டேராடூன், பிப். 11- இந்தியா சுதந்திரம் அடைந் தது முதலே விவாதிக் கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்ட மாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப் பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றா கவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவா கரத்து, சொத்துரிமை, குழந்தைக ளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர் பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது.
இதனிடையே, உத்த ராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீண்டும் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத் தப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுக ளுக்கு முன் உத்தராகண்ட் மாநி லத்தில் நடைபெற்ற முதல் அமைச் சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த தீர் மானிக்கப் பட்டது.
அதன் அடிப்படை யில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற மேனாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட் டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணி களை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதலமைச் சரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதா வுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதனையடுத்து, இந்த மசோ தாவை நிறைவேற் றுவதற்காக கடந்த 5 ஆம் தேதி உத்தராகண்ட் சிறப்பு சட்டமன்றக் கூட் டம் கூடியது. இதை யடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்த ராகண்ட் சட்டசபையில் முதலமைச் சர் புஷ்கர் சிங் தாமி 6-.2.-2024 அன்று தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில், உத்தரா கண்ட் சட்ட சபை வளாகப் பகுதி யில் 144 தடை உத்தரவு பிறப் பிக் கப்பட்டும், வளா கத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டும் இந்த பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய் யப் பட்டது. மேலும், மசோதா மீது உத்தராகண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வந்தது.
3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தராகண்ட் மாநி லத்தில் பொது சிவில் சட்ட மசோதா 7-2-2024 அன்று நிறை வேற்றியது. இதன் மூலம், நாட்டின் முதல் மாநிலமாக உத்தர காண்டில் பொது சிவில் சட்டம் நிறை வேற்றப் பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு உத்தராகண்ட் மாநிலத் தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மறு மணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உற வில் இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் பதிவு செய்து கொள்வது கட் டாயமாக்கப்பட்டு உள் ளது. அப்படி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் (அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோ தரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவு முறை யும் இடம்பெற்றுள்ளது.
இந்த உறவு முறையில் திருமணம் செய்வோர் மீது கடும் சட்ட நடவ டிக்கை மேற் கொள்ளப் படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக