லி நீதிமன்றம் ஒன்றில் ஸ்வேதா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிந்து சென்ற கண வனிடம் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது என கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் அவர் செசன்சு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை டில்லி கூடுதல் செசன்சு நீதிபதி புலஸ்த்ய பிரமச்சாலா விசாரித்தார்.
விசாரணை முடிவில் அவர் கீழ் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஸ்வேதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்ப தாவது:-
இந்த வழக்கை பொறுத்தமட்டில் வழக்குதாரர் (ஸ்வேதா), தனது வாழ்க் கையை நடத்தத் தேவையான வசதி படைத்தவர் அல்ல என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போன்று, எதிர்வழக்குதாரர் (ஹரிஷ்), ஒரு வசதியான வாழ்க்கை நடத்து வதற்கு தேவையான பண பலத்தை பெற்றிருக்கிறார் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய அம்சம். எனவே அவர் வழக்குதாரருக்கு ஜீவ னாம்சம் தர மறுக்கக்கூடாது.
அவர் வழக்குதாரருக்கு ஜீவ னாம்சம் தர விரும்பவில்லை என்பது அவரது வாதத்தில் தெளிவாக தெரிகிறது. இதுவே அவர் வழக்கு தாரருக்கு பொருளாதார ரீதியில் முறைகேட்டினை செய்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரமாக அமைகிறது.
வழக்குதாரருக்கும், எதிர் வழக்கு தாரருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குடும்ப உறவு இருந்துள்ளது. 3 குழந்தைகளும் உள்ளனர். ஒரே வீட்டில், வெவ்வேறு மாடியில் வசிக்கின்றனர். எனவே தற்போது அவர்களிடையே உறவு இருப்பதை காண்கிறேன்.
இப்போது அவர்கள் இடையே பிரச்சினை உள்ளதால், அந்த பெண்ணுக்கு வாழ்வாதார பிரச்சினை உள்ளது. அவருக்கு அதற்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு திரும்ப அனுப்பப் படுகிறது. அவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பாதுகாப்பு வழி முறைகளை, ஜீவனாம்ச தொகையை அந்த நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும். வழக்குதாரர் பாதுகாப்பு உத்தரவும், ஜீவனாம்ச உத்தரவும் பெற உரிமை படைத்தவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விடுதலை9.2.15,பக்கம்-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக