வியாழன், 25 பிப்ரவரி, 2021

பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!

பகுத்தறிவு : மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையேயாகும்!

திங்கள், 15 பிப்ரவரி, 2021

சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே: உச்சநீதிமன்றம்

• Viduthalai

புதுடில்லி, பிப். 13-  ஜாதி மறுப்பு  திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என  வழக்கு விவாதம் ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.  இதையொட்டி அவர்கள் இருவரும் தங்களை குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்.  இந்த வழக்கு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிதிகேஷ் ராய் ஆகியாரின் அமர்வு விசாரணை செய்தது.

இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், “நீதிமன்றங்கள் சமுதாய விதிமுறைக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவுகின்றன.  இளைஞர்கள் ஜாதி மறுப்பு திருமணத் தின் மூலம் இந்தியாவில் ஜாதி வேறுபாடு மற்றும் சமூக பதற்றங்களைப் பெருமளவில் குறைந்து வருகின்றார்கள்.  இதன் மூலம் சமூக பதற்றங்களைத் தணிக்க ஜாதி மறுப்பு திருமணங்கள் வழி வகைகள் செய்கின்றன.

ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே ஜாதியை நிர்மூலமாக்க கூடிய ஒரே தீர்வு ஆகும்.  இவ்வாறு இணைவதன் மூலமே உறவினர் மற்றும் உறவு உணர்வை உருவாக்க முடியும்.  இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பெரியோரிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் போது உதவிக்கு நீதிமன்றங் கள் உள்ளன.  வயது வந்த ஆண் பெண் திருமணம் செய்ய குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவை இல்லை“ எனத் தெரிவித்துள்ளது.

புதன், 6 ஜனவரி, 2021

வாரிசு அடிப்படையில் பணி மகனுக்கு மட்டுமா?

உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சண்டிகர்,டிச.20 திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படை யில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-_அரியானா மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநில காவல்துறை யில் தலைமைக்காவலராக பணி புரிந் தவர் கஷ்மீர் சிங். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பணியில் இருக் கும்போதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார்.  அவருக்கு  அமர்ஜித் என்ற பெயரில் ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தார். அவ ருக்கும் திருமணம் முடிந்து விட் டது. இருந்தாலும், அந்த பெண், தனது தந்தையின் வேலையை கருணை அடிப் படையில் தனக்கு ஒதுக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதை மாநில அரசும், காவல்துறை நிர்வாகமும்  திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத் தில் இடம் இல்லை என்று கூறி மறுத்து விட்டன.

இதையடுத்து, அமர்ஜித், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந் தைகளுடன் தாய்வழி வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு  கருணை அடிப் படையில் வேலை வழங்க உத்தர விட வேண் டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் விசாரித்தார். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில்,

பணியில் இருப்பவர் உயிரிழந் தால் அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு உதவுவதற் காகத் தான் கருணை அடிப் படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணம் ஆனால் மட்டும் பணி மறுக்கப் படுவது என்பது,  அரசியல் சாச னம் வழங்கியுள்ள பாலின சமத் துவத்துக்கு எதிரானது.

திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர் ஜித்துக்கு காவல் துறையில் வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திருமணத்தில் மதப் பார்வையா?

முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட் டுள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என அழைத்து அதற்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒரு பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.  சுமார் 22 வயதாகும் அந்தப் பெண்ணின் பெயர் முஸ்கன் ஜகான் என்பதாகும்.  அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட 27 வயதான அவர் கணவர்  ரஷீத் எங்கு என அறிவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.    பிங்கி என்ற இந்துப் பெண்ணை வற்புறுத்தி இஸ்லாம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.  முஸ்கன் ஜகான் ஒரு அரசு இல்லத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து தனது மாமியாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முஸ்கன் ஜகான் தனக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.,  அவருக்கு அரசு இல்லத்து ஊழியர் ஒருவர் ஊசி போட்டு கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக மாமியார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்த கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாக மாமியார் தெரிவித் துள்ளார்.   இந்த மதச்சார்பான உலகு தனது பேரக் குழந்தை பிறக்கும் முன்பே அதற்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சியே என்பதற்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் மதவாதப் போக்குடைய நிகழ்வுகள் பாசிசத்தின் பச்சையான பரிபாலனம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கான சாட்சியங்களும், அடையாளங்களுமாகும்.

18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயது நிறைந்த ஓர் ஆணும் திருமணம் செய்துகொள்ள சட்டப்படியான உரிமை உண்டு. அதற்கு மாறாக மதவாதக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுவது அசல் காட்டுமிராண்டித்தனமும், அத்துமீறலுமாகும். தக்க வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் மூன்றாவது மனிதன் குறுக்கிடுவது அநாகரிகம் என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இங்கு ஓர் அரசாங்கமே குறுக்கிடுவது மிகவும் கீழ் இறக்கமாகும். இந்து மதம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? முதலில் இந்து மதத்தில் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கும், உரிமைகளுக்குமான சட்டங்களை திட்டங்களை வகுக்கட்டும் பா.ஜ.க. ஆட்சி.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான இந்துப் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கொண்டு வரட்டும்.

இதுதான், இந்துக்கள் என்று மார்தட்டுவோரின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட உரிமை உடைய திருமண விடயத்தில் எல்லாம் தலையிடுவது பிற்போக்குத்தனமும், திசை திருப்பலுமே யாகும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, டிச.8 கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவை (தெற்கு) வட்டாட்சியர், பீளமேடு காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர் களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக 'சீல்' வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, சீலை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி களின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள் ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க தாக்கீது கூட கொடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரம், மனுதாரர் திருமணம் ஆகாத இணை களை விடுதி அறையில் தங்க வைப்பது ஒழுக்கக் கேடனாது என்று சமூக வலைதளங் களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா? என்று இந்த உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்று சட்டமோ, விதிகளோ இல்லை. அதுமட்டு மல்ல, திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்கிற போது, ஒரு அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்?. எனவே, ஒரு அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்ட விரோதமாகும். மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் சட்டவிரோத மானது. சீல் வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவில்லை. மேலும் விடுதி நடத் துவதற் கான படிவம் டி உரிமம் அந்த கட்ட டத்துக்கு இல்லை என்று அரசு தரப்பில் 3ஆ-வது குற்றச்சாட்டை கூறினாலும், அதுவெல் லாம் தீவிர குற்றச்சாட்டு இல்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு, சரி செய்துகொள்ளக்கூடிய பிரச்சினைதான். எனவே, விடுதியில் திரு மணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரு அறையில் தங்கினார்கள் என்பதும், மது பாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல. எனவே, விடுதி நிர்வாகம் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 8 12 19